தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையேயுள்ள போராட்டம் Clarksville, Indiana, USA 62-0531 11, இந்த அற்புதமான பாடல்களை கேட்பதும், சபையானது அவைகளை பாடுவதை கேட்பதும், பழைய நேரங்களைக் குறித்து சிந்திக்கிறதும், வெளியே நோக்கிப் பார்த்து நீண்ட காலமாக நான் காணாதிருக்கிற முகங்களை காண்கிறதும், சபைக்கு திரும்பி வருவதற்கு அது உண்மையான ஏதோ ஒரு காரியமாய் இருக்கிறது. நீங்கள் அவ்விதமாய் நினைக்கவில்லையா? [சபையார், “ ஆமென்” என்கிறார்கள். - ஆசி.) நல்லது. சற்று நேரத்திற்கு முன் நான் 2.ஒரு பழைய நண்பரை நான் பார்க்கவேயில்லை, அவருக்கு கையசைத்தேன் என்று நான் யூகிக்கிறேன், ஆனால் நான் அவரோடு தொடர்பு கொண்டது முதற்கொண்டு அநேக வருடங்களாகிவிட்டது. நான் ஒரு சிறு பையனாய் இருந்தபோது, ஜிம்பூல் (Jim Poole), ஒரு சிறுபையனாய் வழக்கமாக சுற்றிலும் ஓடுவான், இப்பொழுது சற்று முன்னர், அவன் என் வீட்டில் இருந்தான், நான் திருமணம் செய்து கொண்டதிலிருந்து, நாங்கள் ஒன்றாக இருந்தது முதற்கொண்டே, அவன் என்னுடைய இடத்தில் இருந்தது இதுதான் முதல்முறையாகும். திருமதி உட்ஸ் (Woods), இங்கே வந்து, நாங்கள் பிரசங்கிப்பதைக் கேட்க அவனை அழைத்திருந்தார்களாம். அவன், ''நல்லது, நான் வழக்கமாகவே எல்லா நேரத்திலும் அவர் பேசுவதை கேட்பதுண்டு“ என்றானாம். வழக்கமாக நாங்கள் ஒன்றாக சேர்ந்து நடக்கும்போதும், வேட்டை யாடுதல் போன்ற காரியங்களின் போதும், நாங்கள் அவன் அவன் அதிகமாக பேசமாட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமே. நான்தான் எல்லா நேரத்திலும் பேசுவேன். நான், “நீ எதையாவது கூற மாட்டாயா?” என்றேன். அவன், “நான் எப்படி சொல்ல முடியும்?” என்றான். நானே எல்லா நேரத்தையும் எடுத்துக் கொண்டவனாயிருந்தேன். எனவே, பார்க்கப்போனால் அந்தவிதமாய் என்னோடு இருந்து வருகிறான். அந்த விதமாக நேரத்தை எடுத்துக் கொண்டு, அதிகமாக உரைக்கப்பட்ட வார்த்தை பேசிக் கொண்டே போவதில் எங்கேயும் பலனில்லை. ஆனால் இன்றைக்கு, நான் சந்தோஷமாய் இருக்கிறேன், அதாவது நான் என்னுடைய பேசும் விதத்தை அந்நாட்கள் முதற்கொண்டே, கர்த்தரைக் குறித்து பேசுவதாக மாற்றிக் கொண்டேன். நான் அவரை நேசிக்கிறேன். 2நான் சகோதரன் ரடலிடம் (Ruddell) பேசிக்கொண்டிருந்தேன். அங்கே அவர் என்னிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தது (சகோதரன் டெம்பிள் (Temple) உமக்கு நன்றி.) நான் சகோதரன் ரடலிடம் பேசிக் கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்னர் அவர் வந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கண்ட மூன்று சொப்பனங்களை என்னிடம் கூறினார். நான் அவைகளில் இரண்டை மறவாமல் நினைவில் வைத்திருக்கிறேன். மற்றொன்றை நான் மறந்து விட்டேன். அது என்ன என்பதை நான் அவரிடம் கூற முயற்சித்துக் கொண்டிருந்தேன். என்னிடத்தில் ஒரு கண்ணாடி இருந்து, பிரதிபலிக்க முயற்சிப்பது போன்று, “நாம் ஒரு - ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதை போன்றே தேவன் எப்படி பிரதிபலிக்கிறார் என்பதை நீங்கள் பாருங்கள்'' எனக் கூறிக் கொண்டிருந்தேன். அவர் நிச்சயமாகவே நல்லவராக இருந்து வருகிறார். 7.சகோதரன் கிரீச் (Creech) இசைப்பேழையை (Piano) இசைத்துக் கொண்டிருப்பது உம்முடைய பெண்ணா ?, அப்படியா? அது (Patty) பேட்டிதானா என்று எனக்குத் தெரியவில்லை . [யாரோ ஒருவர், “ அவர்கள் அங்கே மேடையின் பின்னே உள்ளனர்'' என்கிறார். - ஆசி.] பேட்டி எங்கே? எப்படி என்னே சிறப்பு! பேட்டி. அவர்கள் அங்கே வசித்தபோது, நல்லது, சரியாக இப்பொழுது அவர்கள் அங்கேதான் வசிக்கிறார்கள். அப்பொழுது கிட்டத்தட்ட இங்கே உட்கார்ந்திருக்கின்ற இந்த சிறுவனை போன்றிருந்ததை நான் நினைவு கூருகிறேன். மேரி ஜோவுக்கு திருமணமாகிவிட்டது என நான் யூகிக்கிறேன். சற்று முன்பு ஜிம் அங்கே நின்று கொண்ருந்தார். அவருடைய பேரப்பிள்ளை அங்கே நின்று கொண்டிருந்தது. இதோ என்னுடைய பேரப்பிள்ளை உள்ளே வருகிறது. நான், ”நாம் நடக்கும் பிரம்பை வைத்துக்கொண்டு அமர வேண்டியதாய் இருக்கலாம். நீங்கள் அவ்வண்ணமாக நினைக்க வில்லையா?“ என்றேன். [சகோதரன் பிரான்ஹாமும் சபையோரும் சிரிக்கின்றனர்.] ஆனால் ஆற்றிற்கு அக்கரையில் அதுதான் மகத்தான இடம். நாம் அந்த இடத்தைத்தான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கு வயதாகிக்கொண்டே போகின்றபடியால் நான் அதைக் குறித்து சிந்திக்கிறேன் என்பது அல்ல. நான் சிறியவனாய், சிறுபையனாய் இருந்தபோதே, வாலிப மனித தொடக்க ஜீவியத்திலேயே அதைக் குறித்துப் பேசத் துவங்கினேன். அங்கு எங்கோ ஒரு தேசம் உண்டு என்பதை நான் நம்புகிறேன். நாம் அந்த வழியாய்தான் போய்க் கொண்டிருக்கிறோம். நான் அதைக் குறித்து மிகவும் சந்தோஷப் படுகிறேன். 3விசேஷமாக நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, ஏதோ காரியத்தைக் குறிக்கும்படியாக நான்-நான் அதிகமாக கூறுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதிகமான நேரங்களில் நான் இங்கே வேத வார்த்தை களோடு கூட ஏதாவது காரியத்தையும் எடுத்துக் கொள்ளுகிறேன். ஆனால் சில நேரங்களில் கர்த்தர் எனக்கு சில காரியங்களை கொடுக்கிறார். அது உண்மையிலேயே நன்மையான ஏதோ ஒன்றை நான் பற்றிப் பிடிக்கும்பொழுது இது எனக்கு சற்று மரித்துப்போகும்படியான இதமான உணர்ச்சியை கிளறிவிடுகிறது. நான் அப்படியே அது எனக்கு மிகுந்த நன்மையைச் செய்கிறதே என்பேன். நாமெல்லாருமே அந்தவிதமாக உணருகிறோம். சகோதரன் நெவிலையும், உங்களையும், இங்குள்ள சகோதரர்களையும், சகோதரன் ஜுனியர் மற்றும் உங்கள் எல்லோரையும் நான் அறிவேன். கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற ஏதோ ஒரு காரியத்தை நீங்கள் பெறும்போது, நீங்களும் அதே விதமாகத்தான் உணருகிறீர்கள். அது அவ்வளவு தத்ரூபமாய் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அன்றொரு இரவு நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், அது ஜெப கூடாரமாய் இருந்தது என நான் நினைக்கிறேன். நான் மனமாற்ற மடைந்தது முதற்கொண்டு நான் நினைத்திருக்கிற எந்த காரியத்தைக் காட்டிலும் எனக்கு செய்யப்பட்டிருக்கிற மிக நன்மையான ஏதோ காரியத்தை நான் பேசினேன். அது அது சரியென்றால், நான் அதை திருப்பிக் கூறலாம். நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும் என நான் அறிவேன், ஆனால் அது இரட்சிப்பின் அத்தாட்சியிருந்தது. புரிகின்றதா? நான் அது எனக்கு கருத்தினில் தோன்றினது. எனவே நான் -நான் அதைக் கூறினேன். நான் வீட்டிற்குச் சென்று, என்னுடைய அறையில் அதைக் குறித்து நான் சிந்தித்தேன். நான் மேலும் கீழுமாய் தரையில் நடந்தேன். அதைக் குறித்து அங்கே சற்று சிந்திப்பதற்கு நான்தானே ஒரு நல்ல நேரத்தை சற்று உடையவனாயிருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். 4இதோ இதுதான் அது. ஒரு நிமிடம் நான் அதை அப்படியே உங்களிடம் கூறுகிறேன். “நாம் சகலத்தையும் உடையவர்களாயிருக் கிறோம். ஒவ்வொரு காரியமும் நம்முடையதாயிருக்கிறது'' என்பதை குறித்து நான் பேசிக்கொண்டிருந்தேன். நாம் பித்துப் பிடித்தக் கூட்டம் என்று அவர்கள் கூறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அதே சமயத்தில், பார்க்கப் போனால், அவை யாவும் நமக்கு சொந்தமான உரைக்கப்பட்ட வார்த்தை தாயிருக்கிறது. பார்த்தீர்களா? புரிகின்றதா? நாம் ஒருகால் அந்தக் காரணத்தினால் நாம் சற்று விநோதமாய் நடந்து கொள்கிறோம். நீங்கள் பாருங்கள், நாம் சகலத்திற்கும் சுதந்திரவாளிகளாய் இருக்கிறோம். புரிகின்றதா? நாம் அன்பு, சந்தோஷம், தைரியத்தை உடையவர்களாயிருக் கிறோம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நாம் விசுவாசம், நீடிய பொறுமை, தயவு, பொறுமை, சாந்தத்தை உடையவர்களா யிருக்கிறோம். நீங்கள் எந்தவிதமான பணத்தினாலும் அதை வாங்க முடியாது. கவலைப்பட வேண்டியதில்லை, அங்கேயோ போய் எனக்கு இருபத்தைந்து பைசா பெறுமானமுள்ள பொறுமையை வாங்கி வாருங்கள். உங்களுக்குப் புரிகின்றதா? அதைச் செய்யவே முடியாது. ஆனால் அதே சமயத்தில் தேவன் அதை நமக்குக் கொடுக்கிறார். நாம் அதை சுதந்தரித்துக் கொள்கிறோம். அது நம்முடைய சுதந்தரவீதமா யிருக்கிறது. அப்படியானால் எங்களுக்குக் கொஞ்சம் விசுவாசத்தை வாங்கி வாருங்கள். நாம் கொஞ்சம் விசுவாசத்திற்காக, நம்மிடம் உள்ள யாவற்றையும் கொடுக்க சித்தமுள்ளவர்களாயிருக்கிறோம். உங்களுக்குப் புரிகின்றதா? ஆனால் அது நமக்கு கொடுக்கிற ஒவ்வொன்றும் இலவச மாய் கர்த்தரிடத்திலிருந்து வருகிறதாய் இருக்கின்றது. அது அற்புதமாயில்லையா? 5பின்னர் நான் இதைக் குறித்து சிந்தித்தேன்; இஸ்ரவேலர், ஒரு சமயம் அடிமையாயும், எகிப்தில் தேவனுடைய பிள்ளைகளாய் அடிமைத் தனத்தில் இருந்தார்கள். இப்பொழுது, இன்றைக்கு நாம் இருப்பது போன்று, அது தேவனுடைய சுதந்திரமாய் இருந்தது. அப்பொழுது அவர்கள் சாப்பிடுவதற்கு அநேகமாக ஏதாவது ஒன்றை, ஒரு குவியல் வார்க்கப்பட்ட அப்பத்தைக் கொண்டு வந்து அதை தூக்கியெறிய, அவர்கள் எதையாவது பற்றிக் கொள்வார்கள். ஒரு நாயையோ அல்லது வேறு ஏதாவது ஒன்றையோ கொல்வது போன்று ஒருவரைக் கொன்று போடுவார்கள். அவர்கள் அங்கிருந்து விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் அங்கே நானூறு வருடங்களாக இருந்து வந்தனர். பின்னர் ஒருநாள் வனாந்தரத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசி வந்தான். அவனை ஒரு - ஒரு ஒளி பின்தொடர்ந்தது. அவன் அவர்களிடத்தில், “பாலும் தேனும் ஓடுகிற ஒரு தேசம் உண்டு என்றும், தேவன் அதை அவர்களுக்கு கொடுத்தார்” என்றும் கூறினான். அவன் போலியான ஒருவன் அல்ல, கள்ளத்தனமான ஒருவன் அல்ல என்பதை அவர்களுக்குக் காட்டும்படி, அவன் அடையாளங்களையும், அற்புதங்களை யும் செய்தான். ஆனால் அவனோ அந்த ஜனங்களை அந்த தேசத்திற்கு கொண்டு போகும்படி உண்மையிலேயே தேவனுடைய கட்டளையைப் பெற்றவனாய் இருந்தான். தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையேயுள்ள போராட்டம் 6இப்பொழுது அதை சிந்தித்துப் பாருங்கள். அவர்களுடைய பிள்ளைகளை, ஆளோட்டிகள் வந்து ஒருவனைக் கொன்று போட விரும்பியிருந்தாலும், அதெல்லாம் முழுவதும் சரியென்றிருந்தது. எதையுமே சொல்ல முடியாதிருந்தது . போய் உன்னுடைய வாலிபமான மகளை அங்கே ஏதோ பாழாக்குவதற்காக கொண்டுபோ என்றால், ஏன், ஒன்றுமே கூறமுடியாதவர்களாய் இருந்தனர். அப்படியே அங்கே நின்று அவளை அனுப்பிவிட வேண்டியிருந்தது. புரிகின்றதா? உங்களுடைய பையன், சரியான விதமாய் சரியாய் வேலை செய்யவில்லை . எனவே அதற்காக அவர்கள் அவனைக் கொன்று போட விரும்புகிறார்கள். அவனை கொல்லுங்கள். அதெல்லாம் முற்றிலும் சரி என்று ஒன்றையுமே கூறமுடியாதவர்களாய் இருந்தனர். ஆனால் இப்பொழுது அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் பாலும் தேனும் ஓடுகிற ஒரு தேசத்திற்குள்ளாக போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு கூறப்பட்டது. அவர்களுடைய சொந்த விவசாயப் பண்ணையை அவர்கள் உடையவர்களாக இருக்க முடியும். அவர்கள் தங்களுடைய சொந்த பயிர் வகைகளை விளைவிக்க முடியும். அவர்களுடைய சொந்த பிள்ளைகளை போஷிக்கலாம், அவர்களை பள்ளிகளுக்கு அனுப்பலாம், சமாதானமாய் ஜீவிக்கலாம். மகத்தான தேசம், அது அவர்களுக்கு சொந்தமானது. அது ஒரு மகத்தான வாக்குத் தத்தம் என்று உங்களுக்குத் தெரியும். அது எதைக் குறித்துக் காட்டினது என்பதைக் குறித்து சிந்தியுங்கள். 7நல்லது, இந்த தீர்க்கதரிசி உண்மையாகவே தேவனால் அனுப்பப் பட்ட ஒரு மனிதன் என்று அவர்கள் காணும்படியாக, அவன் அநேக அற்புதங்களை அவர்கள் மத்தியில் செய்தான். நல்லது, அவர்கள் வெளியே புறப்பட்டு வனாந்திரத்திற்குள்ளாக சென்றனர். அவர்கள் காதேஸ்பர்னேயாவுக்கு சென்றபோது, இப்பொழுது, காதேஸ்பர்னேயா ஒரு நியாயத்தீர்ப்பின் ஸ்தலமாக இருக்கிறது. அந்த நாளிலே அது உலகத்திற்கு அப்படிப்பட்டதாய் இருந்தது. காதேஸ்பர்னேயா, அது ஒரு மகத்தான பெரிய ஊற்றும், அநேக சிறிய ஊற்றுகளும், இந்த ஊற்றிற்கு சிறிய உபந்திகள் உள்ளதான ஒரு ஸ்தலமாயிருந்தது. நல்லது, அவர்கள் மத்தியில் யோசுவா என்று பெயரிடப்பட்ட ஒரு மகத்தான மாவீரன், ஒரு மனிதன் இருந்தான். யோசுவா என்பது யேகோவா இரட்சகர் என்பதாகும். யோசுவா அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்றான். இப்பொழுது நினைவிருக்கட்டும், அவர்களில் ஒருவரும் அங்கு சென்றதேயில்லை. அந்த தேசம் உண்மையாகவே அங்கேயிருக்கிறதா அல்லது இல்லையா என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. தேவன் அவர்களுக்காக ஒரு இடத்தை வைத்திருந்தார் என்று அவர்களுக்கு கூறப்பட்டதினால், விசுவாசத்தினாலே அவர்கள் சென்றனர். அவர்கள் அந்த இடத்திற்கு விசுவாசத்தினாலே போய்க் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அதை சற்று சிந்தித்துப் பாருங்கள். எகிப்தை விட்டு, தேவன் அவர்களை வெளியே கொண்டு வந்தார். இப்பொழுது அவர்கள் அந்த தேசத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அந்த தேசத்தை நெருங்கிச் சென்றபோது, யோசுவா அந்த தேசத்திற்குள்ளாகச் சென்று, அத்தாட்சியை வெளியே கொண்டு வருகிறான். யோர்தானைக் கடந்து பாலஸ்தீனத்திற்குள்ளாகச் சென்று இரண்டு மனிதர்கள் சுமக்க வேண்டிய பெரிய திராட்சைக்குலையை அத்தாட்சியாய் கொண்டு வந்தான். அவர்களால் அந்த திராட்சைப் பழங்களை புசிக்க முடிந்தது. அவன் “அந்த தேசமானது அப்படியே தேவன் கூறின வண்ணமாகவே இருக்கிறது'' என்றான். அது என்ன ஒரு சுதந்திரமாய் இருந்தது. இப்பொழுது, அவர்களால் எங்கே போக முடிந்தது. அவர்கள் தங்களுடைய சொந்த விவசாயப் பண்ணையை உடையவர்களாய் இருக்கலாம், அவர்களுடைய பிள்ளைகளை வளர்க்கலாம். மேலும் தேவனுடைய ஆசீர்வாதங்களை தங்கள் மேல் உடையவர்களாய் இருக்கலாம். சமாதானத்தில் ஜீவிக்கலாம். அங்கே யாருமே அடிமையில்லை . எப்படியோ ஆனால், முடிவிலே அவர்கள் நீண்ட காலமாய் நல்ல ஜீவியம் ஜீவித்த பின்னர், அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தும், முடிவிலே அவர்கள் மரிக்க வேண்டியதாயிருந்தது. வருடா வருடம் தொடர்ந்து தங்களுடைய விளைச்சலை உற்பத்தி செய்துகொண்டு, அவர்களுடைய குடும்பங்களை உடையவர்களாயும், நல்ல சமாதான வாழ்க்கையை உடையவர்களாயு மிருந்து பின்னர் மரித்தனர். 8பின்னர் ஒருநாள், எல்லாவற்றிலும் மகத்தான மாவீரரான, தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கீழே வந்தார். அவர், “ஒரு தேசம் உண்டு. அங்கே ஒரு மனிதனும் மரிப்பதில்லை . என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லா திருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; நான் போய் ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி திரும்பி வந்து உங்களை ஏற்றுக் கொள்வேன்'' என்றார். இப்பொழுது, மரணமாகிய யோர்தான் நதிக்கு அக்கரையிலுள்ள ஒரு தேசத்தைக் குறித்துப் பேசிக்கொண்டு வந்த தீர்க்கதரிசியாய் அவர் இருந்தார். அங்கே, அதாவது நீங்கள் உங்களுக்குச் சொந்தமான விவசாயப்பண்ணையும், நீங்கள் உங்களுக்கு சொந்தமான குடும்பங்களையும் உடையவர்களாயிருந்து, நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும்கூட, அதே சமயத்தில் நீங்கள் மரிக்க வேண்டியதாயிருக்கிறது; ஆனால் அப்படியிருந்தாலும், அக்கரையில் ஒரு தேசம் உண்டு. அங்கே நீங்கள் மரிப்பதில்லை, பின்னர் அவர் மீண்டுமாய் நியாயத்தீர்ப்பின் ஸ்தலமான கல்வாரிக்கு, காதேஸ்பர்னேயாவுக்கு வந்தார். மனிதன் மரிப்பதற்கு காரணமாயிருந்த பாவத்தின் தண்டனை, அங்கே, அவருடைய காதேஸ்பர்னேயாவில் அது நியாயத்தீர்ப்பில் சந்திக்கப்பட்டது. பாவத்தின் தண்டனையை அவர் செலுத்தி, மரித்தார். யோர்தானை, மரணமாகிய யோர்தானைக் கடந்தார். மூன்றாம் நாளில் எழும்பி, திரும்பி வந்தார். “என்னைத் தொட்டுப் பாருங்கள், ஒரு ஆவிக்கு என்னைப் போன்று மாம்சமும், எலும்புகளும் இராதே. புசிக்கிறதற்கு ஏதாகிலும் உண்டா?” என்றார். அவர் - அவர் அப்பமும் மீனும் புசித்தார். அவர் அவர்களோடு நாற்பது நாட்கள் இருந்து, அந்த தேசம் அங்கே உண்டு என்று யோசுவா நிரூபித்தது போன்று நிரூபித்துக் கொண்டிருந்தார். அவர் அங்குள்ள தேசத்தின் அத்தாட்சியாய் உள்ளார். இப்பொழுது, அவர், “இதை விசுவாசிக்கும் அனைவரும், நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்,” என்றார். 9பின்னர், பெந்தேகோஸ்தே நாளன்று, அவர் இந்த ஸ்தலத்தின் அச்சாரத்தை, நிச்சயத்தை, இந்த தேசமென்பது உண்மைதான் என்பதன் அத்தாட்சியை, உறுதியை திரும்ப அனுப்பினார். யோசுவா அத்தாட்சியை திரும்ப கொண்டு வந்தது போலவே இயேசுவானவர் பரிசுத்த ஆவியின் அத்தாட்சியைக் கொண்டு வந்தார். இப்பொழுது நாம் மரித்தவர்கள் என்றே நம்மை எண்ணிக் கொள்கிறோம். நாம் ஞானஸ்நானத்தில் அவருடைய மரணத்திற்குள்ளாக அவரோடு அடக்கம் பண்ணப்படுகிறோம். உயிர்த்தெழுதலில் நாம் அவரோடு எழும்புகிறோம். இப்பொழுது நாம் அதற்குள்ளாக ஏற்கனவே இருக்கிறோம். நாம் இருக்கப்போகிறோம் என்பதல்ல. நாம் ஏற்கனவே எழுந்துவிட்டோம். நாம் இப்பொழுது எழும்பியிருக்கிறோம். நாம் எழும்புவோம் என்றல்ல, நாம் இப்பொழுதே, இன்றிரவே, (எப்படி?) கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே உட்கார்ந்திருக்கிறோம், வேறு ஏதோ ஒரு நேரத்தில், நாம் இருப்போம் என்றல்ல, இப்பொழுதே நாம் இருக்கிறோம். சபையானது அவர்கள் யாராயிருக்கிறார்கள் என்பதை உணருகிறதில்லை புரிகின்றதா? நாம் இப்பொழுதே, இந்த நிமிடத்திலேயே (எப்படி?) கிறிஸ்து இயேசுவுக்குள், ஏற்கனவே மரித்தோரிலிருந்து எழுந்த அவருக்குள்ளாக ஒன்று சேர்ந்து கூடி வந்திருக்கிறோம். நம்முடைய ஆத்துமாக்கள் அழிவில்லாததாய் உள்ளது. 10இப்பொழுது நாம் ஒரு நிமிடம் சற்று நிறுத்துவோம். இங்கே ஒரு சமயத்தில், நாம் வழக்கமாக, பொய்யுரைத்தல், திருடுதல், ஏமாற்றுதல், சண்டையிடுதல், சபித்தல், மற்றெல்லாக் காரியங்களையும் செய்து வந்தோம். பின்னர் நாம் ஞானஸ்நானத்தில் அவரோடு கூட அடக்கம் பண்ணப்பட்டு, அவரோடு கூட எழுப்பப்பட்டோம். எனவே நாம் வரும்போது “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது அத்தாட்சியைப் பெறுவீர்கள்” என்பதே இந்த நல்ல தேசத்தின் அத்தாட்சியாய் இருக்கிறது. அப்பொழுது நம்மேல் வருகின்றதான அந்த ஆவியானது, நம்மை பொய் சொல்லுதல், திருடுதல், முன்னர் பார்த்த அந்த எல்லாக் காரியங்களிலிருந்தும் நம்மை மேலே கொண்டு வருகிறது. இப்பொழுது நாம் அவேராடு கூட எழுப்பப்பட்டு, அவரோடு கூட இங்கே உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய ஆத்துமாக்கள் முற்றிலுமாக ஆயத்தமாயிருக்கின்றன. 11ஏன், வில்லியம் பிரான்ஹாம் ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னரே மரித்துப் போனார். நான் ஒரு புதிய சிருஷ்டியாக ஆனேன். அந்த பழைய மனிதன் மரித்துப் போனான். நான் அங்கே திரும்பிப் பார்க்கிறேன், என்னுடைய நண்பனோடு இந்த பிற்பகல் பேசிக் கொண்டிருந்தேன். அவன் “நாம் இன்னின்ன - இன்னின்ன காரியத்தை வழக்கமாக செய்து கொண்டிருப்போமே, உனக்கு நினைவிருக்கிறதா? நாம் குறட்டைவிட்டுக் கொண்டிருந்த அந்தப் பையனை அன்றிரவு தண்ணீருக்குள் வீசினோமே, நினைவிருக்கிறதா?” என்றான். நான் “ஆம், நான் அதை மீண்டும் செய்யமாட்டேன்” என்றேன். புரிகின்றதா? நாம் அந்த ஊசியை அந்த தவளையில் சொருகப் போனபோது, அது இவ்விதமாய், அப்படியே “குர்” என்று சத்தமிட்ட அந்த நேரம் நினைவிருக் கின்றதா?“ என்றான். ”ஆம்“. நான், ”அது நினைவிருக்கிறது“ என்றேன். நாம் இந்த எல்லாக் காரியங்களையும் செய்தோமே! நான், “உங்களுக்குத் தெரியும், அப்பொழுது நான் - அப்பொழுது நான் அப்பொழுது நான் மரித்தவனாயிருந்தேன். புரிகின்றதா? ஆனால் இப்பொழுதோ நான் ஜீவனோடு இருக்கின்றேன்” என்று எண்ணினேன். புரிகின்றதா? இப்பொழுது நான் அதை செய்கிறதில்லை. நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது நம்முடைய இரட்சிப்பின் அச்சாரத்தை, முன் பணத்தை நாம் பெற்றிருக்கிறோம். அந்தக் காரியத்தின் கிரயம் பத்தாயிரம் டாலர்கள் என்றால், அவர் முதல் ஆயிரம் டாலர்களை நமக்குக் கொடுத்துள்ளார். புரிகின்றதா? இதுதான் நம்முடைய அச்சாரத்தின் பத்தில் முதல் ஒன்று, அதாவது நாம் ஏற்கனவே பாவத்தினின்றும், அவிசுவாசத்தினின்றும் கிறிஸ்துவோடு கூட உயிர்த்தெழுதலுக்குள் எழுப்பப்பட்டிருக்கிறோம். யோசுவா திரும்ப கொண்டு வந்தது போன்று, இப்பொழுது, நாம் அந்த அத்தாட்சியோடு உன்னதங்களில் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். தேசம் அங்கேயிருக்கிறது. நாம் நம்முடைய பாதையில் இருக்கிறோம். இனி மரணமே கிடையாது. மரிக்க முடியாது. 12அவர்கள் சில நேரத்தில் உங்களிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம் மரித்துப் போனார்'' என்று கூறுவார்கள். நீங்கள் அதை நம்பாதீர்கள். ஏன்? சகோதரன் பிரான்ஹாம் மரிக்கமுடியாது. புரிகின்றதா? அது உண்மை . நான் மரிக்கமுடியாது; மரிக்கப்பட்டாயிற்று. இப்பொழுது அதிக காலத்திற்கு முன்பே, சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே, இல்லை முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்பே வில்லியம் பிரான்ஹாம் மரித்து விட்டார். நான் சுமார் முப்பத்திரண்டு வருடங்களாக பிரசங்கித்துக் கொண்டு வருகிறேன். எனவே அதற்கு முன்பே அவர் மரித்து விட்டார். ஆனால் இப்பொழுதோ , இது ஒரு புது சிருஷ்டியாய் இருக்கிறது. ரசல் கிரீச் (Russell Creech) ஒரு புதிய சிருஷ்டி. அங்கே காரிடானுக்கு (Corydon) கீழே சுற்றி ஓடிக்கொண்டிருந்த அந்த சிறுபையன் இவரல்ல. வழக்கமாக சிறுபையனாக இருந்த ஆர்மன் நெவில் (Orman Neville) அல்ல. வழக்கமாக சிறுபையனாய் இருந்த அந்த சகோ. ரடல் (Ruddle) அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். சகோதரன் ஜேக்சனும் (Jackson) மற்ற இவர்கள் எல்லாருமே, அவர்கள் எல்லாருமே அந்த சிறுவர்களாய் இல்லை. சகோதர, சகோதரிகளாகிய நீங்களெல்லாரும் நாம் வழக்கமாக இருந்த அந்த ஜனங்களாய் இருக்கவில்லை . நாம் - நாம் புதிய சிருஷ்டிகளாய், புதிய சிருஷ்டிப்புகளாய் இருக்கிறோம். நீங்கள் அதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. நாம் ஏற்கனவே இங்கே மேலே இருக்கிறோம். நாம் எங்கேயிருந்தோம் என்று பாருங்கள். இப்பொழுது நாம் எங்கே இருக்கிறோம் என்று பாருங்கள். “கிறிஸ்து இயேசுவுக்குள் புதிய சிருஷ்டிப்புகள்” ஓ, என்னே! இப்பொழுது ரசல் (Russell) அவர்களை உங்களுக்கு தெரியும். நான் அந்த பாட்டையே பெரும்பாலும் பாடிட வேண்டும் போன்று உணருகிறேன். அதை நான் கேட்கும் ஒவ்வொரு சமயத்திலும் நான் உம்மையும் சகோதரி கிரீச்சையுமே நினைக்கிறேன்.நான் பறந்து செல்வேன், மகிமை. காலையில் நான் பறந்து செல்வேன். ஆம், ஐயா! நாம் அதை வழக்கமாக பாடுவோமே நினைவிருக்கிறதா? நான் மரிக்கும்போது, அல்லேலுயா! விரைவில் நான் பறந்து செல்வேன். 13நான் அதை விரும்புகிறேன். நாம் வயதானவர்களாக ஆக துவங்கும்போது தலைமுடி நரையாக மாறிக் கொண்டும், தோள்பட்டைகள் தொங்கிக் கொண்டும், எப்போதும் இருந்ததைக் காட்டிலும் அது நம்மை அதிக எண்ணமுள்ளவர்களாகவும் ஆக்குகிறது. உங்களுக்குப் புரிகின்றதா? ஏனென்றால், ஒரு பிள்ளை முன்னே காணப்படுகிறது. அவன் யாரை மணந்து கொள்ளப்போகிறான்? அவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு எப்படி கல்வி புகட்டப் போகிறான்? எனவே அவை யாவும் முடிவுறும்பொழுது, அப்பொழுது அவைகளையெல்லாம் செய்து முடித்த பின்பே, நீங்கள் பாருங்கள், அப்பொழுது நீங்கள் சூரிய அஸ்தமனத்தை சந்திக்கிறீர்கள். ஆனால் சகோதரனே சற்று சிந்தியுங்கள். ஆனால் நம்மிடத்தில் உள்ளதைத் தவிர அங்கே ஒன்றுமேயில்லை. நாம் அன்பைப் பெற்றுள்ளோம். நாம் சந்தோஷத்தைப் பெற்றுள்ளோம். நாம் சமாதானத்தைப் பெற்றுள்ளோம். நாம் ஜீவனைப் பெற்றுள்ளோம். நாம் பெற்றுள்ள ....... நாம் மரணத்தை சுதந்தரித்தவர்களாய் இருக்கிறோம். அது உண்மை . நாம் சுதந்தரிக்கிறோம் என்றே வேதம் கூறியுள்ளது. நாம் மரணத்தை சுதந்தரிக்கிறோம். அது நமக்கு சொந்தமானது. நாம் அதற்கு சொந்தமானவர்கள் அல்ல. அது நமக்குச் சொந்தமானது. “நீங்கள் மரணத்தோடு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்பதைக் கூறுங்கள். பவுல் கூறினது போன்றே, அது வந்து கதவைத் தட்டிக் கொண்டிருந்தபொழுது, “ஆற்றினூடாக கடந்து போகும்படி எனக்குத் துணையாக நீ வந்திருக்கிறாயா?” என்றானாம். எழுத்தாளன் ஒருமுறை “தேவன் மரணத்தை ஒரு குதிரை வண்டியில் இணைத்து விட்டார். அது செய்யக்கூடிய ஒரே ஒரு காரியம், உங்களை தேவனுடைய சமூகத்திற்குள் இழுப்பதேயாகும்” என்றான். அவ்வளவுதான். மரிக்கமுடியாது. அவர்கள் மரணத்தை ஒரு குதிரை வண்டியோடு இணைத்துவிட்டனர். அது செய்யக்கூடிய ஒரே காரியம், உங்களை நேராக தேவனுடைய சமூகத்திற்குள் இழுக்கிறதாய் உள்ளது. அது வெறுமனே உங்களை ஆற்றுக்கு அக்கரைக்கு இழுக்கக்கூடிய, ஒரு அதிர்ஷ்டம் விளைவிக்கக்கூடிய செயலாய் (Mascot) உள்ளது. அவ்விதமாகவே அது உள்ளது. எனவே இனிமேல் நம்மை ஒன்றுமே தொல்லைப்படுத்த முடியாது. பவுல் சொன்னான், மரணமானது உருண்டு கொண்டு இதனூடாக வந்தபோது, அது அவனுக்கான நேரமாய் இருந்தபோது, அவன், , மரணமே! உன் கூர் எங்கே?“ என்றான். ”நல்லது, அது நான் உன்னை பாதாளத்திற்கு கொண்டு செல்லப் போகிறேன்“ என்றது. அவனோ, “அப்படியானால் பாதாளமே! உன் ஜெயம் எங்கே? நான் உன்னையும் கூட சுதந்தரித்துக் கொண்டேன்” என்றான். பின்னர் அவன் அப்படியே திரும்பி, “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றான்.அப்படியானால் சகோதரன் டெம்பிள் (Temple)நாம் அதை சுதந்தரித்து விட்டோம். அதுதான் அது. அதெல்லாம் முடிந்து விட்டது. 14நல்லது, சகோதரி ஸ்நெல்லிங் (Snelling) வழக்கமாக ஒரு பழைய பாடலைப் பாடுவதுண்டு. அநேகமாக உங்களில் யாருக்காவது சகோதரி ஸ்நெல்லிங்கை நினைவிருக்கும் என்று நான் யூகிக்கவில்லை. அன்றொரு நாள் நான் அவளுடைய கல்லறைக்கு சென்றிருந்தேன். அவள் ஒரு சிறிய பெந்தேகோஸ்தே யூபிலியைப் பற்றிய பாடலைப் பாடுவதுண்டு. இந்த நல்ல பழைய வழியைக் குறித்து பேசிக்கொண்டே, நாம் தொடர்ந்து செல்வோம், நாம் தொடர்ந்து செல்வோம்; கர்த்தரைக் குறித்து பேசிக்கொண்டே, நாம் தொடர்ந்து செல்வோம், நாம் தொடர்ந்து செல்வோம். நீங்கள் அதை எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கிறார்கள். - ஆசி.] வெறுமனே இந்த நல்ல பழைய வழியைக் குறித்து பேசிக் கொண்டிருப்பதினால் அவ்வளவு மேலாக உணர்கிறேன், நான் கர்த்தரைக் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதினால், நான் மிகவும் சிறப்பாக உணருகிறேன். அதுதான் காரியம். சரி, இப்பொழுது நாம் ஒரு நிமிடம் அவருடைய வார்த்தையை வாசிக்கத் துவங்குவதற்கு முன்பாக ஜெப வார்த்தையில் அவரிடத்தில் பேசுவோமாக. நம்முடைய தலைகளை நாம் வணங்கியிருக்கும் போதும், நம்முடைய கண்களை மூடியிருக்கும் போதும், இந்த நாளின் கவலைகள் இப்பொழுதே கடந்து போகின்றன. நாம் அவருடைய பிரசன்னத்திற் குள்ளாக அவருடைய நாமத்தில் கூடி வந்திருக்கிறோம். தேவனுக்கு முன்பாக நினைவு கூறவேண்டுமென்று நீங்கள் விரும்புகிற ஏதாவது காரியம் நினைவில் இருக்கிற யாராவது இங்கே இருக்கிறார்களா? உங்கள் கரத்தை உயர்த்தி அதன் மூலமாக “தேவனே, என்னை நினைவு கூறும் ” என்று கூறுங்கள். 15எங்கள் பரலோகப் பிதாவே, இன்றிரவு நாங்கள் இங்கே நின்று கொண்டு இருப்போம் என்பதை நீர் உலகம் உண்டாவதற்கு முன்னரே அறிந்துள்ள எல்லையற்ற தேவனே, நீர் அந்த கரங்களை பார்த்திருக்கிறீர். அவைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னர் என்ன உள்ளது என்பதையும், உயர்த்தப்பட்ட அந்தக் கரத்தின் கீழிருக்கும் இருதயத்தில் என்ன உள்ளது என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர். பிதாவே, மகிமையிலிருக்கும் உம்முடைய மகத்தான ஐசுவரியத்தின்படியாயும், உம்முடைய வல்லமையின் படியாயும் நீர் பதிலளிப்பீர் என்று அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். இந்த சபைக்காகவும், அதனுடைய போதகருக்காகவும், அதனுடைய வாரியத்திற்காகவும், அதனுடைய தர்மகர்த்தாக்களுக்காகவும், கண்காணிகளுக்காகவும், எல்லா அங்கத்தினர்களுக்காகவும் இங்கே கிளார்க்ஸ்வில்லில் (Clarksville) சொற்பகாலம் தங்கியிருக்கும் அந்த விலையேறப்பெற்ற எல்லா ஆத்துமாக்களுக்காகவும், புனித யாத்ரீகர்களுக் காகவும், அன்னியர்களுக்காகவும், இனி உலகத்திற்கு சொந்தமில்லாத வர்களுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உலகத்தின் எல்லா காரியங்களையும் அவர்கள் விட்டுவிட்டார்கள். அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டு இந்த மகத்தான விலையுயர்ந்த மகத்தான முத்தை, நித்திய ஜீவனை எங்களுக்கு அளிக்கிற கர்த்தராகிய இயேசுவை வாங்கிக் கொண்டார்கள். கர்த்தாவே, நாங்கள் அதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்த விலையேறப்பெற்ற ஆத்துமாக்களுக் காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நான் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறேன். நான் சகோதரன் ஜேக்ஸனைக் (Jackson) குறித்து நினைக்கிறேன், எப்படியாய் அவர் உழைத்து, முயற்சித்து, பாடுபட்டு, ஆடுகளை போஷிக்க, புனித யாத்ரீகர்கள் ஒன்று கூடிவர ஒரு சந்திக்கும் ஸ்தலத்தை உண்டுபண்ணவும், அவர்களை ஒன்றாக வைத்திருக்கவும், கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும்படி செய்யவும், அவரும் அவருடைய மனைவியும் குடும்பமும் முயற்சிக்கிறார்கள். இன்றிரவு இங்கே எனக்குப் பின்னாக உட்கார்ந்திருக்கும் சகோதரன் ரடலும் (Ruddell) அங்கே இந்த 62-ம் ஆண்டில் சொற்பகாலம் தங்கி யிருக்கும் அந்த சிறிய குழுவை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார். சகோதரன் நெவிலும் ஜெபக்கூடாரத்தில் இருக்கும் குழுவும் சொற்பகாலமாய் தங்கி இருக்கிறார்கள். கர்த்தாவே, இங்குள்ள மற்றவர்கள் வேறு இடங்களிலிருந்து இங்கு வந்திருக்கலாம். நாங்கள் கர்த்தருடைய வருகைக்காக எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். 16கர்த்தாவே, நாங்கள் இப்பொழுது இங்கே ஒன்று கூடி வந்திருக்கையில் எங்களை மன்னியும். நீர் எங்களுக்கு செவி கொடுப்பதாக வாக்களித்தீர் என்பதை அறிந்தவர்களாய் நாங்கள் இயேசுவின் நாமத்தில் வருகிறோம். “அவருடைய நாமத்தில் நாங்கள் எதைக் கேட்டாலும் அது அளிக்கப்படும்”. இப்பொழுது, இன்றிரவு இந்த சிறிய பாடத்திற்குள் செல்லும் படியாக, நாங்கள் வேதாகமத்தை திறக்கையில், இப்பொழுது வெறுமனே மனிதர்களைப் போன்று நாங்கள் இங்கே காணப்படுவதற்காக வரவில்லை. “நல்லது, நான் இன்றிரவு இந்த சபையில் பங்கு பெற்றேன்” என்று வெறுமனே சொல்வதற்காக ஜனங்கள் இந்த அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. கர்த்தாவே, உம்மிடத்திலிருந்து ஒரு விஷயத்தை நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். அதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். “கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் புதுபெலன் அடைவார்கள்”. ஜீவ அப்பத்தை எங்களுக்கு பிட்டுத் தரும்படியாய் நாங்கள் உம்மிடத்தில் கேட்கிறோம். பரிசுத்த ஆவியானவர் ஒரு சில வார்த்தை களை எடுத்து, இருதயத்தின் ஆழத்திலே அவைகளை நடுவாராக. கர்த்தாவே, பெலவீனமாயிருக்கிறவர்களை பெலப்படுத்தும். பெலமாய் இருக்கிறவர்களுக்கு சந்தோஷத்தையும், தைரியமற்றவர்களுக்கு தைரியத்தையும், சுகவீனமாய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தையும், இழக்கப்பட்டவர்களுக்கு இரட்சிப்பையும் தாரும். நாங்கள் எங்கள் தலைகளை வணங்கி, உமக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுப்போம். நாங்கள் வார்த்தையோடு எங்களை சமர்ப்பித்து, நாங்கள் இயேசுவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். 17சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்கு, இரண்டு தேசங்களினூடாக பிரயாணத்தை அடுத்த வாரம் நாங்கள் துவங்குகையில், இந்த சபையினால் நினைவு கூறப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் தொடர்ந்து போகையிலே எங்களுக்காக ஜெபியுங்கள். உங்களுக்கு சுற்றிலுமாய் நண்பர்கள் இருந்தால், கூட்டங்களுக்கு வருவதற்கான பிரயாணத்திட்டம் உங்களுக்குத் தெரியும். நாங்கள் ......... அல்லது வர முடிந்தால், அவர்கள் அந்த கூட்டத்தில் இருப்பதற்கு நாங்கள் சந்தோஷப்படுவோம். இங்குள்ள உங்கள் எல்லோருக்காகவும், உங்களுடைய போதகருக்காகவும் இன்னும் மற்றெல்லாருக்காகவும், வீட்டு அக்கினிகள் இப்பே திலிருந்து நாங்கள் திரும்பிவருமட்டுமாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கவும் நாங்கள் ஜெபித்துக்கொண்டிருப்போம். நாங்கள் திரும்பி வருவதற்கு முன்னர் இயேசுவானவர் வருவாரானால் நாங்கள் உங்களை அந்த காலையில் சந்திப்போம். அதைத் தவிர நாங்கள் வேறு ஏதாவது நோக்கத்தை உடையவர்களாயிருந்தால் தேவனே எங்களை மன்னியும். 18இப்பொழுது நாம் வேதத்திலிருந்து ஒரு சில வார்த்தைகளுக்காக திருப்ப விரும்புகிறோம். அது யோசுவாவின் புத்தகம் 24ம் அதிகாரம், 14 மற்றும் 15ம் வசனங்களில் காணப்படுகிறது. நான் அவருடைய வார்த்தையிலிருந்து வாசிக்க விரும்புகிறேன். அவருடைய வார்த்தைக்கு கவனமாக செவி கொடுங்கள். யோசுவா 24: 14, 15. ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும், உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும், எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோ வென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான். கர்த்தர் தம்முடைய வேத வார்த்தைகளின் வாசிப்பை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ! நான் இங்கே சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன். அவைகளிலிருந்து நான் சிறிது பேச விரும்புகிறேன். நான் ஒரு வேத பகுதியை இன்றிரவு எடுத்து அதை போராட்டம் என்று அழைக்க விரும்புகிறேன். தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையேயுள்ள போராட்டம். இப்பொழுது அதை ஒரு ஞாயிறு பள்ளி பாடத்தைப் போன்று உபதேசிக்க, நான் அநேக வேத வார்த்தைகளை இங்கே எழுதி வைத்திருக்கிறேன். 19ஏதேனில், தேவன் அவருடைய எதிராளியையும், அவருடைய எதிராளியின் எல்லா தாக்குதல்களையும் அறிந்திருந்தார். இப்பொழுது தேவன் எல்லையற்ற தேவனாக இருக்கிறார். எல்லையற்ற தேவனானவர், பரிபூரணங்களின் பரிபூரணமாய் இருக்கிறார். அவைகள் உண்டாயிருப் பதற்கு முன்னதாகவே அவர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறார். ஆகையால் இந்த எல்லையற்ற தேவன் முன்னோக்கிப் பார்த்து (பார்த்தார்) துவக்கத்திலிருந்து முடிவு மட்டுமாய் கண்டு, இந்த பூமியின் மேல் அவருக்கு பிள்ளைகள் உண்டாயிருப்பார்கள் என்பதையும், அவருடைய சொந்த ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளைகளையும் அறிந்திருந்தார். அவரால் அளிக்க முடிந்த மேலானதையே அவர்களுக்காக அவர் அளிப்பார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர். - ஆசி.) இன்றிரவு, தாங்களாகவே தங்களை கவனித்துக் கொள்ள முடியாத உதவியற்ற சிறுவர்களாகிய உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் போராடவும், வேலை செய்யவும், உங்களால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்யவும், உங்களால் சிறப்பாய் அளிக்கக்கூடியதை அளிக்கவும் அல்லது அந்த பிள்ளைகளுக்காக வேண்டியதை கொடுத்து உதவவும் நீங்கள் விரும்பமாட்டீர்களா? [சபையார், ''ஆமென் “ என்கின்றனர். - ஆசி.) ஏனென்றால் நீங்கள் ஒரு தகப்பனாய், பெற்றோராய் இருக்கிறீர்கள். அப்படி இருக்குமானால் நான் என்ன கூற விரும்புகிறேனென்றால் உண்மையையும், ஒரு பூமிக்குரிய பெற்றோரின் கருத்தையுமே. பெற்றோரத்துவம் தேவனில் துவங்கினது, ஏனென்றால் அவரே முதல் பெற்றோராய் இருந்தார். தேவன் சாத்தான் எப்படி இருப்பானென்றும், சாத்தான் என்ன செய்வான் என்றும் கண்டு, அவருடைய பிள்ளைகளுக்கு அவர் கொடுத்ததும், அவர்களுக்காக அளித்ததையும், அவர்களுக்காக வழங்கக்கூடிய சிறந்த காரியத்தையும் நீங்கள் நினைத்துப் பார்க்கவில்லையா? எதிராளியினுடைய தாக்குதல் என்னவாய் இருக்கும் என்று அறிந்து கொள்வதற்கு தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பளித்தார். புரிகின்றதா? 20நாம் யுத்தத்தை எடுத்துக் கொள்வோம். யுத்தத்தில் ஒரு தளபதி இன்னொரு தளபதியை சந்திக்கும் பொழுது, இந்த தளபதி, அவன் ஒரு அசலான, உண்மையான, அவன் பிரதிநிதித்துவமாய் இருக்கின்ற இந்த தேசத்தின் குடிமகனாயிருந்தால் ஒரு தளபதியாயிருக்க வேண்டு மென்றால் அவன் நிச்சயமாய் அப்படித்தான் இருப்பான். முதலாவதாக, அவன் எதிராளியின் தாக்குதல்களை நன்றாக ஆராய்ந்து கவனிக்கிறான். அவன் என்ன செய்யப் போகிறான், அவன் எப்படி கிரியை செய்யப் போகிறான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஏனென்றால் அவன் அந்தவிதமாக அங்கே சென்று வேவு பார்த்திருக்கிறான். உங்களுக்குத் தெரியும், எல்லா இடத்திலும் நமக்கு வேவுகாரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க வேவுகாரர்கள் இங்கிலாந்தில் இருக்கிறார்கள். அமெரிக்க வேவுகாரர்கள் பிரான்சில் இருக்கிறார்கள். அமெரிக்க ஜெர்மானிய வேவுகாரர்கள் இங்கே இருக்கிறார்கள். நாம் எவ்வளவு நட்பாய் இருந்தாலும் அக்கரையில்லை, நமக்கு இன்னமும் வேவுகாரர்கள் இருக்கிறார்கள். நாம் ஏதோ ஒருவிதமான, அணு ஆயுதத்தைப் பற்றி வேவு பார்க்கிறோம். பின்னர் நாம் அதைக் கண்டுபிடித்து அதை தேசத்திற்கு திரும்பக் கொண்டு செல்கிறோம். பின்னர் அது என்னவாக இருக்கின்றதோ அதற்கு அவர்கள் ஆயத்த மாகிறார்கள். யுத்தம் வருகின்ற பொழுது அவர்களுடைய எதிரியை எப்படி தாக்க வேண்டுமென்று அவர்கள் அறிவார்கள். மேலும் நாம் அறிந்திருப்போமானால் 21சரியானதற்கும் தவறானதற்கும் இடையே இந்த மகத்தான யுத்தம் வந்து கொண்டு இருந்தது என்பதை தேவன் அறிந்திருந்தார். சத்துரு என்ன செய்யப் போகிறான் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் சரியாக எப்படி தம்முடைய ஜனங்களுக்கு ஆயுதம் தரிப்பித்து வைக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார். எனவே நாம் கவனித்துப் பார்ப்போமானால் முதன் முதலாக அவருடைய பிள்ளைகளை தேவன் ஆயுதந்தரிக்க வைத்தார் எல்லையற்றவராக இருப்பதினால், சாத்தானை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எங்கேயும், எந்த நிலைமையிலும் தோற்கடிக்க என்னத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். இப்பொழுது அவர், “இங்கே நான் அவர்களுக்கு ஏதோ ஒன்றைக் கொடுப்பேன், பின்னர் அவர்களுக்கு ஏதாவது மேலானதை நான் கொடுக்கத்தக்கதாக ஒரு சில வருடங்கள் கழித்து ஆராய்ந்து பார்க்கலாம், அதன் பின்னர் சில வருடங்கள் கழித்துப் பார்க்கலாம்” என்று கூறமாட்டார். நம்மைப் போன்று, இராணுவப்படையில், பழைய வில்லும், அம்பும், பளுவான பெரிய சம்மட்டியும், பாறை சம்மட்டியும் பின்னர் அதற்கு அடுத்ததாயிருந்தது ஒரு .......... அம்புக்கும் வில்லுக்கும் பின்னர் கைத்துப்பாக்கி வந்தது, கைத்துப்பாக்கிக்குப் பின்னர் விற்பொறி ஆயுதங்கள் வந்தன. இப்பொழுதோ அணுசக்தி ஆயுதங்களும், மற்ற காரியங்களும் உள்ளன. புரிகின்றதா? நாம் தொடர்ந்து அதிகமாக வளர்ந்து கொண்டே போகிறோம். 22ஆனால் தேவனோ துவக்கத்திலேயே அவருடைய பிள்னை களுக்கு அணு ஆயுதத்தைக் கொடுத்தார். ஏனென்றால் அவர் எல்லையற்ற தேவனாயிருக்கிறார். இப்பொழுது ஒரு போராட்டம் இருக்கப்போகிறது என்பதைக் கண்டவராய், ஒரு யுத்தம் இருக்கப் போவதாய் இருந்ததால் சரியான விதமாயுள்ள, சிறப்பான வெடிமருந்து, குண்டு முதலியனவற்றையும், சரியான விதமாயுள்ள ஒரு தாக்குதலில் அவர்களுக்குத் தேவையாயிருந்த எல்லாவிதமான சரியான காரியங்களையும், அது ஏதேன் துவங்கி எடுத்துக் கொள்ளப்படுதல் வரைக்குமாய் அவைகளெல்லாவற்றையும் துடைத்துப் போடுவதற்காக தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு போர்த்தளவாடங்களை சேகரித்து வைத்தார். அது என்னவாக இருந்தது? வார்த்தை. வார்த்தை. அதுதான் சாத்தானை தோற்கடிக்கிற, வார்த்தையாய் இருக்கிறது. அது அவனை எங்கேயும், எந்த இடத்திலும் தோற்கடிக்கும். இப்பொழுது அங்கே இருக்கின்ற மேலான காரியமான வார்த்தையை நாம் ஏற்கனவே பெற்றிருக்கும் பொழுது, அதற்குப் பதிலாக வேறு ஏதோ காரியம் நமக்கு ஏன் தேவையாயிருக்கிறது? கையோடு கைகலக்குமாப்போலான சண்டையில் சாத்தான் இயேசு வோடு வந்தபோது, இயேசுவானவர் பூமியின் மேல் இதுதான் மேலான போராயுதம் என்று நிரூபிக்கும்படியாக ஒருபோதும் அவருடைய வல்லமையைக் கொண்டு அவனுடைய கரங்களை ஒருபோதும் கட்டிப் போடவில்லை என்பதை நாம் கண்டறிகிறோம். ஏதேன் தோட்டத்தில் தேவன் கொடுத்த அதே ஆயுதமாகிய அவருடைய வார்த்தையை அவர் எடுத்துக் கொண்டு, “எழுதியிருக்கிறதே ....... எழுதியிருக்கிறதே” ........ என்றார். அவர் அதைக் கொண்டு அவனை அப்படியே குத்தி மற்போர் அரங்கிலிருந்து வெளியே தள்ளினார். அது உண்மை . ஏனென்றால் அது தேவனின் மேன்மையாய் இருக்கிறது. 23அது எங்கே இருக்கிறது என்று பாருங்கள். அது வெறுமனே ஒரு சபையிலுள்ள ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கல்ல, அது நம் ஒவ்வொருவருக்குமானதாய் இருக்கிறது. ஒவ்வொரு விசுவாசியும் அந்த வார்த்தையை எடுத்துக் கொண்டு, நீங்கள் அவனை எங்கே சந்தித்தாலும் சத்துருவோடு சண்டையிட உரிமை உண்டு. சத்துருவை நீங்கள் எங்கே சந்தித்தாலும் நீங்கள் உபயோகப்படுத்த வேண்டியது இந்த வார்த்தை தான். அவன் வந்தபோது இயேசுவானவர் அதை நிரூபித்துக் காட்டினார். எனவே சத்துருவுக்கு எதிராக, அவர்களுடைய பாதுகாப்பிற்காக, தம்முடைய பிள்ளைகளை அவர் வார்த்தையோடு முன்னேற்பாடுகள் செய்து வைத்தார். முழுவேகத்துடன் யுத்தமும் யுத்தங்களும் சீராக அமைக்கப்பட்டிருக்கும் பொழுது, அப்பொழுது ஒரு உண்மையான போர் வீரன், ஒரு உண்மையான கிறிஸ்தவ போர்வீரன் உபயோகிக்கத்தக்கதாக அங்கே ஒரு காரியம்தான் இருக்கிறது. அது “கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதாய் உள்ளது. ”உன் வலது பக்கத்தில் ஆயிரம் பேரும், உன் இடது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது'' ..... என்ற நிச்சயத்தோடு ஒன்றுமில்லாமல் நேராக அங்கே சென்று எதிராளியை சந்தியுங்கள். தேவன் இந்த வாக்குமூலத்தை உண்டாக்கி, இதை தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார் என்பதை நினைவு கூறுங்கள். இதுவே இன்னமும் என்றென்றைக்கும் மேலானதாக இருக்கிறது. 24ஏதேன் தோட்டத்திலே, சாத்தான் அவன் ஒரு நபரைத் தாக்க, இந்த தாக்குதலுக்கு முதலில் வந்தபோது, தேவனுடைய பிள்ளைகள் இந்த வார்த்தையினால் அரணாக்கப்பட்டிருந்தனர் என்பதை அறிந்தவனாய், சாத்தான் வார்த்தையைத் தாக்கினான். புரிகின்றதா? அவன் அந்த நபரை ஒருபோதும் தாக்கவில்லை. அவன் முதலாவதாக வார்த்தையை தாக்கினான். அந்த பதுங்கிச் செல்பவனை, அந்த பல்லியைப் பாருங்கள். இன்றைக்கு அவன் என்ன செய்கிறான்? முதலாவது காரியம், அவனால், “அது ஒரு நல்ல நபரல்ல'' என்று வெளிப்படையாய் கூறமுடியாது. அது ஒரு நல்ல நபர் என்பான். புரிகின்றதா? ஆனால் அந்த நபர் எவ்வளவு நல்லவராய் இருந்தாலும் கவலையில்லை. அவன் செய்ய முயற்சிக்கின்ற ஒரே காரியம், அந்த வார்த்தையை அவர்கள் மறுக்கும்படியாய் செய்ய வைப்பதேயாகும். அந்த வார்த்தையை நீங்கள் மறுக்கும்படி செய்வதே அவன் செய்ய விரும்புகிற ஒரே காரியமாய் இருக்கிறது. எனவே ஏதேன் தோட்டத்தில் சாத்தான் வார்த்தையைத் தாக்க முயற்சித்தான். எனவே மானிட வர்க்கத்தினிடத்தில் அவன் உபயோகிக்கத்தக்கதாக வார்த்தையைக் காட்டிலும் மேலானதாய் காணப் படும் ஏதோ ஒன்றை அவன் உடையவனாய் இருக்க வேண்டியிருந்தது. புரிகின்றதா? வார்த்தையைக் காட்டிலும் மேலானதாக மானிடர்க்கு காணப்படும் ஏதோ ஒன்றை அவன் உடையவனாயிருக்க வேண்டி யிருந்தது. அவன் எதை உபயோகித்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? விவாதித்தல், நாம் அதை வெறுமனே, “பொது அறிவு” என்று அழைப்போம். புரிகின்றதா? ஆகவே அதைத்தான் அவன் உபயோகித்தான். அவன் வெற்றியும் பெற்றான். எனவே அவன் தொடர்ந்து அதைத்தான் உபயோகித்து வருகிறான். 25ஆனால் தேவனால் அவருடைய வார்த்தையைத் தவிர வேறொன்றையும் கொடுக்க முடியாது. ஏனென்றால் அதைத்தான் அவர் முதலாவதாக தெரிந்து கொண்டார். தேவன் ஒரு தீர்மானத்தை செய்யும் பொழுது, அவர் அந்த வழியிலேயே எப்பொழுதும் தரித்திருக்க வேண்டியதாயுள்ளது. சாத்தான் விவாதங்களை எடுத்துக் கொண்டான், விவாதங்களை எடுத்துக் கொண்டு வார்த்தையைத் தாக்கி, விவாதங்களினால், மனுஷீக விவாதங்களினால் ஏவாளை பாதையிலிருந்து விலகச் செய்தான். அது உண்மை . இப்பொழுது தேவனுடைய வார்த்தையை அவனோ, அவளோ அவிசுவாசிக்கக் கூடியதாய் இருந்த ஒரே ஒரு வழி, அது வசீகரிக்கக் கூடியதாய் இருந்தது. விவாதங்களை எப்படி வசீகரமாய் செய்ய வேண்டும் என்பதை சாத்தான் அறிந்திருக்கிறான். அது உங்களுக்கு வசீகரமா யிருக்க வேண்டும். பாவமானது அவ்வளவு வசீகரிக்கிறதாய் இருக்கிறது. ஒரே ஒரு பாவம்தான் உண்டு, அது அவிசுவாசமாய் இருக்கிறது. எனவே அது உண்மையாகவே வசீகரமாயிருக்கிறது. சாத்தான் பாவத்தை உங்களுக்கு மிகவும் வசீகரமாயிருக்கும்படிச் செய்கிறானே! 26இங்கே ஒரு சில நிமிடங்கள் நிறுத்துகிறேன். ஒரு வாலிப மனிதனாக, வித்தியாசமான தேசங்களைக் குறித்தும், தேசங்களின் நெறி முறைகளை குறித்தும் வாசிக்கின்றபடியால், நான் அடிக்கடி நினைத்ததுண்டு. விசேஷமாக பிரான்சில் பிக்காலி (Pigalle) என்று அழைக்கப்படுகின்ற இடத்திலே எப்படியாய் ஜனங்கள் மிகவும் மோசமான நெறி முறையில் உள்ளனர் என்பதைக் குறித்து பல வித்தியாசமான ஜனங்கள் என்னிடத்தில் கூற நான் கேட்டிருக்கிறேன். நல்லது, உங்களுக்குத் தெரியுமா? ''நான் எப்பொழுதாவது அங்கு போக நேர்ந்தால், அந்த ஸ்திரீகள் வெளியே வருகின்றதை, நீங்கள் அறிந்துள்ள அந்த கேடான சிந்தை உடையவர்கள், வயதான, விகாரமான, நீசத்தனமாக அவ்விதம் காணப்படுகின்ற அந்த ஜனங்களை நான் அங்கு பார்ப்பேன்“ என்று நான் நினைத்தேன். நான் பிக்காலிக்குச் சென்றேன். முதல் இரவு நானும் இன்னும் மூன்று ஊழியக்காரர்களும் சென்றோம். சகோதரனே, நாங்கள் என்ன ஒரு வியப்பு அடைந்தோம்! இப்பொழுது அதற்காக சாத்தான் அதிக சாமர்த்தியமுள்ளவனாக இருக்கிறான். அதைப் போன்ற ஏதோ ஒன்றை அவன் உண்டாக்கப் போவதில்லை. ஆனால் என் வாழ்க்கையிலேயே நான் கண்ட சில கவர்ச்சிகரமான பெண்கள் அங்கே இருந்தனர். வசீகரமாயிருந்தார்கள். நிச்சயமாக. 27பாவமானது வசீகரிக்கிறதாயும், கவர்ச்சியானதாயும் இருக்கிறது. சாத்தான் ஒரு விரிகுளம்பையும், ஒரு கூர்மையான வாலையும் போன்றுள்ளதை பெற்றிருக்கவில்லை. மேல் உடுப்பு தொங்கிக் கொண்டும், காதுகள் கீழாக தொங்கிக் கொண்டுடிருக்கும் வயதான ஜான் பார்லிகார்ன் (John Barleycorn) அல்ல சாத்தான். அவன் வசீகரமுள்ள ஒரு திறமைசாலி. நீங்கள் நினைப்பது போல் பாவம் முரட்டுத்தனமானதல்ல. அது மிகவும் வசீகரமானது. ஆகையால் நாம் அதை கூர்ந்து கவனிக்க வேண்டும். நாம் இன்னும் சிறிது நேரத்தில் அதை பார்ப்போம். நான் வேறு எதோ காரியத்தைக் குறித்து நினைத்தேன். ஆக சாத்தான் எப்படியாய் அதை உண்மையானது போன்று காணும்படி செய்கிறான், அது அவர்களுக்கு கவர்ச்சியாயிருக்கிறது. ஆனால் அவர்கள் மட்டும் வார்த்தையின் பாதுகாப்பில் தரித்திருந்தால், வார்த்தையை தங்களுடைய அரணாய் அனுமதித்திருந் தால், அப்பொழுது, பாருங்கள், அவர்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் வார்த்தைக்குப் பின்னாக இருந்திருப்பார்கள். வார்த்தையானது எப்பொழுதுமே அவர்களுக்கு முன்பாக “கர்த்தர் உரைக்கிறதாவது” என்ப தாகவே இருந்திருக்கும். “கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் உரைக்கிற தாவது”. இடதோ அல்லது வலதோ, “கர்த்தர் உரைக்கிறதாவது'' ஏசாயா தேவாலயத்திலே சந்தித்தபோது, அங்கே அந்த நாளிலே இருந்த அந்த தூதர்களைப் போன்றே, அவன் மிகவும் நன்றாக இருந்து கொண்டிருக்கிறான் என்றும், நேர்மையான நல்ல பிரசங்கி என்றும் அவன் நினைத்தான். இராஜா உண்மையாகவே அவனை விரும்பினான். ஆனால் ஒருநாள் அவனிடமிருந்து இராஜா எடுக்கப்பட்டான். அவன் பலிபீடத்தண்டையில் முழங்கால்படியிட்டு, ஒரு தரிசனத்திற்குள்ளாகி தூதர்கள் செட்டைகளை தங்களுடைய முகங்களின் மேலும், தங்களுடைய பாதங்களின் மேலும் வைத்தவர்களாய், இரண்டு செட்டைகளால் பறந்துகொண்டு, அவைகள் சென்ற எந்த வழியிலும், “பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்” என்று பாடிக்கொண்டிருந்ததைக் கண்டான். பாருங்கள். எசேக்கியேல் தரிசனத்தின் காட்சியை இந்தவிதமாகக் கண்டான். தேவனுடைய ஆவி அசைந்து கொண்டிருந்தது. அது எருதின் முகத்தை உடையதாயிருந்தது. இந்த பக்கமாக அது ஒரு சிங்கமுகத்தை உடைய தாயிருந்தது. அது சென்ற பக்கமெல்லாம், அது ஒரு முகத்தை உடையதாய் இருந்தது. அது எங்கே சென்றதோ, அங்கு அது பாதுகாக்கப்பட்டிருந்தது. 28தேவனுடைய வார்த்தைக்கு சுற்றிக்கொண்டு போக வழி ஏதும் இல்லை. சுற்றிலுமாக எல்லா இடத்திலும் “கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் உரைக்கிறதாவது'' என்றே பாதுகாக்கப்பட்டிருந்தது. உங்களுடைய நடையிலும், உங்களுடைய பேச்சிலும், உங்களுடைய வியாபாரத்திலும், உங்களுடைய பங்கு கொள்ளுதலிலும் மற்றும் எல்லாக் காரியத்திலும் தேவனுடைய வார்த்தையை முதலாவதாக வையுங்கள். “நான் இன்றிரவு வெளியே போகிறேன், இந்த சிறிய நடனம் எவரையும் புண்படுத்தாது'' என்று கூறுகிறீர்கள், உங்களால் கர்த்தர் உரைக்கிறதாவதை உடன் கொண்டு செல்ல முடியுமா? புரிகின்றதா? பார்த்தீர்களா? ”நான் இந்த சிறு விவகாரத்தை சற்று இலேசாக இழுக்கக் கூடுமானால், அது சற்றே நேர்மையற்றதாய் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்“. ஆனால் இதனோடு கர்த்தர் உரைக்கிறதாவது என்று நீங்கள் கூறமுடியுமா? புரிகின்றதா? எப்பொழுதும் முதலாவது அவரைக் கொண்டு செல்லுங்கள். அரணாய் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர் நம்முடைய கோட்டையும், அதன் வடிகட்டியுமாய் இருக்கிறார். ஆனால் நீங்கள் அதை அசட்டை செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா? முன்பு ...... பிசாசினுடைய பொய்யை நீங்கள் விசுவாசிப்பதற்கு ஏதுவாக, பிசாசினுடைய பொய்யை நீங்கள் நம்புவதற்கு முன்னர், நீங்கள் தேவனுடைய சத்தியத்தை முதலாவதாக அசட்டை பண்ணவும், மறுக்கவும் வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் அதைக் குறித்து எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? நீங்கள் ஒரு பொய்யை நம்புவதற்கு முன்னதாக நீங்கள் முதலாவது சத்தியத்தை மறுத்தாக வேண்டும். உண்மை. அதை மறுத்தாக வேண்டுமே! 29ஏவாள் அதன் பின்னின்று வந்து, யுத்தத்தில் தோற்றுப் போனாள். ஏவாள் வந்தவுடனே ...... சாத்தான் அங்கே வெளியே நின்று கொண்டு அவனுடைய இலக்குகளை நோக்கி எய்து கொண்டிருந்தான். அவள், “ஆனால் கர்த்தர் கூறினார்,'' என்றாள். பின்னர் அவன் மீண்டுமாய் எய்தான். அவள், ”ஆனால் கர்த்தர் கூறினார்.'' என்றாள். ஆகவே அதன்பின்னர் அவன் இன்னொரு வழியாக எய்தான். “ஆனால் கர்த்தர் கூறினார் ஆனால் சாத்தான் பின்னாக அங்கே எழும்பி, “ஆனால் ஒரு நிமிடம் அப்படியே பொறுத்திரு . கர்த்தர் அதைக் கூறியிருந்தால், நான் உனக்கு ஏதோ ஒன்றைக் கூறட்டும். நீ பார், நீ தேவனைப்போன்று விவேகமுள்ளவள் அல்ல. உனக்கு சரியானதற்கும் தவறானதற்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் ...... கவனி. நீ தேவனைப் போன்று விவேகமுள்ளவளாய் இருக்க உனக்கு விருப்பமில்லையா?'' என்றான். “ஏன்”, ஏவாள், “ஆம், நான்- விவேகமுள்ள வளாய் இருக்க விரும்புகிறேன் என்று நினைக்கிறேன்” என்றாள். அதைப்போன்ற ஏதோ ஒன்றாய் இருக்கலாம். “நான் தேவனுடைய எல்லா ஞானத்தையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என நான் நினைக்கிறேன். நான் தவறானதும் சரியானதும் என்ன என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். நான் அதை அறியேன்.'' “நல்லது நான் உனக்குச் சொல்லுவேன்” இப்பொழுது, அவள், “ஆனால், ஆனால் கர்த்தர் சொன்னார் ”சான்றாக. கல்லார். ஆனால், நிச்சயமாக, அவர் ஒரு நல்ல தேவன் என்று உனக்குத் தொய, அவர் அதைச் செய்யமாட்டார்“ என்றான். புரிகின்றதா? சரியா அங்கே அவள் ஒரு துவாரத்தை உடைத்தாள். எனவே அவன் எய்ய முடிந்தது. சரியாக அங்கே அவள் தவறான நிறுத்தத்தைச் செய்தாள். சரியாக அங்கே சிறிது நேரம் நின்றாள். 30இப்பொழுது இங்கே இருக்கின்ற கிறிஸ்தவர்களாகிய உங்களைக் குறித்து ஒரு காரியத்தை நான் கூறட்டும். பிசாசுக்காக நீங்கள் ஒரு வினாடி கூட நிற்காதீர்கள். அதை விவாதிப்பதற்காக நிற்காதீர்கள். நீங்கள் அதை விவாதிக்க துவங்கும் போது பிசாசு நேராக உள்ளே வருகிறான். நீங்கள் தேவனை விவாதிக்க முடியாது. நீங்கள் தேவனை புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் தேவனை அப்படியே விசுவாசிக்கத் தான் வேண்டும். புரிகின்றதா? நான் தேவனை விளக்க முடியாது. ஒருவராலும் முடியாது. நான் அநேக காரியங்களை விளக்க முடியாது. ஆனால், ஒரே காரியம் நான் அதை அப்படியே விசுவாசிக்கிறேன், ஏனென்றால் அவர் அவ்வண்ணமாய் கூறியுள்ளார். இப்பொழுது நம்மில் எவருமே அதை ளெக்க முடியாது. அதை விளக்க முயற்சிக்காதே. “நல்லது, இப்பொழுது பாருங்கள், இளையவனே, அங்கே வெளியே இருக்கின்ற உன்னுடைய போதகர், அவர் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதை நான் கேட்கிறேன். இப்பொழுது நீங்கள் எல்லோரும் அங்கே பைத்தியமாய் இருக்கிறீர்கள். தெய்வீக சுகமளித்தல் போன்ற அத்தகைய ஒரு காரியமே கிடையாது” என்று கூறுகின்ற அவிசுவாசிகளோடு சேராதே. “சரி, அப்படியானால் அது உனக்குரியது அல்ல. நீ ஒரு அவிசுவாசி” என்று கூறுங்கள். உடனே அப்படியே நடந்து சென்றுவிடு. புரிகின்றதா? அது விசுவாசிகளுக்கானதாய் உள்ளது. புரிகின்றதா? இல்லையா? “நல்லது, நீங்கள் எல்லாருமே பரிசுத்த ஆவியை பெற்று விட்டோம் என்கிறீர்கள். பரிசுத்த ஆவி என்ற அத்தகைய ஒரு காரியமுமே கிடையாது”. “அப்படியானால் அது உங்களுக்குரியதல்ல. அது எனக்கானது'' என்று கூறுங்கள். தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள். புரிகின்றதா? பார்த்தீர்களா? 31விவாதிக்காதே. அதை விவாதிக்க முயற்சிக்காதே. அதற்கு விவாதங்களே இருக்க வேண்டியதில்லை. நீங்கள் அதை அப்படியே விசுவாசியுங்கள். நீங்கள் ஒரு காரியத்தையும் விவாதிக்க வேண்டாம். ஏனென்றால், நினைவிருக்கட்டும், நீங்கள் தேவனை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரே வழி விசுவாசத்தின் மூலமாகத்தான். விவாதங்களினால் அல்ல, புரிந்து கொள்ளுதலினால் அல்ல, அதை விளக்கக்கூடியதினால் அல்ல. நீங்கள் ஒன்றையும் விளக்குகிறதில்லை. நீங்கள் ஏதோ ஒன்றை விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் என்ன உணருகிறீர்கள் என்றல்ல, இயேசுவானவர் “நீங்கள் அதை உணர்ந்தீர்களா?” என்று ஒருபோதும் கேட்கவில்லை. அவர், “நீங்கள் அதை விசுவாசித்தீர்களா?'' என்றே கேட்டார். அது உண்மை . தேவன் என்ன கூறினாரோ அதை அப்படியே விசுவாசியுங்கள். நான் அவைகளைஎப்படி என்று உங்களுக்கு விளக்கிக் கூறமுடியாது எப்படியாய் ஒரு நான் நினைத்துப் பார்க்கக்கூடிய மகத்தான அற்புதம் என்னவென்றால் ஒரு மனிதன் ஒரு பன்றியை எடுத்து, அந்த பன்றியிடம், “உனக்குத் தெரியும், இனி மேல் நீ ஒரு பன்றியல்ல. நீ ஒரு செம்மறியாட்டுக்குட்டியாய் இருக்கிறாய்” என்று கூறுவது போன்றேயுள்ளது. அது ஒரு செம்மறியாட்டுக்குட்டியாக ஆகின்றது. புரிகின்றதா? அதை விசுவாசிப்பது கடினமாயிருக்கும். நல்லது, நீங்கள் ஒரு பாவியிலிருந்து ஒரு கிறிஸ்தவனாக மனமாற்றமடையும்பொழுது அதே காரியம் அங்கே சம்பவிக்கின்றது. புரிகின்றதா? அது உங்களுடைய சொந்தக் கருத்துக்களையே மாற்றுகிறது. அது உங்களுடைய சொந்த விருப்பத்தையே மாற்றுகிறது. அது உங்களுக்குள்ளாக இருக்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் மாற்றுகிறது. அது உங்களை இன்னொரு ஜீவியத்திற்குள் கொண்டு வந்து, உங்களுக்கு இன்னொரு ஆவியை கொடுத்து, அது இன்னொரு சாட்சியைக் கொடுக்கிறது. புரிகின்றதா? அப்பொழுது உங்களுடைய பழைய ஜீவியம் மரித்தாக வேண்டும். புதிதான ஒன்று மறுபடியும் பிறக்க வேண்டியதாய் இருக்கிறது. அதற்குப் பின்னர், பாருங்கள், நீங்கள் இனிமேல் முன்பு இருந்த சிருஷ்டியாகவேயில்லை. அப்பொழுது நீங்கள் இரத்தத்திற்குப் பின்னாகும் போது வார்த்தையினால் அரணாக்கப் படுகிறீர்கள். ஒன்றையும் விளக்கிக்கூற முயற்சிக்க வேண்டாம். வெறுமனே விசுவாசித்து தொடர்ந்து போய்க்கொண்டே இருங்கள். ''கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். இரட்சகரே, என்னுடைய விசுவாசத்தை, அது ஒரு மலையை அசைக்கும் அளவிற்கு வரும் வரைக்கும் அதை உமக்குள் எழுப்பும்'' புரிகின்றதா? “கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், ஏனென்றால் என்னுடைய எல்லா சந்தேகங்களும் ஊற்றுக்குள்ளாக அடக்கம் பண்ணப்பட்டிருக்கின்றன. 32வைத்தியர்கள் வந்து ஆபிரகாமிடம், “ஆபிரகாமே, உனக்கு நூறு வயதாகிறது, உன்னுடைய மனைவிக்கு தொண்ணூறு வயதாயிருக்கிறது. எப்படி நீ ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளப்போகிறாய்?'' என்று கேட்டிருந்தால் என்னவாயிருக்கும்? இப்பொழுது, ஆபிரகாம், “நல்லது, நான் உங்களுக்கு கூறுவேன், அது இந்தவிதமாகத்தான் இருக்கிறது. நீங்கள் பாருங்கள். ஒரு நேரம் இருக்கப்போகின்றது. அதாவது நாங்கள் ஒரு குறிப்பிட்ட ஒன்றை குடிக்கப் போகிறோம், இது இதை செய்யப் போகின்றது, இந்த விதமான ஒரு மாற்றம் உண்டாகப் போகின்றது'' என்று கூறியிருந்தால் என்னவாயிருக்கும். ஆபிரகாம் அதை விளக்க முடியவில்லை. ஆபிரகாம் இதைப் போன்று, “எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக அதைக் குறித்து எனக்குத் தெரியாது. நான் சார்ந்திருக்கும் ஒரே காரியம், நாங்கள் அதை உடையவர்களாய் இருப்போம் என்று அவர் கூறினதாக இருக்கிறது. நான் அதற்காக எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறேன்” என்று ஏதோ ஒன்றை கூறியிருந்திருப்பான். கூறியிருப்பானே! ஆம் ஐயா. 33இப்பொழுது அதுதான் அதற்குத் தேவை. வெறுமனே அதை எடுங்கள். அதை விசுவாசியுங்கள். “தேவன் அவ்வண்ணமாய் கூறியிருக்கிறார்”. அது முழு காரியத்தையும் தீர்த்து வைக்கிறது. ஏனென்றால் தேவன் அதை கூறினார். இப்பொழுது ஏவாள் யுத்தத்தில் தோற்றுக்கொண்டிருப்பதை நாம் கண்டறிகிறோம். அவள் வார்த்தைக்குப் பின்னால் இருந்து வந்து, அரணிற்கு மேலாக வந்து, நீ அந்தவிதமாகவா கூறுகிறாய்? அது உண்மைதானா?“ என்றான். சரியாக அங்கேயே அவள் தோற்கடிக்கப்பட்டாள். “நல்லது, உங்களுக்குத் தெரியும், நாங்கள் அதை எங்கள் சபையிலே போதிப்பதில்லை. அவர் இங்கே என்ன கூறினாரோ அதையே நாங்கள் விசுவாசிக்கிறோம்.'' “ஆம், ஆனால், கவனியுங்கள், அன்பார்ந்தவர்களே, அதைக் காட்டிலும் நீங்கள் அதிகமாய் அறிந்திருக்கிறீர்கள். உங்களுடைய சொந்த பொது அறிவே அது சரியானதல்ல என்று உங்களுக்கு கூறும். ஏன், நான் அவர்களுடைய ஜனங்களே சத்தமிடுவதை, கூக்குரலிடுவதை கேட்டிருக்கிறேன். அவர்கள் எதைக் குறித்து சத்தமிடுகின்றார்கள்? புரிகின்றதா? இப்பொழுது, சொந்த பொது அறிவே அவர்கள் வெறுமனே தூண்டிவிடப்பட்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு காண்பிக்கும்”. அவர்கள் மன எழுச்சியடைந்திருக்கிறார்கள். புரிகின்றதா? நீங்கள் அதை கேட்பதற்காக தரித்து நின்றால் நீங்கள் யுத்தத்தில் தோற்கடிக்கப்படுவீர்கள். அவர்கள், இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுத்துக்கொள்ளும். உங்களுக்கு எலும்புருக்கி நோய் இருந்தது என்று உங்களுடைய வைத்தியர் கூறினாரே. அது முற்றிப்போன நிலையில் உள்ளது. அந்த எலும்புருக்கி நோயை குணமாக்க ஒருபோதும் வழியே இல்லையாமே. அதற்கு வழியே இல்லை என்று வைத்தியர் கூறினாரே. இப்பொழுது, பொது அறிவே அதை சொல்லவில்லையா?“ என்று கூறினால், நல்லது, நீங்கள் விவாதங்களின் பேரில் சார்ந்திருக்கப் போவதாயிருந்தால், ஒருக்கால் நீங்கள் மரிப்பதற்கு ஆயத்தப்படுவதுபோல் இருக்கும். ஆனால் தேவன் கொடுத்ததான வாக்குத்தத்தத்திற்கு போவதா யிருந்தால், அதை உங்களால் விசுவாசிக்க முடிந்தால், அது முழு திட்டத்தையே மாற்றிவிடும். 34இப்பொழுது, அதே விதமாகவே அது மாற்றுகிறது. அதேவிதமாகவே அது எனக்கும் அங்கே மாறினதாய் இருக்கிறது. புரிகின்றதா? நான் அதை அப்படியே விசுவாசிக்கிறேன். அது எப்படி செய்யப்பட்ட தென்று தெரியாது, ஆனால் அங்கே ஒரு புதிய சிருஷ்டியானது வந்ததாய் இருந்தது. நான் வழக்கமாகவே, சபையை தவிர்த்து ஒதுக்குவேன். நான் நான் குத்துச்சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஒருநபர் என்னிடத்தில் கூறினான், நாங்கள்நான் என்னுடைய கலைத்தொழில் சண்டையான பதினைந்தாவது சண்டையை இந்தியானா, ஈவான்வில்லில் செய்து கொண்டிருந்தேன். நியூ ஆல்பனி ஜனங்களாகிய உங்களில் அநேகர் அங்கே ஹாவர்ட் மெக்லெய்ன் (Howard McClain) அவர்களை அறிந்திருப்பீர்கள். நாங்கள் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தோம். ஹாவர்ட் (Howard) 147 பவுண்டு எடையுள்ளவராய் இருந்தார். நான் குறைவான உயரமும், குறைவான எடையுமுள்ளவனாயிருந்தேன். மேற்கு வெர்ஜீனியா, ஹண்டிங்டன்னிலிருந்து வந்த பில்லி பிரிக்கோடு (Billy Frick) நான் சண்டையிட்டுக்கொண்டிருந்தேன். இதைப்போன்று ஒரு நீல நிற சூட் அணிந்திருந்தேன். அந்த நாட்களில் என் தலையில் கொஞ்சம் முடியே இருந்தது. நான் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். சுமார் 3 மணிக்கு நாங்கள் இரவு உணவு அருந்தி அந்த இரவு சண்டைக்காக ஆயத்தமாவோம். அப்பொழுது நாங்கள் இளைப்பாறும்படியாய் போய்க் கொண்டிருந்தோம். அப்பொழுது எங்களுடைய கரங்கள் சுற்றப்பட்டிருந்தது. ஹாவர்ட் என்னிடத்தில், “பில்லி உனக்கு என்னவென்று தெரியுமா?” என்றார். நான், “என்ன?” என்றேன். ''நீ ஒரு சிறிய பாப்டிஸ்டு பிரசங்கியாரைப் போன்று காணப்படுகிறாய்“ என்றார். அவர் என்னை வேறு ஏதாவது அழைத்திருக்கலாம். நான் ....... நான் அப்படியே சுற்றி திரும்பினேன். நான், “இப்பொழுது, ஹாவர்ட் ஒரு நிமிடம் பொறும். இப்பொழுது நீர் அதை கூறுகிறபோது, நீரே சிரிக்கிறீர்'' என்றேன். (சகோதரன் பிரான்ஹாமும் சபையாரும் சிரிக்கின்றனர்.- ஆசி.) நான் இவ்வளவே உயரம் இருந்தேன். ஆனால் அவர் மேல் ஏறிச்செல்ல ஆயத்தமாயிருந்தேன். நான் எந்த பிரசங்கியோடும் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பினதேயில்லை. இப்பொழுது அவர் எனக்குக் கொடுத்திருந்த மகத்தான பாராட்டானது, ஓ, யாராவது, “சகோதரன் பிரான்ஹாம் நீர் ஒரு பிரசங்கியைப் போன்று காணப்படுகின்றீர்” என்று கூறும்பொழுது, நான், “தேவனுக்கு ஸ்தோத்திரம்'' என்கிறேன். பார்த்தீர்களா? புரிகின்றதா? 35காரியம் என்னவாக இருக்கிறது? நான் மரித்துப் போனேன். நான் ஒரு புதிய சிருஷ்டியாய் இருக்கிறேன். நான் அதை எப்படி செய்தேன்? நான் அவருடைய வார்த்தையை எடுத்துக்கொண்டேன். “சகோதரன் பிரான்ஹாம் அது என்னவிதமான மருந்து? நீர் எந்த முறையை எடுத்துக் கொண்டீர்?” நான் எதையும் எடுத்துக் கொள்ள வில்லை . “அவர் அதை எப்படிச் செய்தார்?” நான் அறியேன். ஆனால் எப்படியிருந்தாலும், நான் அதை விசுவாசித்தேன். நான் ஒன்றையும் ஒருபோதும் எடுக்கவில்லை. நான் அப்படியே அதை விசுவாசித்தேன். நான் என்னவாக இருந்தேனோ அதிலிருந்து, ஒரு பாவியிலிருந்து ஒரு கிறிஸ்தவனாக அவர் என்னை எழுப்பினார். நான் அவருடைய வார்த்தையை எடுத்துக் கொண்ட காரணத்தால் அவர் அதைச் செய்தார். வியாதியினால் அவர் அதே காரியத்தைச் செய்வார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் அவர் அதே காரியத்தைச் செய்வார். அவர் கொடுக்கிற எந்த வாக்குத்தத்தத்தினாலும் அவர் அதே காரியத்தைச் செய்வார். 36ஆனால், பாருங்கள், என்ன? என்னுடைய பொருள் என்ன? போராட்டம். போராட்டம். அதைக் குறித்து நீங்கள் விவாதிக்கும்படியாய் செய்ய சாத்தான் முயற்சிக்கின்றான். நீங்கள் அதைச் செய்யவே செய்யாதீர்கள். ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக ஆன பிறகு அப்பொழுது நீங்கள் வார்த்தையினாலும், வார்த்தையிலுள்ள வாக்குத்தத்தத்தினாலும் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள். நான் அதைக் கூறப்போனேன் என்று தெரியாதா? புரிகின்றதா? நீங்கள், நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக ஆகும் பொழுது நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குப் பின்னால் பொருத்தப்படுகிறீர்கள். புரிகின்றதா? இப்பொழுது, அங்கேதான் உங்கள் பாதுகாப்பான கோட்டையிருக்கிறது. அதிலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுடையதாய் இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம், அதைப் பெற்றுக்கொண்டு அதனோடு தொடர்ந்து செல்லுங்கள். “அது கிரியை செய்யப்போகிறது என்று எப்படி நீங்கள் அறிவீர்கள்? அது எப்படி கிரியை செய்யப்போகிறது என்று நான் அறியேன். ”எனக்கு விளக்கிச் சொல்லுங்கள் “ நான் அறியேன். நான் அறிந்த ஒரே ஒரு காரியம், அதாவது, தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அவர்களிடம் இருக்கக்கூடிய மேலான தாக்குதலையே கொடுத்தார். அதனோடு தாக்குவது மேலான காரியம், ஏனென்றால் சத்துருவின் கிரியையை அவர் அறிந்திருக்கிறார். 37இப்பொழுது, நாம் - நாம் அதைக் கீழே கண்டுபிடிப்போம். இரத்தத்தின் இரசாயனத்தை அல்லது தண்ணீரின் ரசாயனத்தை அல்லது அது என்னவாக இருந்தாலும் சரி அதை எடுத்துக் கொள்வது போன்றே. புரிகின்றதா? நாம் - நாம் அதை கீழே கண்டுபிடிப்போம். ஏன், ஏன் அவர் வார்த்தையைக் கொடுத்தார்? ஏனென்றால் நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா? [சபையார், “ஆமென்” என்கிறார்கள். - ஆசி.] வார்த்தை நித்தியமானதாய் இருக்கிறது. [“ஆமென்.”] புரிகின்றதா? தேவன் நித்திய மாயிருக்கிற ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தால், அதை தடுத்து நிறுத்த எந்த இடத்திலும் ஒரு காரியமுமில்லை . அவர்களால் முடியாது. எல்லா அணுவையும் தலைகீழாக திருப்புங்கள். அதை பின்பக்கமாய் திருப்புங்கள். அதனால் தேவனுடைய வார்த்தையினூடாக, ஒரு சிறிய வார்த்தையினூடாக உருவக்குத்திக் கொண்டு செல்ல முடியாது. புரிகின்றதா? காரணம் இயேசு, “வானங்களும் பூமியும் இரண்டுமே ஒழிந்துபோம், ஆனால் என் வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது'' என்றார். புரிகின்றதா? அதுவே சிறந்த ஆயுதம். அது நித்தியமான தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. இப்பொழுது, தேவனுடைய வார்த்தை என்னவாக இருக்கிறது? தேவனுடைய வார்த்தை தேவனாகவே இருக்கிறது. எனவே, தேவன் விசுவாசிக்கு தம்மையே கொடுத்தார். ஆமென். அது தேவன் தாமே. சத்துருவை தாக்குவதற்கு அவர் தம்மைத்தாமே விசுவாசிக்கு கொடுத்தார். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர் பிதாவாக இருக்கிறார். வார்த்தை தேவனாக இருக்கிறது. அப்படியானால் வார்த்தை நம்முடைய பிதாவாக இருக்கிறது. நாம் வார்த்தையினால் பிறந்திருக்கி றோம். அவருடைய பிள்ளைகளுக்காக, அவர் முன் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார். ஆமென். அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள். 'அவர் தம்முடைய பிள்ளைகளுக்காக அங்கே நின்று கொண்டிருக்கிறார். நாம் என்னத்தைக் குறித்துப் பயமடைந்திருக்கிறோம்? எடுத்துக் கொள்ளப் படுதல் நிச்சயமாக உண்டு. வருகை நிச்சயமாக உண்டு. வாக்களிக்கப் பட்டுள்ள ஒவ்வொரு ஆசீர்வாதமும் நம்முடையதாக இருக்கிறது. யாவுமே நமக்குச் சொந்தமானதாக இருக்கிறது. இப்பொழுது, நாம் ஒருவிதமாக தளர்வுற்றிருந்தால் 38சாத்தான், “இந்த பக்கத்திற்கு வாருங்கள், நான் அதை உங்களோடு விவாதிப்பேன்” என்பான். அப்பொழுது அப்பொழுது நீங்கள் பிதாவுக்கு பின்னாக இருக்க வேண்டும். புரிகின்றதா? நீங்கள் அதைச் செய்யவே செய்யாதீர்கள். சரியாக பிதா எங்கே நிற்கிறாரோ, சரியாக அது கூறுகிறதிலேயே நீங்கள் தரித்திருங்கள். “அது பிதா உரைக்கிறதாவது” என்று கூறுங்கள். புரிகின்றதா? “என் பிதா உரைக்கிற தாவது, என் பிதா உரைக்கிறதாவது”. அது அவனை தோல்வியுறச் செய்யப் போகிறது. உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அது அதனைச் செய்தாக வேண்டும். சரி. ஆனால் ஏவாள் செய்தது போன்று, அதற்குப் பின்னின்று நீங்கள் வெளியே வரும்பொழுது, யுத்தத்தில் தோற்கடிக்கப்படுவீர்கள். இப்பொழுது பாவம், ஏவாள், அவள் செவி கொடுத்தாள். அவள் தன்னுடைய ஸ்தானத்தை இழந்து போனாள். பின்னர் தேவன் தம்முடைய கோட்டையைக் காக்க புருஷர்களை தெரிந்து கொண்டார். அது முதற்கொண்டு அவன் காத்து வருகிறான். இந்தக் கடைசி நாட்களில் இருக்கின்ற ஜனங்கள், அநேகமுறை அங்கேதான் சில சமயத்தில் “பிரசங்க பீடத்தில் ஸ்திரீயானவள், புருஷனைப் போன்று ஒரு நல்ல வேலையைச் செய்ய முடியும் என்று ஏன் நீங்கள் சிந்திக்கக்கூடாது'' என்று கூறுகிறார்கள். நான் அதை வாதம் செய்து கொண்டிருக்கவில்லை, இல்லவே இல்லை. சில சமயங்களில் அவர்களில் அநேகர் என்னைக் காட்டிலும் சிறப்பாய் செய்யக்கூடும். ஆனால், நீங்கள் பாருங்கள், தேவன் என்ன செய்தாரோ அதையே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்? புரிகின்றதா? சரியாக அங்கே, தடைகளை உடைத்த ஒருவள் ஏவாளாயிருந்தாள். ஆதாம் தடைகளை உடைக்கவில்லை. இல்லை ஐயா , ஆனால் அவன் தன்னுடைய மனைவியை நேசித்த காரணத்தினால், அவளோடு அவன் அப்படியே வெளியே நடந்து சென்றான். புரிகின்றதா? எனவே தேவன் கோட்டையைப் பற்றிக் கொண்டிருக்க புருஷரை தெரிந்து கொண்டார். 39இப்பொழுது, அடுத்தது, அதன்பிறகு நாம் கண்டறிந்தது, அங்கே யுத்தம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு அழிவு வந்ததான அந்த நேரத்திலே, அடுத்த நேரத்தில், யுகங்களின் மாற்றம் உண்டாயிருந்தது. யுத்தம் எந்தவிதமாக சென்றது என்பதை நாம் அறிவோம். ஏவாள் தேவனுடைய வார்த்தையிலுள்ள அவளுடைய விசுவாசத்திற்குப் பதிலாக, அவளுடைய விவாதங்களின் மேல் அவள் நம்பிக்கையாயிருந்த காரணத்தினால், யுத்தத்தில் தோற்றுப்போனாள் என்று நாம் அறிகிறோம். நாம் அதை திரும்பக்கூறுவோம். அவள் தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் வைப்பதற்குப் பதிலாக அவளுடைய சொந்த விவாதங்களின் மேல் நம்பிக்கையாயிருந்தாள். அது விவாதிக்கப்பட்டது. ஆகையினால் அவள் முன்வரிசையை உடைத்த போது எதிராளி பாய்ந்து உள்ளே வந்தான். உடனே மரணம் உலகத்தைத் தாக்கினது. ஆகையால் இப்பொழுது தேவன் முன்வரிசையை காத்துக்கொள்ளும்படி திரும்பவும் ஸ்திரீயினிடத்தில் நம்பிக்கை கொள்ளவேயில்லை. அது புருஷரிடத்தில் இருக்கிறது. 40இப்பொழுது, யுகத்தின் அடுத்த மாற்றம், போராட்டம் துவங்கியது. நான் இங்கே ஒரு வேத வார்த்தையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் துவக்கி அதை வாசிப்பேன் என்று நான் நினைக்கிறேன். எதைக் குறித்தாவது எதையாவது, நீங்கள் உண்மையாகவே எவ்வளவு நேரம் பிரசங்கிப்பீர்கள், ஆறுமணி நேரத்திற்கு மேல் ஆகாது [சபையார் சிரிக்கின்றனர். ஆசி.) எனவே நாம் சபையோரே நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. நான் 41நாம் இங்கேயிருந்து துவங்குவோம். நீங்கள் உங்களுடைய வேதாகமங்களில், நாம் ஒரு சில நிமிடங்கள் வாசிப்போம். நான் அதைத் தொடர்ந்து வாசிக்க விரும்புகிறேன். ஆகையால் அது முழுவதுமே, தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. நாம் யுகங்களின் மாற்றத்தி லிருந்து திரும்பவும் துவங்குவோம். ஆதாமிலிருந்து, ஆதாமின் யுகத்தி லிருந்து நோவாவின் யுகம் வரைக்கும், இப்பொழுது - இப்பொழுது அந்த நேரம் வருவதற்கு சற்று முன்னர் என்ன சம்பவித்தது என்று நாம் சற்று பார்ப்போமாக. நாம் ஆதியாகமம் 6ம் அதிகாரத்தில் துவங்கி, ஒரு சில வசனங்களை சற்று வாசிப்போமாக. மனுஷர் பூமியின் மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்க ளென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள். இப்பொழுது, நாம் அதை ஒப்பிட்டுப் பார்ப்போம். இப்பொழுது நினைவிருக்கட்டும். இயேசு, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்'' என்றார். இப்பொழுது கவனியுங்கள். இதை இப்பொழுது ஒரு ஞாயிறுபள்ளி பாடம் போன்று ஒன்று அல்லது இரண்டு வசனங்களை கூர்ந்து வாசித்து, பின்னர் இன்னும் அதிகமான வேத வார்த்தைகளோடு நான் தொடர்ந்து செல்லவிருக்கிறேன். மனுஷர் பூமியின் மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: பாருங்கள், தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளைக் கண்டு . இப்பொழுது அதை நீங்கள் கவனித்தீர்களா?தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்க ளென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். தங்களுக்குத் தெரிந்து கொண்டார்கள். 42இப்பொழுது, மகத்தான அநேக வேத சாஸ்திரிகள் நான் வித்தியாசமாய் இருக்க விரும்பவில்லை. நான் அந்தவிதமாய் இருக்க வேண்டும் என்று கருதவில்லை. ஆனால் “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியின் (Lucifer) பொய்யினால் விழுந்துபோன 'தூதர்கள் தங்களுக்கு மனைவிகளை தெரிந்து கொண்டனர். அவர்கள் விழுந்து போன தூதர்கள், உண்மையாகவே அவர்கள் தேவனுடைய குமாரர்கள், அதாவது கிருபையிலிருந்து விழுந்து பூமிக்கு தள்ளப்பட்டு, தங்களை மாம்சத்திற்குள்ளாகிக் கொண்டு மனைவிகளை எடுத்துக் கொண்டார்கள்” என்று வேத பண்டிதர்கள் விசுவாசிக்கின்றனர் என்பது உங்களில் அநேகருக்குத் தெரியும். அது வேத வார்த்தைகளோடு விவாதங்களை உண்டு பண்ணவில்லை என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. ஏனென்றால், முதலாவது ஸ்தானத்தில், விழுந்துபோன தூதர் தன்னை ஒரு மனிதனாக உண்டுபண்ணிக் கொள்வதற்கு முன்னதாக அவன் முதலில் ஒரு சிருஷ்டிகர்த்தனாக இருந்திருக்க வேண்டும். ஒரே ஒரு சிருஷ்டி கர்த்தர்தான் உண்டு. அது தேவன். ஆகவே அதற்கு இடமே இல்லை. இன்னொரு காரியம், “தேவ குமாரர்கள் மனுஷ குமாரத்திகளை தெரிந்து கொண்டார்கள்”. வேதாகமம் தூதர்களின் பால் இனத்தைக் குறிப்பிடுகிறதேயில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? புரிகின்றதா? தூதர்களின் பால் இனம் குறிக்கப்படவேயில்லை. ஒரு பெண் தூதர் இருந்ததாக வேதத்தில் எந்த இடத்திலும் இல்லை. ஏனென்றால் ஸ்திரீயானவள் ஒரு மனிதனின் உபஉற்பத்தி பொருளாயிருக்கிறாள். துவக்கத்தில் ஆதாம், ஆதாமும் ஏவாளுமாய் இருந்ததுபோன்று அவை யாவும் அதேவிதமாயிருக்கும். புரிகின்றதா? அவனுடைய பக்கவாட்டி லிருந்து அவள் எடுக்கப்பட்டாள். எனவே இது - இது விழுந்துபோன தூதர்கள் என்ற அவர்களுடைய விவாதத்தை அது தகுதியற்றதாக்குகிறது. 43ஆனால் நீங்கள் என்னை மன்னிப்பீர்களானால், இங்கே நான் எல்லாம் அறிந்தவனாக காட்டிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்று சிந்திக்க முயற்சிக்க வேண்டாம். ஆனால் அதைப் பற்றின என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன். நான், “இந்த தேவ புத்திரர் சேத்தினுடைய குமாரராய் இருந்தனர். காயீன்கள், காயீனியர்களின் குமாரத்தி களை அவர்கள் அதிக சௌந்தரியமுள்ளவர்களாய் கண்டனர்” என்று நினைக்கிறேன். ஏனென்றால், “சேத்தின் புத்திரர்கள் வந்தனர், அவன் தேவனுடைய குமாரனாயிருந்த ஆதாமின் குமாரனாயிருந்தான்”. ஆனால், “அந்த குமாரன், சாத்தானின் குமாரனாயிருந்த காயீனின் குமாரத்திகள்.” இப்பொழுது நீங்கள் கவனியுங்கள், “அவர்கள் கவனித்தார்கள்'' முடிவு நேரத்தில், தண்ணீ ரினாலான அழிவுக்கு முன்னர், ”காயீனியர்களின் குமாரத்திகள் நன்றாகவும், சௌந்தரியமுள்ளவர்களாயும் கவர்ச்சிகரமாயும் இருந்தனர்“. உங்களுக்கு அது புரிகின்றதா? [சபையோர், ”ஆமென்' என்கின்றனர். - ஆசி.] இப்பொழுது இயேசு, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” என்றார். ஸ்திரீகள் கவர்ச்சியாய் இருந்தனர். எந்தவிதமான ஸ்திரீகள்? காயீனியர்கள், பாருங்கள், தேவனுடைய குமாரர்களை எடுத்துக் கொள்ளுதல், புரிகின்றதா? “தேவனுடைய குமாரர்கள் காயீனிய ஸ்திரீகளை எடுத்துக் கொள்ளுதல்”. 44ஸ்திரீயினுடைய மிதமிஞ்சிய அழகு கடந்த ஐம்பது வருடங்களில் மிகவும் அதிகரித்து விட்டது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் உள்ள ஒரு புகைப்படத்தை, ஒரு கவர்ச்சியான ஸ்திரீ எந்தவிதமாய் காணப்பட்டாள் என்று பாருங்கள். அன்றொரு நாள், ஒரு யுத்தங்களின் சரித்திரம் என்ற ஒரு புத்தகத்தில் நான் பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த பியர்ல் ஒயிட் (Pearl White) சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், அவளுடைய காதலனாகிய ஸ்காட் ஜேக்ஸன் (Scot Jackson) என்பவனால் குத்தப்பட்டபோது, அந்த ஸ்திரீ எப்படி காணப்படுகிறாள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது மேரிபோனிவில் (Mary Bonneville) மற்றும் இன்னும் அநேக கவர்ச்சியான ஸ்திரீகள் என்று அழைக்கப்படுகின்றவர்களை சுமார் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தவர்களை இன்றைய பெண்களோடு அவர்களை ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் நிழலிலும் கூட நிற்கமாட்டார்கள். நிச்சயமாக முடியாது. திடகாத்திரமானவர்கள். ஸ்திரீகள் இனிமையாகவும், பெண்மையாகவும், இன்னும் அதிக கவர்ச்சியாகவும் ஆகிவிட்டனர். அது என்ன? அவர்கள் தாங்களாகவே மிகவும் கவர்ச்சியாய் உடுத்திக்கொள்கிறார்கள். வழக்கமாக ஸ்திரீகள் விரிவான பெரிய ஆடைகளையும், கையினை மறைக்கும் சட்டைகளையும், நீண்ட பாவாடைகளையும் அணிந்து தங்களுடைய சரீரங்களை மறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால், ஆண்கள் அவர்கள் மேல் இச்சை கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களை மனைவியாய் தெரிந்து கொண்ட ஒரு மனிதனுக்காகவே அவர்கள் ஜீவிப்பார்கள். இன்றைக்கோ ஸ்திரீகள் தங்களை சிறிய ஆடைகளில் தாராளமாக வெளிப்படுத்துகிறார்கள். நெறியற்ற தன்மையானது, அப்பேர்ப்பட்ட ஒரு அசைவாயும், அது சிந்தனைக்கு அப்பாற்பட்டதாயிருக்கிற அளவிற்கு ஒரு மூர்க்கமான நடத்தையாயுமிருக்கிறது. 45நான் சிக்காகோவில் இருந்தபோது, சிக்காகோவைப் பற்றின ஒரு ஆய்வு அறிக்கையை அன்றொரு நாள் நான் வாசித்தபோது, அது அவ்வளவு பயங்கரமாய் இருந்தது. நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், பிர்மிங்ஹாம் இன்னும் அநேக மகத்தானதாய் தலைசிறந்து விளங்கும் பட்டணங்களும், சமூக சம்பந்தமான சங்கங்களும், இந்த சங்கத்திற்கு இந்தவிதமாய் ஒன்ற கூடி வந்து குடும்பங்குடும்பங்களாய், அயலகத்தார் மூலமாக, இந்த சங்கத்திற்குள் சேர்ந்து கொள்ளுகிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட சந்திக்கும் ஸ்தலத்திற்குச் சென்று தங்களுடைய சாவிகளை எடுத்து, அவைகளை ஒரு தொப்பிக்குள்ளாக போட்டு வைக்கிறார்கள். ஸ்திரீகள் அங்கு சென்று ஒரு சாவியை எடுக்கிறார்கள். அவர்கள் மீண்டும் சந்திக்கும் வரைக்கும் அதுதான் அவளுடைய கணவன். அதுதான் நம்முடைய அமெரிக்க பெண்மணிகள். நீங்கள் பாருங்கள். அது எதைக் காட்டுகிறதென்றால், மீண்டுமாய் திரும்புகிறார்கள், ஆதியிலே பால் இனத்தால் ஆதியில் ஸ்திரீகளோடு துவங்கினது போன்று இப்பொழுது அது அதே விதமாக முடிவிலே முடிகிறது. இல்லை ஒரு உத்தமமான நல்ல ஸ்திரீக்காக தேவன் அதை ஆசீர்வதிக்க வில்லை . ஏசாயாவில் வாசியுங்கள். கடைசி நாட்களில் எப்படி இவர்கள் தப்பிக்கொள்வார்கள் என்று அவன் கூறினபோது, பூமியின் மேலிருக்கும் இந்த எல்லா அழிந்து போகிற காரியங்களிலிருந்து சீயோனின் குமாரத்திகள் தப்பிக்கொள்வார்கள் என்றான். 46இப்பொழுது, “தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள்”. இப்பொழுது கடைசி காலத்தின் ஒரு மகத்தான அடையாளம். நாம் இன்னொரு வசனத்தையும் வாசிப்போம். அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; திருமணமாகுதல், இது சம்பவித்த பிறகு உடனடியாக, லூக்கா அதை நமக்கு கூறுகிறான். நான் அதை இங்கே எழுதி வைத்திருக்கிறேன் லூக்கா 7:27 அதை கூறியுள்ளது என்று நான் கருதுகிறேன். எப்படியாய் அதாவது, லூக்கா 17:27 அதை கூறியுள்ளது, அதாவது எப்படியெனில், “நோவாவின் நாட்களில் அவர்கள் பெண் கொண்டு பெண் கொடுத்தார்கள் ” அது எப்படியிருந்தது என்று பார்த்தீர்களா? அதே காரியம்தான். ஆண்கள் கவர்ச்சியையே மேல்நோக்கிப் பார்த்தனர். “தேவ குமாரர்கள்'' ஒரு கோட்டையை பாதுகாத்துக்கொண்டு இருக்க வேண்டியவர்கள் ”மனுஷகுமாரத்திகளை நோக்கிப் பார்த்தனர்,“ அவர்கள் எப்படி அவ்வளவு கவர்ச்சியாயும், அழகாயும் இருந்தனர்” அவர்களுக்கு மனைவிகளை தெரிந்து கொண்டார்கள். அவர்கள் பெண் கொண்டும், அவர்கள் பெண் கொடுத்தும் வந்தனர். அதே காரியத்தை அவர்கள் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். புரிகின்றதா?அப்பொழுது கர்த்தர் : என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். 47கவனியுங்கள். இந்த சாமர்த்தியமுள்ள, கல்விகற்ற காயீனியப் பெண்கள், இல்லை காயீனின் வம்சத்திலிருந்து வந்தவர்கள். சேத்தினுடைய இந்த தாழ்மையான நாட்டுப்புற பையன்களை மணந்து கொண்டனர். அங்கிருந்து “இராட்சதர்” உண்டாகி, “பேர் பெற்றவர் களாய்” இருந்தனர். அவர்கள் மகத்தான விஞ்ஞானிகளும், மகத்தான மரவேலைக்காரர்களுமாய் ஆகத்தொடங்கினர் என்று நாம் கண்டறிகிறோம். மகத்தானவர்களும், சமர்த்தரும், கல்வியறிவுள்ள ஜனங்களாயும் இருந்தனர். அவர்கள் ஒரு மகத்தான பொருளாதாரத்தை உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் அப்பேர்ப்பட்டதான ஒரு விஞ்ஞான காலத்தில் ஜீவித்து, இன்றைக்கு நம்மால் கட்டமுடியாத கூர்நுனி கோபுரங்களைக் கட்டினார்கள். அவர்கள் சிறகுடைப் பெண்முகச் சிங்க உருவச்சிலையையும் மற்றும் இன்றைக்கு நம்மால் திரும்பச் செய்ய முடியாத, பாறைகளில் நாம் காண்கிற மகத்தான சின்னங்களையும் காலத்தின் போக்கில் கட்டினார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் அவர்களுடைய அறிவின் மேல் சார்ந்திருந்து விஞ்ஞானிகளாயும், சமர்த்தரான மனிதர்களாயும் பேர்பெற்ற மனிதர்களாயும் ஆனார்கள். ஆனால் தேவ குமாரர்களோ தாழ்மையாகவே தரித்திருந்து, அப்படிப்பட்டதான அக்காரியங்களிலிருந்து விலகியிருந்து, முடிவிலே எல்லாக் காரியங்களையும் சுதந்தரித்துக் கொள்ளப் போகிறோம் என்பதை அறிந்தவர்களாய், தேவன் மேல் நம்பிக்கையாயிருந்தனர். புரிகின்றதா? ஆகையினால் ஜனங்கள் இன்றைக்கு, “அவர்கள் சமர்த்தர்கள், அவர்கள் இதையெல்லாம் பெற்றிருந்தனர். நாங்கள் இதையெல்லாம் செய்கிறோம்'' என்கிறார்கள். நாம் இருந்ததைக் காட்டிலும் அவர்கள் அவ்வளவு சாமர்த்தியமுள்ளவர்கள். நாமோ இருந்ததைக் காட்டிலும் தேவனை விட்டு நாம் அதிக தூரம் தள்ளியிருக்கிறோம். புரிகின்றதா? நீங்கள் நேராகவே உங்களை விலக்கிக் கொள்ளுகிறீர்கள். சரி. 48தொடர்ந்து கீழே வாசிக்க இதற்கு மேல் நான் நேரம் எடுத்துக் கொள்ளமாட்டேன். சில சமயம், உங்களுக்கு ஒரு தருணம் கிடைக்கும் பொழுது அந்தக் காரியங்கள் எப்படி சம்பவித்தன என்று ஆதியாகமம் 6-ம் அதிகாரத்தில் அதற்கு கீழே நீங்கள் வாசித்துப் பாருங்கள். ஒரு சிறிய குறிப்பு, அதை நான் வாசிப்பேன் என்று நான் நினைத்தேன். அதை நான் இங்கே எழுதி வைத்திருந்தேன். வெறுமனே ஒன்று அல்லது இரண்டு வசனங்களை, அதை நான் இந்த காலத்திற்கும் நோவாவின் காலத்திற்கும் இணையாக இருக்கிறதை உங்களுக்குக் காட்டுவதற்கு நான் வாசிக்கவுள்ளேன். இப்பொழுது ஜனங்கள் பெண் கொண்டும் பெண்கொடுத்துக் கொண்டுமிருக்கிறதை நாம் காண்கிறோம். நாம் பெண்களுடைய அழகைப் பார்க்கிறோம். தேவகுமாரர்களுக்கு தங்களை அதிக கவர்ச்சியுள்ளவர்களாக ஆக்குவதற்காக, அது அவர்களுடைய ஆடைகளையே களைந்துவிட்டது. இப்பொழுது இந்தப் பகுதியின் செய்தியை அப்படியே தூக்கி ஸ்திரீகளின் மேல் வைப்பது அல்ல. இங்கு பெண்மணிகளைப் போன்றவர் களுக்காக நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். அது கௌரவமான பெண்கள், வாலிபமான பெண்கள் இன்னமும் மரியாதையும், கனத்திற்குரியவர்களாயும் இருக்கின்றனர். அந்த விதமாக காட்டிக் கொள்வதில்லை இப்பொழுது இன்றைக்கு சராசரி ஸ்திரீகள், ஏவாள் இருந்தது போன்று, அத்தி இலைகளுக்கு போய்விட்டார்கள். “அத்தி இலை ” என்பது உண்மையாகவே மனிதனால் உண்டாக்கப்பட்ட முறைமையாய் உள்ளது. அது அரைக்கால் சட்டைகள், புகைத்தல், தலைமுடியை வெட்டிக் கொள்ளுதல், கவர்ச்சியாயிருத்தல் என்பவைகளாய் உள்ளது. அவர்கள் அதை எதற்காகச் செய்கிறார்கள், தங்களுடைய புருஷன்மார்களுக்கு காட்சியளிப்பதற்காகவா? அப்படி அவர்கள் செய்தால், அப்பொழுது அவன் ஒரு தேவனுடைய குமாரன் அல்ல; அவன் ஒரு காயீனியனாக இருக்கிறான். எனவே அவன் ஒரு தேவனுடைய குமாரனாயிருந்தால் “உன்னுடைய முகத்தைக் கழுவிக்கொண்டு, ஏதாவது ஆடைகளை நீ அணிந்து கொள்” என்று உங்களுக்குக் கூறுவான். புரிகின்றதா? சரி. 49இப்பொழுது, தேவன் இந்த சமயத்தில் அவருடைய பிள்ளை களுக்காக மீண்டுமாய் தம்முடைய வார்த்தையை அனுப்புவதையே அவர் தெரிந்து கொண்டார். அவர் ஒரு தீர்க்கதரிசியை தெரிந்து கொண்டார். “கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்திற்கு வருகிறது”. நோவாவும் ஏனோக்கும் என்ன ஒரு அழகான பாவனையாய் உள்ளனர் ! யாரோ ஒருவர் அநேக சமயங்களில், ஜனங்கள் 50கேள்விகளில் சிலவற்றை நான்-நான் கவனித்தேன். ஆனால் அதற்கு நான் பதிலளிக்கவில்லை. அவர்கள் அந்த கேள்வியை கேட்டனர். “சகோதரன் பிரான்ஹாம், நான் உம்மோடு ஒத்துப்போக வில்லை'' என்று கூறப்பட்டிருந்தது. இப்பொழுது நான் கூறிக்கொண்டிருக்கிற அருமையான சில கருத்துரைகளை எழுதிய விலையேறப் பெற்ற சகோதரன். சகோதரன் அந்த நபருடைய பெயர் என்ன? நாம் பிரசங்கிப்பதற்காக செல்கிறோம். இப்பொழுது அவர் எங்கிருக்கிறார். இந்த அடுத்தக் கூட்டம் அங்கே தென்பைன் (South Pine) அல்லது தெற்கத்திய பைனிலா? [யாரோ ஒருவர், ”பார்க்கர்“ என்கிறார். - ஆசி.) பார்க்கர். (Parker) தாமஸ் பார்க்கர் (Thomas Parker). அவர், ”நான் சகோதரன் பிரான்ஹாமோடு ஒத்துப்போக முடியாத ஒரு காரியம் இருக்கிறது'' என்றார். “சபை உபத்திரவத்தினூடாக செல்லாது என்று அவர் விசுவாசிக்கிறார்” என்றார். “சபை சுத்திகரிப்பிற்காக உபத்திரவத்தி னூடாக செல்லும் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றார். அப்படி யானால் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்திற்கு என்ன நேர்ந்தது? புரிகின்றதா? எந்த உவமையிலும் அல்லது எந்த வார்த்தையிலும், சபையானது உபத்திரவத்திற்குள்ளாக செல்கின்றது என்று எங்கேயும் குறிப்பிடவில்லை . [யாரோ ஒருவர் ஒரு சுழல் விசிறியை நகர்த்துகிறார் - ஆசி.] அவர்கள் தலை வழுக்கையாக இல்லாத இந்த மனிதர்களண்டையில் வைக்க வேண்டும். அவர்களுக்கு சீக்கிரத்தில் தொண்டை கரகரப்பாகாது. சபையானது உபத்திரவ காலத்தினூடாகச் செல்கிறது என்று ஒரு இடத்திலும் இல்லை. கிறிஸ்துவின் இரத்தம், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பூசுதலின் முழுமை, எல்லா பாவத்தையும் சுத்திகரிக்கிறது. நான் ஏன் சுத்திகரிக்கப்பட வேண்டும்? நாம் ஒவ்வொரு நாளும் சுத்திகரிக்கப் படுகிறோம். உபத்திரவமே கிடையாது. கவனியுங்கள். பரிசுத்த யோவான் 5:24-ல் இயேசுவானவர் என்ன கூறினார் என்பதை கவனியுங்கள். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிற வனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.'' ஆமென். 51ஏனோக்கு, தீர்க்கதரிசி! யூதர்களுக்கும், மீந்திருப்பவர்களுக்கும், தேவனுடைய ஊழியக்காரன் நோவா ஒரு பாவனையாய் இருக்கிறான். கர்த்தருடைய வருகையைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஏனோக்கு மறுரூபமாக்கப்பட்டான். ஜலப்பிரளயத்திற்கு முன்னதாகவே எடுத்துக் கொள்ளப்பட்டான். பூமியின் மேல் வித்தை பாதுகாப்பதற்காக ஜலப்பிரளயத்தினூடாக நோவா கொண்டு செல்லப்பட்டான். இப்பொழுது தேவன் அவருடைய வார்த்தையை அவருடைய தீர்க்கதரிசியாகிய நோவாவின் மூலமாக அனுப்பினார். அப்பொழுது நோவாவும், ஏனோக்கும் தீர்க்கதரிசனம் உரைக்கத் துவங்கினர். பின்னர், ஜலப்பிரளயம் தாக்க துவங்குவதற்கு முன்னர் என்ன சம்பவித்தது? ஏனோக்கு மேலே சென்றான். நோவா ஜலப்பிரளயத்தினூடாகச் சென்றான். புரிகின்றதா? ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். ஏனோக்கை கவனித்துக் கொண்டிருப்பதுதான் நோவாவின் அடையாள மாய் இருந்தது. ஏனோக்கு காணப்படாமற்போனபொழுது, ஜலப்பிரளயம் சமீபமாய் இருந்தது என்பதை நோவா அப்பொழுது அறிந்து கொண்டான். ஏனென்றால் அவன் தன்னுடைய கண்ணை ஏனோக்கின் மேல் வைத்துக் கொண்டிருந்தான். 52இப்பொழுது, சாத்தான் இந்த நேரத்தில், ஏதேன் தோட்டத்தில் அவன் செய்ததான அதே முறைமையை அமைத்தான். அதாவது இந்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்கு எதிராக விவாதித்தல். அதே காரியம்! இப்பொழுது சாத்தான் தன்னுடைய முறைமையை அமைத்தான். இப்பொழுது இதனோடு தொடர்பு கொள்வதற்கு ஒன்று அல்லது இரண்டிற்கும் அதிகமான ஜனங்கள் அவனுக்கு இருந்தனர். அவன் கோடிக்கணக்கானவர்களோடு தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. ஜலப்பிரளயத்திற்கு முற்பட்ட காலத்தில் அநேகமாக இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் அதிகமான ஜனங்கள் இருந்தனர். அவர்கள் பூமியின் மீது எல்லா இடங்களிலும் பலுகிப் பெருகினார்கள். அந்த நாட்களில் பூமிக்குரிய ஜனங்கள் அதிகமாய் இருந்தனர். அநேகமாக இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் அப்பொழுது அதிகமாகவே இருந்தனர். இப்பொழுது கவனியுங்கள், சாத்தான் ஒழுங்கின்படியாக (ஏவாளோடு அமைத்ததான அந்த ஒன்றல்ல), அவன் ஒரு முறைமையை அவனுக் கென்று அமைத்துக் கொண்டான். அது என்னவாக இருந்தது? தீர்க்கதரிசிகளிடத்திற்கு வந்ததான கர்த்தருடைய வார்த்தையை எதிர்த்துப் போராடுவதற்கே. உங்களுக்குப் புரிகின்றதா? [சபையோர், ''ஆமென்“ என்கிறார்கள். - ஆசி.) அவன் ஒவ்வொரு நேரத்திலும் அதே பழைய சூழ்ச்சி முறையை உபயோகிக்கிறான். தேவன் தம்முடைய மாறாத வார்த்தையோடு தரித்திருக்கிறார். 53ஒரு பேழையை கட்டிக்கொண்டு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு நோவாவும், ஏனோக்கும் இதோ வருகிறார்கள். இப்பொழுது கவனியுங்கள். சாத்தானுடைய முறைமை தேவனுடைய ஒழுங்கு முறையை எள்ளி நகையாடியது. இப்பொழுது அதை இன்றைய நாளின் “பரிசுத்த உருளைகள் மற்றும் இன்னும் என்னவெல்லாமோ” என்பதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். புரிகின்றதா? பரியாசக்காரர்கள், வேதம் கூறியுள்ளது, அவர்கள் தேவனுடைய ஒழுங்குமுறையை ஏளனம் செய்தனர். சாத்தானுடைய முறைமையானது தேவனுடைய ஒழுங்குமுறையை எள்ளி நகையாடியது. அவர்களுடைய சொந்த விஞ்ஞானத்திற்கும், விவாதங்களுக்கும் இது நிற்கவில்லை என்று அவர்கள் நினைத்தனர். இப்பொழுது அவர்கள், “அங்கே உயரே மலையின் மேல், அந்த பேழையை கட்டிக் கொண்டிருக்கின்ற அந்த வயோதிய நபர், அங்கே எங்கேயோ உயர இருந்து தண்ணீர் வரப்போகிறது என்று அவன் கூறுகிறான்.' இப்பொழுது உலகத்திலேயே மிகச்சிறந்த விஞ்ஞானிகளை நாங்கள் பெற்றிருக்கிறோம். இப்பொழுது அநேகமாக அவர்களிடத்தில் நேராக சந்திரனுக்கும் மற்றெல்லாவற்றிற்கும் எய்யக்கூடிய (Radar) தொலை நிலை இயக்கமானி இருந்திருக்கலாம், அதை அனுப்பி அங்கே தண்ணீர் இல்லையென்று நிரூபிக்கக்கூடியவர்களாய் இருந்திருப்பர். இப்பொழுது அங்கே யிருந்து எப்படியாவது ஏதாவது வரமுடியுமா? வயோதிப நபரே, நீ பைத்தியக்காரனாயிருக்கிறாய்'' என்றனர்.”ஆனால் நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடைய வனாய் இருக்கிறேன்“. அப்படியே பேழையை கட்டினான். சரியாக பேழையின் கதவண்டையில் நின்று, சுவிசேஷத்தை பிரசங்கித்துக்கொண்டும், கட்டிக்கொண்டும், ஏனோக்கை கவனித்துக் கொண்டிருந்தான். சாயங்காலத்தில் அவன் உள்ளே வந்தபோது, “அங்கே கீழே இருக்கின்ற அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்களா?” என்றான். “இல்லை. அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். அவர்கள் என் மேல் அழுகின முட்டையை எறிந்தார்கள். மற்றெல்லாவற்றையும் செய்தார்கள் ”. “இங்கே மேலேயும் அதே காரியத்தைச் செய்தார்கள். ஆனால் நாமோ தொடர்ந்து செல்வோம்.'' புரிகின்றதா? அவர்கள் என்னை ஒரு பரிசுத்த உருளை” என்றும், மற்றெல்லா விதமாகவும் அழைக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் பரவாயில்லை. அவர்கள் எல்லோரும் ஜெபக்கூட்டத்திற்காக ஒன்றாகக் கூடி பாருங்கள், சரியாக இன்றைக்கு செய்து கொண்டிருக்கிற விதமாகவே, அதேவிதமாய் சென்றனர். ஏனென்றால் அவர்கள் அரணாக பாதுகாக்கப் பட்டிருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்கு பின்னே நின்று கொண்டிருந்தனர். இப்பொழுது பொதுவாய், சாதாரணமாய் விவாதிப்பவன், அது அர்த்தமற்றது“ என்பான். ஒரு சமயம் ஒரு ஸ்திரீ கூறினாள். 54ஒரு சமயம் நான் இந்தப் பையன் பாப்டிஸ்ட் சபையில் ஞாயிறு பாடசாலையிலே போதித்தான். ஒரு இரவு நான் அங்கே பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் அவனை கீழ்ப்பட்டணத்தில் சந்தித்தேன். நான் என் இரு சக்கர மிதிவண்டியில் போய்க் கொண்டிருந்தேன். நான் கீழ்ப்பட்டணத்தில் அவனை சந்தித்தேன். அவனும் ஒரு இரு சக்கர மிதிவண்டியில் இருந்தான். அவன் ஒரு ஓரமாய் போய் நின்றான். அவன், “பில்லி அன்றொரு இரவு நீர் பேசுவதை கேட்கும்படி நான் வந்தேன்” என்றான். தொடர்ந்து, “அந்த ஸ்திரீ அழ ஆரம்பிக்கும் வரைக்கும், எல்லா ஜனங்களும் 'ஆமென்' என்று சொல்லும் வரைக்கும், நீர் கூறிக்கொண்டிருந்ததை நான் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன்” என்றான். ஆனால் என்னால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை “ என்றான். புரிகின்றதா? அவன், ”நீர் சரியாக ஏதோ ஒன்றை கூறிக்கொண்டிருக்கும்போது 'ஆமென்' என்று ஜனங்கள் கூறுவதை கேட்பது அது என்னுடைய முதுகில் நடுக்கங்கொள்ளச் செய்தது'' என்றான். நான், “சகோதரனே அது அந்த விதமாய் என்னை பாதிப்ப தில்லையே'' என்றேன். நான், ”அவன் கூறினதை கூறினேன். நான், “நான் உனக்குச் சொல்லுவேன்” என்றேன். நான், “அவர்கள் ஆமென் ” என்ற கூறும் அந்த சிறிய சத்தம் மற்றும் அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களில் உமக்கு விசுவாசம் இல்லையா?“ என்றேன். ”இல்லை. நான் அதை விசுவாசிக்கிறதில்லை“ என்றான். நான், “நீர் எப்பொழுதாவது பரலோகத்திற்குச் செல்ல நேர்ந்தால் நீர் விரைத்துப் போவீர்” என்றேன். நான், “ஏனென்றால், அவர்கள் அது உங்கள் முதுகில் ஒரு நடுக்கத்தை ஓடச் செய்ததானால் அங்கே தேவனுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும் தூதர்கள் இரவும் பகலுமாய், ”பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்' என்று சத்தமிடும் போது அது உங்களுக்கு என்னவாக இருக்கப்போகிறதோ“? என்றேன். ஏன், நீங்கள் எப்பொழுதுமே ஜீவிக்கும் மிக அமைதியான உலகமாய் இது இருக்கும்”. அது உண்மை . நரகத்தில் அழுகையும், பற்கடிப்பும் இருக்கப் போகின்றது. பரலோகத்திலோ ஆரவாரமும், சத்தமிடுதலும் இருக்கப் போகின்றது. எனவே நீங்கள் - நீங்கள் எப்போதும் இருக்கப்போகும் அமைதியான இடத்தில் நீங்கள் சரியாக இப்பொழுது இருக்கிறீர்கள். ஆகையினால் ஒரு இடத்தில் அல்லது மற்ற ஒன்றில் நீங்கள் அதில் இருக்கும்படி பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே தேவனுடைய வார்த்தைக்குப் பின்னாக இருப்பதையே நான் என்னுடைய தெரிந்து கொள்ளுதலாக எடுத்துக்கொள்ள விரும்புவேன். நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்களா? [சபையோர் “ஆமென்” என்கிறார்கள். - ஆசி.) அதன் பேரிலேயே தொடர்ந்து போய்க்கொண்டேயிருங்கள். “அது கர்த்தர் உரைக்கிற தாவதாக இருக்கிறது. கர்த்தர் உரைக்கிறதாவது.” தொடர்ந்து போய்க் கொண்டே இருங்கள். சரி. 55ஆம், அவர்களுடைய விஞ்ஞான விளக்க விவரத்திற்கு ஏற்றாற் போல் அது நிற்கவில்லை. தேவன் கூறினது போலவே, எடுத்துச் சொல்லுவதும், முன்னறிவிக்கவும், பாஷைகளில் பேசுவதும், வியாக்கியானிப்பதும், இந்த வித்தியாசமான எல்லா வரங்களும் மற்றும் தேவனுடைய ஆவியினால் இருதயத்தின் நினைவுகளை வகையறுப்பதை யும் இன்றைக்கு அவர்கள் காணும்பொழுது, “அது ஒரு மனோதத்துவம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். புரிகின்றதா? அவர்கள் அதை உள்ளே கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அவர்கள், “நல்லது, அது செய்யப் படுகின்றதை நாங்கள் காண்கிறோம், ஆனால் அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது வெறுமனே ஒரு மனித மனோதத்துவமாக இருக்கிறது'' என்கிறார்கள். ஆனால் அதுவே ”கர்த்தர் உரைக்கிறதாவது“ என்பதாய் உள்ளது. இயேசு, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” என்று கூறியுள்ளார். எனக்குத் தேவையானது எல்லாம் அதுதான். எவ்வளவு காலம்? “உலகத்தின் முடிவு பரியந்தம்”. அவர்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஏற்றாற்போல் அது நிற்கவில்லை. எனவே அவர்கள் அதைப் பார்த்து சிரிக்கிறார்கள். நோவாவின் நாட்களில் அவர்கள் அதே காரியத்தை செய்தார்கள். ஆம், அது அவர்களுடைய வாத ஆதாரத்திற்கு நிற்கவில்லை. உங்களால் அதை விவாதிக்க முடியாது. ஆனால் அது மாறாத தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. சரி. 56எனவே சாத்தான் அவனுடைய தாக்குதலை நோவாவினுடைய கூட்டத்தார் மீது ஏதேனில் அவன் செய்ததுபோலவே செய்தான். ஒவ்வொருவரும் விசுவாசத்தினால் தெரிந்துகொள்ள வேண்டியதாய் இருந்தது. மகிமை! விசுவாசத்தினாலேயன்றி, நீ வாங்கின ஏதோ ஒன்றினால் அல்ல. உங்களால் அதைச் செய்யக்கூடிய ஒரே வழி விசுவாசத்தினால் தான். ஒரு ஸ்தாபன பொய்யை நம்புவதென்பது, முதலாவது தேவனுடைய வார்த்தையை மறுப்பதாக இருக்கிறது. நீங்கள் இரட்சிப்பைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுதான் அது. நீங்கள் அதை அவிசுவாசிக்கக்கூடிய ஒரே வழி அதுதான். தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதற்குப் பதிலாக நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை பிசாசின் ஒரு போலியான பொய்யின் மேல் விவாதத்தின் மூலமாக வைப்பதாகும். அதாவது நீங்கள் மறுபடியுமாய் பிறந்தாக வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறக்கும் பொழுது, விசுவாசிக்கிற வர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். நான் அதை நேசிக்கிறேன். அது எனக்கு நன்மையாக தோன்றுகிறது. புரிகின்றதா? மற்றவர்கள் என்ன கூறியிருந்தாலும் கவலைப்பட வேண்டிய தில்லை, அவருடைய வார்த்தையை விசுவாசியுங்கள். “தேவன் அவ்வண்ணமாய் கூறினார். தேவன் அவ்வண்ணமாய் கூறியிருக்கிறார்.'' ”நல்லது, இது இன்னின்னது'' என்று கூறினால், “ஆனால் தேவன் அவ்வண்ணமாய் கூறினார்” என்று கூறுங்கள். “நல்லது, நாங்கள் பிரஸ்பிடேரியன்.'' ”எனக்குக் கவலையில்லை, ஆனால் தேவன் அவ்வண்ணமாய் கூறியுள்ளார்.'' “நாங்கள் பாப்டிஸ் ”எனக்குக் கவலையில்லை. தேவன் அவ்வண்ணமாய் கூறினார்“. புரிகின்றதா? ”நாங்கள் கத்தோலிக்கர்.'' “தேவன் அவ்வண்ணமாய் கூறினார்.'' புரிகின்றதா? இவ்விதமாய் தரித்திருங்கள். ”நல்லது, எங்களுடைய போதகர் அநேக பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.'' “ஆனால், தேவன் அவண்ண மாய் கூறியுள்ளார்.'' ”எங்களுடைய போப்பாண்டவர்கள் இதைப் பெற்றுள்ளனர், எங்களுடைய பேராயர்கள் இதைப் பெற்றுள்ளனர்“. 57“ஆனால் தேவன் அவ்வண்ணமாய் கூறியுள்ளார்.'' அங்கேயே தரித்திருங்கள். அது உங்களுடைய பாதுகாவலாய் இருக்கிறது. அது தேவனுடைய வார்த்தையினால் பாதுகாக்கப்பட்டு, சுற்றப்பட்டு இருக்கிறது. எப்படி நீங்கள் ஏன், நீங்கள் வார்த்தையினால் ஞானஸ்நானம் பண்ணப் பட்டிருக்கிறீர்கள். அது உண்மை . “நாம் எல்லோரும் ஒரே ஆவியினாலே தேவனுடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். அந்த சரீரம் கிறிஸ்துவாக இருக்கிறது.' அது சரிதானே? [சபையோர், ”ஆமென்“ என்கின்றனர். - ஆசி.] ஆம் ஐயா . ”நாம் எல்லோரும் ஒரே ஆவியினாலே தேவனுடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்“ ஆகையால் நீங்கள் தேவனுக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட் டிருக்கிறீர்கள். நீங்கள் தேவனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள். அவருடைய வார்த்தையே உங்களுக்கு கோட்டையாக இருக்கிறது. அவர் ஒரு வல்லமையான துருகமாயிருக்கிறார். ”கர்த்தரின் நாமம் பலத்த துருகம். நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான்“. அவரே என் கோட்டையும், என் பரிசையும், என் கேடகமும், என் பாதரட்சைகளும், என் தலைசீராவும், என் மார்க்கவசமும், என் இருதயமும், என்னுடைய எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய், தேவனே எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். தேவனே ! அவருக்குள் சுற்றப்பட்டு, உலகத்திற்கு மரித்து, உயிர்த்தெழுதலில் அவரோடு கூட எழுந்தும் இருக்கிறோம். ”இனி நானல்ல, கிறிஸ்துவே நமக்குள் பிழைத்திருக்கிறார்“. அந்த ஆனந்தமான ஆயிர வருட அரசாட்சியின் நாளின் வருகைக்காக நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தர் வரும்போது, காத்துக்கொண்டிருக்கும் தம்முடைய மணவாட்டியை விரைவில் கொண்டு செல்வார்; உலகமோ ஏங்கி தவித்துக்கொண்டும், அந்த நாளின் இனிமையான விடுதலைக்காக கதறிக்கொண்டும் இருக்கிறது. நம்முடைய இரட்சகர் பூமிக்கு மீண்டும் திரும்பும்போது, (அப்பொழுது சாந்தகுணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள்.) 58ஒவ்வொருவரும் விசுவாசத்தினால் தெரிந்து கொண்டாக வேண்டும். நீங்கள் அதைச் செய்தாக வேண்டும். நீங்கள், இன்றைக்கு நீங்கள் பிசாசினுடைய பொய்யை விசுவாசிக்க வேண்டும் அல்லது தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். அதாவது இரண்டில் ஒன்று. இப்பொழுது நாம் கண்டறிந்தது நாம் இங்கிருந்து செல்வதற்கு முன்பாக ஒரு நிமிடம் நோவாவை எடுத்துக் கொள்வோம். என்னால் நோவாவை யூகிக்க முடிகிறது, உங்களுக்குத் தெரியும், அவன் சில காரியங்களினூடாக போகவேண்டிய தாய் இருந்தது. அவன் வீதியினூடாக போய்க்கொண்டு “நியாயத் தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது'' என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கிறதை நான் யூகிக்கிறேன். ஏன்? அவர்கள், ”நீ எப்படி அறிவாய்? எந்த விதமான நியாயத்தீர்ப்பு?'' என்றனர். “தேவன் இந்த பாவமான தேசத்தை அடிக்கப்போகிறார். தேவ குமாரர்கள் காயீனின் குமாரத்திகளை மணந்து கொண்டனர். அவர்கள் அங்கே இருக்கிறார்கள். நீங்கள் என்னவாக ஆனீர்கள் என்று பாருங்கள். நீங்கள் தேவனிடத்திலிருந்து திரும்பி விட்டீர்கள். நீங்கள் உங்களுடைய மகத்தான, மார்க்கரீதியான முறைமைகளை பெற்றுக் கொண்டீர்கள். நீங்கள் இந்த எல்லாக் காரியங்களையும் பெற்றுக் கொண்டீர்கள். ஆனால் தேவன் பூமியை அடிப்பார்”. பாவம் வயோதிப மனிதன், அவன் ஒருவிதமான அவனை அப்படியே விட்டு விடுங்கள் என்றனர். புரிகின்றதா? அவன் ஆனால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாய் இருந்தான். அவன் என்ன கூறிக்கொண்டிருந்தான் என்பதை அவனால் நிரூபிக்க முடிந்தது. ஆனால் அவர்களோ அதை விசுவாசிக்கவில்லை. புரிகின்றதா? அவன் கர்த்தருடைய வார்த்தையை உடையவனாய் இருந்தான். 59இப்பொழுது, நாளுக்கு நாள் அவர்கள் சிரித்து பரியாசம் செய்திருக்கலாம். பிள்ளைகள் அவனைப் பார்த்து ஹா - ஹா என்று சிரித்திருக்கலாம். ஆனால் எப்படியிருந்தாலும், நோவா தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே போனான். எப்படியிருந்தபோதிலும் குடும்பத்தினர் அனைவரும், மனம் மாறினவர்கள் அனைவரும் தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருந்தனர். நோவாவை பின்பற்றிக் கொண்டிருந்த அனைத்துமே நோவாவை விசுவாசித்தன. அது உண்மை. உலகம் என்ன கூறினதோ அதை விசுவாசிக்க, அல்லது இந்த வல்லமையான அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசி என்ன கூறினானோ அதை விசுவாசிக்க தெரிந்து கொள்ளுதலை அவர்கள் செய்ய வேண்டியதாயிருந்தது. எனவே அவன், “இப்பொழுது கவனியுங்கள். சபையே இந்நாட்களி லொன்றில் ஏனோக்கு போகப் போகின்றான். அப்படி அது சம்பவிக்கும் போது, ஏனோக்கு போகும் பொழுது, நாம் உள்ளே போவது மேலாக இருக்கும். நாம் ஏனோக்கை தவறவிடப் போகிறோம். அவன் மேலே எடுத்துக்கொள்ளப்பட போகிறான். எனவே நாம் உள்ளே போவது மேலானதாக இருக்கும்'' என்றான். எனவே நாட்கள் கடந்து செல்லச் செல்ல அவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். கொஞ்சம் கழித்து தேவன் அவர்களுடைய சந்தோஷம் எனக்குப் போதுமானதாக உள்ளது. அவர்களுடைய நிந்தனைகள் எனக்குப் போதுமானது உள்ளது. நான் அதைக் கொண்டு வரப்போகின்றேன். இப்பொழுது மிருகங்களை எடுத்துக் கொள், அங்கே போய் “அல்லேலூயா” என்று சுமார் ஐந்து முறைகள் சத்தமிடு, பறவைகள் பறந்து வந்துவிடும். எல்லா சிங்கங்களும், மற்றெல்லாமும் இரண்டு இரண்டாக வரும். “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று நான்கு அல்லது ஐந்து முறைகள் சத்தமிடு, அவைகள் இங்கே வரும்” என்றார். புரிகின்றதா? 60எனவே இப்பொழுது நோவா ஆயத்தமானான், எல்லா மிருகங்களும் உள்ளே சென்றன. பின்னர் நோவாதானே உள்ளே சென்றான். ஆக அவன் உள்ளே சென்றபோது, அவன் கடைசியாக வாசலண்டையில் நின்று கொண்டு, “இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் உள்ளது. கடைசி அழைப்பு” என்று கூறியிருப்பான் என்று நான் யூகிக்கிறேன். அங்கேதான் நாம் இன்றைக்கு நின்றுகொண்டிருக்கிறோம். சகோதரனே பேழையின் வாசலண்டையிலே, கிறிஸ்துவே அந்த வாசலாக இருக்கிறார். நீங்கள் அதை அப்படியே எடுத்துக்கொண்டு அதில் இன்னும் சிறிது கவனிக்க விரும்பினால், வெளிப்படுத்தின விசேஷத்தை எடுத்து பிலதெல்பியா சபைக்கும் லவோதிக்கேயா சபைக்கும் இடையே, அவர், “இதோ, நான் திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்தேன். நீயோ அதை மறுத்தாய்” என்றார். புரிகின்றதா? அழிவுக்கு முன்னான அந்த மணிவேளையில்தான் சரியாக நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு திறந்த வாசல், ஆனால் அவர்களோ செவி கொடுக்கமாட்டார்கள். இப்பொழுது, அவர்கள் அவரை வெளியே அனுப்பிவிட்டனர். இப்பொழுது அவன் கதவண்டை நின்று, “வேளையானது சமீபமாய் உள்ளது. நான் உரைத்த தேவனுடைய வார்த்தையானது நிறை வேற்றப்படும்” என்று பகிரங்கமாக கூறினான். அது உண்மை . அவன் பேழைக்குள்ளாகச் சென்றான். 61அவன் பேழைக்குள்ளாக சென்றபொழுது, என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தேவன் கதவை அடைத்தார். அதை அடைக்க ஒருவரும் இல்லாதிருந்தனர். தேவன் அதை அடைத்தார். எல்லாம் அவ்வளவுதான். இரட்சிக்கப்படுவதற்கான கடைசி தருணம் போய்விட்டது. எனவே, நான் யூகித்தேன், சிறுபிள்ளைகள் ஒன்றோடொன்று கரங்கோர்த்து, சுமார் ஐநூறு கெஜமான பேழையை அங்கே சுற்றிக் கொண்டனர். வயோதிப கூட்டத்தினர் பேழையை சுற்றி நடந்து, “நல்லது, அந்த வயோதிப நபர் அங்கேயே மூச்சுத்திணறி மரித்துப் போவான்” என்றனர். புரிகின்றதா? எனவே தொடர்ந்து அதே விதமாகவே அவனைக் குறித்துப் பரியாசம் பண்ணி, எளனம் செய்து கொண்டிருந்தனர். உங்களுக்குத் தெரியும், ஒவ்வொரு நபரும் .... இப்பொழுது கவனியுங்கள். ஒருவேளை இது உங்களுக்கு உதவியாயிருக்கலாம். கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் தேவனுடைய வார்த்தையை பின்பற்றுங்கள், உங்களால் முடிந்த எல்லாவற்றையும் நீங்கள் செய்து முடித்தப்பின்னர் அநேக சமயங்களில், உங்களுடைய விசுவாசம் பரீட்சிக்கப்படுகிறது. இங்கே நம்முடைய சபைவீட்டு ஜனங்களேயல்லாமல் வேறு யாருமில்லை. இப்பொழுது இங்கே நான் அப்படிப்பட்டதான ஒரு நிலையில் நின்று கொண்டிருக்கிறேன். அது உண்மை. என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. எழுப்புதல் முடிந்து விட்டது. உங்களுக்குப் புரிகின்றதா? அடுத்த அழைப்பு எங்கே என்று எனக்குத் தெரியாது. மனவுரமற்ற தோற்றத்தில் அடுத்து என்ன என்று வியப்படைந்த வனாய் நான் நின்று கொண்டிருக்கிறேன். 62நோவா உள்ளே சென்றான். அவன் தேவனுடைய சித்தத்தைப் பின்தொடர்ந்து சென்றான். அவனுக்குப் பின்னாக தேவன் கதவை அடைத்தார். ஆனால் ஏழு நாட்களாக மழையே பெய்யவேயில்லை. அங்கே உள்ளே எல்லா நேரத்திலும் நோவா என்ன நினைத்திருப்பான் என்று வியக்கிறேன். கதவு அடைக்கப்பட்டு, நோவா பேழைக்குள் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன், “பிள்ளைகளே, எந்த நேரத்திலும் நீங்கள் அதைக் கேட்கலாம். நாம் இங்கே உயரே கதவின் மூடியை இழுத்துப் பார்ப்போம்” என்று எண்ணினான். உங்களுக்குத் தெரியும். அவர்கள் அங்கே மேல் தட்டில் இருந்தார்கள். மிருகங்கள் அடித்தட்டில் இருந்தது. பறவைகள் அதற்கு அடுத்த தட்டில் இருந்தன. அவர்கள் மேலே இருந்தனர். அந்த சூரியன் இந்தக் காலையில் அங்கே - அங்கே ஏதோ கொஞ்சம் இருளுவது போன்று உள்ளது, எனவே மழை வரும்“. ஆனால் அடுத்த நாள் காலையில் சூரியன் எழும்பி வந்தது நோவாவை அரைவழியாக விசுவாசித்த அந்த விதமான சில ஜனங்கள் அங்கே மேலே சென்று பேழையை சுற்றி நின்று, “என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஒருவேளை அந்தக் கிழவன் சரியாய் இருக்கலாம். நாம் இங்கே நிற்பது நன்றாய் இருக்கும்” என்று கூறியிருக்கலாம். நல்லது, அப்படியானால் அவர்கள், “ஒரு தவறை கண்டனர்”. தேவனுடைய தீர்க்கதரிசிகள் தவறு செய்வதில்லை. தேவனுடைய வார்த்தை தவறிப் போகமுடியாது. யோனா நினிவேவுக்கு போனதைக் குறித்து நான் பிரசங்கிக்க நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். யோனா பின்வாங்கிப் போனான் என்று அவர்கள் கூறினார்கள். அவன் நிச்சயமாக பின்வாங்கிப் போகவில்லை. அவன் சரியாக தேவனுடைய சித்தத்தில் இருந்தான். சரியாக அப்படியே. அவன் கர்த்தருடைய வார்த்தையை உடையவனாக இருந்தான், அவன் அதில் நடந்தான். 63இங்கே நோவா, “இப்பொழுது பிள்ளைகளே, நீங்கள் எல்லாரும் சுற்றி வாருங்கள். இதுவரையில் வந்திராத முதல் மேகத்தை நீங்கள் ஆகாயத்தில் காண்பீர்கள். அது காலையில் மேலாக வரும்'' என்றான். நல்லது, சூரியன் மேலே வந்தது. ”நல்லது, ஒருவேளை 9.00 மணிக்கு வரலாம். நாம் 9.00 மணிக்கு கவனிக்கலாம். பத்து மணிக்கு? பதினோரு மணிக்கு? பன்னிரண்டு மணிக்கு? மூன்றுக்கு? நான்கிற்கு? ஐந்திற்கு? ஆறுக்கு? வ்யு! நேற்றே அவர் கதவை அடைத்துவிட்டாரே“ என்றான். அவர்களில் சிலர், “நல்லது, என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் சகோதரி சூசியோடு அங்கே அவளுடைய மகத்தான .... சபையில் ஒத்துப்போகப் போகிறேன். அந்த கிழவன் பைத்தியமாய் இருக்கிறான். புரிகின்றதா? அவன் அங்கே மேலே சென்று கதவை அடைத்துக்கொண்டு, மழை கொட்டப்போகிறது என்கிறான். அதோ அங்கேயே அவன் உட்கார்ந்திருக்கிறான். பின்னர் அங்கே அதற்கு ஒன்றுமே இல்லை. புரிகின்றதா? சூரியன் நேராக மேலே எழும்பி வந்து அது எப்பொழுதும் செய்வது போன்று கடந்து போயிற்று. மழை என்ற அப்படியொரு காரியமே கிடையாது'' என்றார்கள். எனவே அவர்கள் வெதுவெதுப்பானவர்கள், அரைவழி விசுவாசிகள், அரைமனதுடைய வர்கள், தேவனை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள், ஜீவிப்பதா அல்லது மரிப்பதா என்ற பாதையின் முடிவில் இருப்பவர்கள். நான் என்ன சொல்லுகிறேன் என்று உங்களுக்குப் புரிகின்றதா? [சபையார், ”ஆமென்' என்கின்றனர். - ஆசி.) உங்களுடைய பாதுகாக்கப்பட்ட நிலைமையில் நில்லுங்கள். ஜீவித்தாலும் அல்லது மரித்தாலும், அமிழ்ந்தாலும் அல்லது மூழ்கினாலும் சரியாக அங்கேயே மாறாதிருங்கள். 64விசுவாசமுள்ளவர்களின் தகப்பனான ஆபிரகாம், பட்டயத்தை உருவி, அவனுடைய பிள்ளையின் தலைமுடியை பிடித்து பின்னிட்டு இழுத்து, அவனுடைய தொண்டையை துண்டிக்கப் போன பொழுது, அவன், “நான் அவரை உணரக்கூடிய உருவகத்தில் உள்ளேன், தேவன் அவனை மரித்தோரிலிருந்து எழுப்ப வல்லவராயிருக்கிறார் என்று நான் நிச்சயித்திருக்கிறேன்'' என்றான். தேவனுடைய வார்த்தையை முடிவு பரியந்தம் பின்தொடர அவன் சித்தங்கொண்டிருந்தான். நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? [சபையோர், ”ஆமென்'' என்கின்றனர். — ஆசி.) அது என்னவாகயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அங்கேயே தரித்து இருங்கள். ஒரு அங்குலம்கூட அதிகமாக போக முடியவில்லை என்பது போன்று எல்லாக் காரியங்களும் தென்பட்டாலும், அந்த அங்குலம் கடந்து செல்லுங்கள். நீங்கள் அந்த மதிலை முட்டினாலும், அதனூடாக தேவன் உங்களுக்கு ஒரு வழியை உண்டுபண்ணும் வரைக்கும் அங்கேயே நில்லுங்கள், 65முதலாம் நாள் கடந்தது. இரண்டாம் நாள் கடந்தது. மூன்றாம் நாள் கடந்தது. நான்காம், ஐந்தாம், ஆறாம் நாள் கடந்தது. உங்களுக்குத் தெரியும், நோவா அதிகம் செய்ய வேண்டியதாயிருந்தான். அவனுடைய கூட்டத்தாரில் சிலர், “தந்தையே, நாம் அந்த ஜன்னல் வழியாகத்தான் ஏறி வெளியே போக வேண்டுமென்று நீர் நினைக்கிறீரோ? அது எல்லாம் ஒரு தவறு என்று நினைக்கிறீரா?” என்று கூறினார்கள் என நான் யூகிக்கிறேன். அவன், “இல்லை, இல்லை, இல்லை. அவன் தொடர்ந்து, அந்த ஏனோக்கை எடுத்துக் கொண்டுபோனது யார்? அந்தக் கதவை அடைத்தது யார்? நமக்கு முன்பாக அந்தக் காரியங்கள் எவற்றையும் செய்தது யார்? அவர் இது மட்டுமாய் நம்மை வழிநடத்தி, நம்மை உள்ளே அடைத்தார் என்றால் நாம் அவரோடு தரித்து இருப்போமாக” என்று கூறினான். சபையே, அதுதான் இது. அவர் நம்மை உலகத்திலிருந்து வெளியே கொண்டு வந்திருப்பாரேயானால், இது மட்டுமாக வழிநடத்தி யிருப்பாரேயானால், அவரோடு நம்மை உள்ளே அடைத்து வைத்திருப்பாரே யானால், நம்மூடாக, நமக்குள்ளாக, நம்மைச் சுற்றிலுமாக பரிசுத்த ஆவியானவரை வைத்திருக்கிறாரென்றால், நாம் அவரையே தொடர்ந்து பின் செல்வோமாக. அது உண்மை . நேரமானது வரும், வேளையானது வரும். பரியாசக்காரர்கள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். 66பின்னர், ஏழாம் நாளன்று, அந்தக் காலையில் ஜனங்கள் எல்லோரும் வெளியே வீதிகளில் இருந்தனர். அவர்கள் அப்படிப்பட்டதான ஒரு காரியத்தைக் கண்டதேயில்லை. மேகங்கள் மேலே வந்து கொண்டிருந்தன. பலமான இடி முழங்கினது, மின்னல் வானங்களினூடாக பிரகாசித்தது. ஏழுமணியளவில் மகத்தான மழையின் பெருந்துளிகள் முதல் முறையாக பூமியின்மீதில் விழத்துவங்கின. பறவைகளோ சத்தமிட்டுக் கொண்டிருந்தன என்று நான் யூகிக்கிறேன். இயற்கை யெல்லாம் அழித்தகற்றப்பட்டன. ஜனங்கள் ஆச்சரியப்படத் துவங்கி, “உங்களுடைய விஞ்ஞான கருவிகளை வெளியே கொண்டு வாருங்கள். உங்களுடைய தொலைநிலை இயக்கமானியில் முயற்சி செய்யுங்கள். எங்களுக்கு சொல்லுங்கள். இதெல்லாம் என்னவாக இருக்கிறது?'' ஆனால் அதெல்லாம் கிரியை செய்யாது. ”எங்களுடைய ஜீவியக் காலமெல்லாம் இதைப் போன்ற எதையும் நாங்கள் கண்டதேயில்லை“ எனக் கூறத் துவங்கினார்கள். நல்லது, சுமார் மத்தியான நேரத்தில், ஓடைகள் பெருக்கெடுக்கத் துவங்கின. அடுத்த நாள் காலையிலே ஆறுகளும், ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன. சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களில், தண்ணீர்கள் வெள்ளமாய் வீதிகள் முழுவதும் இருந்தன. ஜனங்களோ மேலேறி பேழையைச் சுற்றி வந்து “திறவுங்கள்'' என்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தனர். நோவாவோ அலைகளின் மேல் தொடர்ந்து சவாரி செய்து கொண்டிருந்தான். பேழை சுமார் இருபதுக்கும் சற்றே அதிகமான அடிகள் எழும்பி, பேழையானது தரையிலிருந்து மேலே மிதந்து, ஆடிக்கொண்டு, அதனூடாக தொடர்ந்து போகத் துவங்கினது என வேதம் கூறியுள்ளதை நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் மிகவும் உயரமான மலையுச்சிக்கு ஏறி, மிகவும் உயரமான கிளையில் தொங்கினார்கள். அவர்கள் அலறினார்கள். பேழையில் இல்லாதிருந்த அனைத்துமே, நாசியில் சுவாசம் இருந்த யாவுமே அழிந்தன. சுவாசித்த யாவும் மரித்துப் போயின. அவர்கள் இரக்கத்திற்காக கூக்குரலிட முடிந்தது. அவர்களால் கதற முடிந்தது. ஆனால், அவருடைய நீதியைக் கொண்டு வருவதைத் தவிர வேறெதுவும் இல்லையென்றாகுமட்டாய் அவர்கள் தேவனை அநேக முறை தள்ளி விட்டிருந்தனர். அவருடைய நீதியே நியாயத்தீர்ப்பாக இருந்தது. அவர் ஏவாளிடத்தில், “இதைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று கூறினது போன்றே. 67இப்பொழுது நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நாம் பார்த்திருக்கிறோம். இப்பொழுது நாம் இரண்டு முறை வார்த்தையானது போராட்டத்தில் விவாதங்களோடு வருவதைப் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அது மீண்டுமாக வார்த்தைக்கு எதிராக விவாதித்துக்கொண்டு வருகிறது. இப்பொழுது உங்களால் தெரிந்து கொள்ள முடியும். யோசுவா அதே காரியத்தைச் சொன்னான். அவன், “இப்பொழுது நீங்கள் நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களை, வேண்டுமென்றால் தெரிந்து கொள்ளுங்கள். பாருங்கள், அல்லது நீங்கள் வாசம் பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களை சேவிக்க நீங்கள் தெரிந்து கொள்கிறீர்களா? நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள், தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தார்கள். அவர்கள் நதியினூடாக சவாரி செய்தார்கள். எமோரியர்கள் அதை நிராகரித்து விட்டனர். தேவன் அவர்களுடைய தேசத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறார். இப்பொழுது தேவனை சேவிக்கிறது ஆகாதது என்று நீங்கள் நினைத்தால், பின்னை யாரை சேவிப்பீர்கள் என்று இன்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் நானும் என் வீட்டாருமோ வென்றால், நாங்கள் கர்த்தரோடே தரித்திருப் போம்” என்றான். ஆமென். நான் அதை விரும்புகிறேன். போராட்டம். கவனியுங்கள். ஏதேனில் கோட்டையானது உடைக்கப்பட்ட நாளன்று, மனிதன் “வெளியே” சென்றான். ஆமென். அவர்கள் வெளியே சென்றனர். தேவன் தண்ணீரினால் உலகத்தை அழித்தபோது, தேவனுடைய உடன்படிக்கையை அவர்கள் காத்துக்கொண்ட அந்த நாளன்று, அவர்கள் உள்ளே சென்றார்கள். அவர்கள் ஏதேனிலிருந்து வெளியே சென்றனர். அவர்கள் பேழைக்குள்ளாக சென்றனர். இந்த மூன்றாவதில் அவர்கள் “மேலே” செல்கிறார்கள். வெளியே செல்லுதல், உள்ளே செல்லுதல், மேலே செல்லுதல்! ஆமென். இரண்டு முறையும் அவர்கள் என்ன செய்தனர் என்று நாம் பார்க்கிறோம். நான் கர்த்தரோடு நிற்கப் போகிறேன். நீங்களும் கூட நிற்க விரும்பமாட்டீர்களா? [சபையார் “ஆமென்' என்கின்றனர். - ஆசி.] நான் தேவனுடைய வார்த்தையை காத்துக்கொள்ள விரும்புகிறேன். 68இயேசு, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷ குமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” என்றார். தவறானதற்கு எதிராக சரியானது; இருளுக்கு எதிராக வெளிச்சம்; மரணத்திற்கு எதிராக ஜீவன்; விஞ்ஞானத்திற்கு எதிராக வார்த்தை, அது உண்மை . விஞ்ஞான ஆராய்ச்சி வார்த்தையை பொய்யென நிரூபிக்கும். அப்படியாய் அது பொய்யென நிரூபிக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது வார்த்தையை பொய்யென நிரூபிப்பதில்லை. தேவனுடைய வார்த்தையை ஜனங்கள் தவறாக விசுவாசிக்கும்படி செய்ய சாத்தான் அவனுடைய முறைமையை மீண்டும் கிரியையிலே பெற்றிருந்தான். சாத்தானுடைய தவறான ஆராதிக்கும் வழியானது காயீனைப் போன்றும், பிலேயாமைப் போன்றும் உள்ளது. அவர்கள் மிகவும் பக்தியுள்ளவர்கள். காயீன் பக்தியுள்ளவனாக இருந்தான். அவன் ஒரு பலிபீடத்தைக் கொண்டு வந்தான். ஒரு பலிபீடத்தை உண்டு பண்ணினான். வெளிப் படையாக பார்த்தால், ஆபேலைக் காட்டிலும் காயீன் பக்தியுள்ளவனாய் இருந்தான். நிச்சயமாகவே ஆபேல் செய்ததைக் காட்டிலும் அவன் கர்த்தருக்கு அதிகமாக செய்தான். ஆனால் ஆபேல் வார்த்தையின் வழியில் வந்தான், அவ்வளவுதான். அவன் அதிகம் செய்திருந்தான். அவன் ஒரு மகத்தான ஸ்தாபனத்தை கட்டினான். அவன் ஒரு பெரிய காரியத்தை , ஒரு மகத்தான கிறிஸ்தவ சுதந்திரத்தை உருவாக்கினான். ஆனால் நீங்கள் பாருங்கள், அவன் தவறான வழியில் வந்தான், மேலும் ........ அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை . இப்பொழுது, தவறு, ஏனென்றால் அது வார்த்தைக்கு முரணாயிருந்தது. மோசேயைப் போன்று அவ்வளவு பயபக்தியுள்ளவனாய் பிலேயாம் இருந்தான். அவன் அதே பலியோடு, அதே ஆட்டுக்குட்டிகளோடு, அதே சுத்தமான மிருகங்களோடும் மற்றும் எல்லாக் காரியங்களோடும் வந்தான். அவன் தவறான வழியில் வந்தும் அதே தேவனை நோக்கி ஜெபித்தான். மோசே செலுத்தின அதே தேவனுக்கு பலி செலுத்தினான், புரிகின்றதா? ஏதேனில் இருந்தது போன்று அது வார்த்தைக்கு முரணாயிருந்தது. 69வார்த்தையானது எந்த நவீன தத்துவத்தோடும் கலவாது. புரிகின்றதா? நீங்கள் நவீன தத்துவத்தை உடையவர்களாயிருக்க முடியாது. இப்பொழுது, முடிக்கையில், கூர்ந்து கவனியுங்கள். வார்த்தையானது எந்த நவீன தத்துவத்தோடும் கலவாது. அது ஒரு தத்துவத்தை உடையதாயும், வார்த்தையை உடையதாயும் இருக்கமுடியாது. நீங்கள் வார்த்தையை அல்லது தத்துவத்தை உடையவர்களாயிருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் எதை விசுவாசிக்கப்போகிறீர்கள்? “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலான ' ஞானஸ்நானத்தை வேதாகமம் போதிக்கிறதென்றால், அது ”பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக“ இருக்கிறது என்று சபை கூறுகின்றது. அப்படியானால் நீங்கள் யாரை விசுவாசிக்கப் போகிறீர்கள்? இயேசுவானவர் ”நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்'' என்ற கூறியிருந்தால், “வந்து சேர்ந்து கொள்ளுங்கள்” என்று சபை கூறுகிறது. இப்பொழுது நீங்கள் எதை விசுவாசிக்கப் போகிறீர்கள்? இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்'' என்ற கூறியிருந்தால், சபையோ, ”நீங்கள் வெறுமனே ஒரு நல்ல அங்கத்தினன்“ என்று கூறுகிறது, நீங்கள் யாரை விசுவாசிக்கப் போகிறீர்கள்? இயேசுவானவர், ”நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள் “ என்று கூறியிருந்தால், சபையானது ”அற்புதங்களின் நாட்கள் கடந்து போயிற்று“ என்று கூறுகிறது, நீங்கள் யாரை விசுவாசிக்கப் போகிறீர்கள்? நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகின்றதா? 'தேவனுடைய வார்த்தையை தோற்கடிக்க எப்படி தத்துவமானது ஒரு முறைமையை உருவாக்கியிருக்கிறது என்ற அந்தக் காரியங்களை யெல்லாம் கொண்டு வந்து, அந்தக் காரியங்களின் கீழ் இங்கே ஒரு மணிநேரம் என்னால் நிற்க முடியும்.இப்பொழுது, கிறிஸ்தவர்களே, வார்த்தையின் பின்னே நில்லுங்கள்.ஆம் ஐயா. ஜீவியத்தின் தவறான வழியானது அதைக் கலைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு எந்தவிதத்திலும் உடுத்தியிருக்கின்ற இந்த ஸ்திரீகளையே அவர்கள் எடுக்கிறார்கள். அவர்கள் புகைத்தாலும், குடித்தாலும் அல்லது வேறெந்த காரியமாய் இருந்தாலும் அந்த மனிதர் களையே எடுத்து, அவர்களை உதவிக்காரர்கள் போன்றவற்றிற்கும், போதகர்களாயும் கூட. சபையில் ஆக்குகிறார்கள் இந்தவிதமாய் உடுத்தி யிருக்கின்ற ஸ்திரீகள் அவர்கள் விரும்புகின்ற விதமாகவே உடுத்து கிறார்கள். அவர்களை உள்ளே கொண்டு வந்து சபையில் அவர்களை சகோதரிகளாக ஆக்குகின்றனர். அந்தவிதமாய் நீங்கள் பரபோகத்திற்குச் செல்ல ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். அது நவீன தத்துவத்போட்டு கலக்காது. 70எனவே, நாம் இன்றைக்கு அதை உறுதியாக கூறிக்கொண் டிருக்கிற இரண்டு வகுப்பினரை உடையவர்களாயிருக்கிறோம். முடிக்கையிலே இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். கிறிஸ்துவின் மணவாட்டியாய் இருக்கிறோம் என்று உறுதியாக கூறிக்கொண்டிருக்கிற இரண்டு வகுப்பினர் நமக்கு உண்டு. அது உண்மை . இரண்டு வகுப்பினர் இருப்பார்கள் என்று வேதம் உரைக்கிறது. அது உண்மை . புத்தியுள்ள கன்னிகை, புத்தியில்லாத கன்னிகை. அது சரிதானே? [சபையோர், “ஆமென்'' என்கிறார்கள். - ஆசி.) இரண்டு வகுப்பினர்கள் உண்டு. சபையானது, “நாங்கள் தான் சபை'' என்கிறது. அவர்கள் வெளியே சென்று மகத்தான சுவிசேஷ முகாம்களை நடத்தி, ஜனங்களை சபைக்குள்ளாக கொண்டு வருகிறார்கள். ஸ்திரீகள் தங்களுடைய வழியிலேயே தொடர்ந்து செல்லுகிறார்கள். புருஷர்களும் தங்களுடைய வழியிலேயே தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் தங்களுடைய உபதேசத்தை ஒருபோதும் மாற்றுவ தில்லை. அவர்கள் அதையெல்லாம் எழுதி எடுத்து, அந்த அப்போஸ்தல கொள்கையையும், குறிப்பிட்ட ஜெபங்களையும், இந்த எல்லா சபை போதனைகளையும் மற்ற காரியங்களையும் இந்த மெத்தோடிஸ்ட்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும், கத்தோலிக்கர் அனைவரும் ஆதார சான்றாக்கி அமைத்துக் கொண்டு வாசிக்கிறார்கள். அவர்கள் அந்த சபை போதனையை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் சில மகத்தான மனிதர்கள் அது சரியென்று ஆமோதிக்கிறார்கள். அவன் ஒரு மகத்தான மனிதனாக இருந்திருக்கலாம். அவன் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அதை கூறுவதற்கான அதிகாரத்தை அவன் பெற்றிருக்கவில்லை. ஏனென்றால் வேதமே தேவனுடைய அதிகாரமாய் இருக்கிறது. அது தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையாயிருக்கிறது. “எந்த மனிதனாவது அதனோடு ஒரு காரியத்தைக் கூட்டினாலும் அல்லது அதிலிருந்து எதையாவது எடுத்துப் போட்டாலும் (அவனுடைய பங்கு) ஜீவபுத்தகத்தில் இருந்து எடுக்கப்படும்” இப்பொழுது அது அவ்விதமாய் செய்யப்பட முடியாது. 71ஆனால் அதை உறுதியாகக் கூறகிற இருவர் உண்டு . ஒருவர், “நாங்கள் தான் சபை” என்று கூறுகின்றனர். இன்னொருவர், “நாங்கள் தான் சபை” என்று கூறுகின்றனர். சரி. புத்தியுள்ளதும், புத்தியில்லாததும், இருவருமே அழைக்கப்பட்டிருக் கிறார்கள். ஆனால் நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் இருவரும் பாத்திரங்களை உடையவர்களாயிருந்தனரா? அது உண்மை. அவர்கள் இருவரும் கன்னிகைகளாய், விசுவாசிகளாய் இருந்தனர். அவர்கள் இருவரிடமும் பாத்திரங்கள் இருந்தன. ஆனால் சாத்தான் நம்மைக் காட்டிலும் திறமையானவன், நாம் அதை அறிவோம். சாத்தான் எந்த ஒரு மானிடனைக் காட்டிலும் திறமையானவனாகவே உள்ளான் என்பதை நாம் அறிவோம்: உங்களுடைய ஞானத்தோடு அதை செய்யும்படியாய் அவனை சாமர்த்தியத் தில் மிஞ்ச நீங்கள் ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். உங்களால் அதைச் செய்ய முடியாது. இயேசுவானவர் இதை அறிந்திருந்தார், எனவே சாத்தான் அவர்களை சாமர்த்தியத்தில் மிஞ்சாதபடிக்கு அரணாக்கப்பட்ட ஒரு ஸ்தலத்தை அவர் சபைக்கு அனுப்பினார். அவர் பரிசுத்த ஆவியை அவர்களுக்கு அனுப்பினார். சபையானது சாமர்த்தியமுள்ளதென்று உரிமை கோருகிறதில்லை. அவர்கள் அப்படியே விசுவாசிப்பதாகவே உரிமை கோருகிறார்கள். அவர்களுடைய பிரசங்கிமார்களால் வெளியே சென்று அவர்களுடைய Ph., இரண்டு 1. Q.U; S.T.D., இன்னும் மற்றெல்லாக் காரியங்களையும் உங்களுக்குக் காட்டமுடியாது. அவர்களை சில ஊழியக்கார சங்கங்களுக்குள் நியமனஞ் செய்யப்படுகின்றபோது அவர்களுக்கு மகத்தான, பெரிய துவக்கவிழா நேரங்கள் அவர்களுக்கு இல்லாதிருக்கிறது. உங்களுக்குத் தெரியும் நான் ஒரு சிறிய பாடலை வழக்கமாக பாடுவதுண்டு. இந்த ஜனங்கள் உலகப்பிரகாரமான கீர்த்தியைக் குறித்து பெருமை பாராட்டவோ அல்லது கல்லாதவர்களாகவோ இருந்திருக்கலாம். அவர்கள் எல்லோரும் தங்களுடைய பெந்தேகோஸ்தேவைப் பெற்று, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அவருடைய வல்லமை இன்னமும் மாறாததாயிருக்கிறது என்பதை அவர்கள் தூரத்திலும், விஸ்தாரத்திலும் கூறிக்கொண்டிருந்தனர். நான் அவர்களில் ஒருவன் என்று கூற முடியும் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். 72ஆம் ஐயா, ஆம். அவர்களிடத்தில் இந்த பெரிய காரியங்கள் இல்லை . அவர்கள் எந்தக் காரியத்தையும் அறிந்துள்ளதாக உரிமை கோரவில்லை. அவர்கள் ஏதோ ஒன்றை விசுவாசிக்கிறோம் என்று உரிமை கோருகிறார்கள். இயேசுவானவர், பரிசுத்த ஆவியை அனுப்பினார், அது அவராகவே இருக்கிறது. அவர், “இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உங்களிலும், உங்களோடும், உங்களுக்குள்ளும், உலகத்தின் முடிவு பரியந்தம் இருப்பேன்” என்றார். இப்பொழுது, இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள். இயேசு அதை அறிந்திருந்தார். எனவே வார்த்தையை உறுதிப்படுத்துவதற்கு அவர் பரிசுத்த ஆவியை அனுப்பினார். நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? [சபையார், “ஆமென்'' என்கின்றனர், ஆசி.) புரிகின்றதா? ”அவர் வார்த்தையில் இருக்கிறார்'' என்று, வார்த்தைக்குப் பின்னால் அவர்களுடைய அடைக்கலத்தை எடுத்துக் கொண்டவர்களுக்கு “உறுதிப்படுத்தவே.'' புரிகின்றதா? அவர்களை அங்கேயே வெளியே விடுங்கள். அவர்கள் அந்த முறைமையைப் பார்த்து நகைப்பார்கள். அவர்கள், “இவர்கள் பைத்தியக்காரர்கள்” என்கிறார்கள். 73ஆனால் ஆபிரகாமின் கூட்டத்தாரைப் போன்று, வார்த்தையின் பின்னாக இருக்கின்ற அவர்களுக்குள்ளாகச் சென்று அவர்களுக்கு முன்பாக வார்த்தையை உறுதிப்படுத்தவும், அவர் இன்னமும் வார்த்தை யாகத்தான் இருக்கிறார் என்பதை காண்பிக்கவும் இயேசுவானவர் பரிசுத்த ஆவியை அனுப்பினார். அது அவராக இருக்கிறது. நீங்கள் சரியான ஸ்தானத்தை எடுத்திருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்! சரி. வார்த்தையிலிருந்து வருகின்ற வெளிச்சத்தின் உறுதியாக அக்கினி இருக்கிறது. அவைகள் நிரம்பும் சமர்த்தரான கன்னிகை, புத்தியுள்ள கன்னிகை, அவளுடைய விளக்கில் எண்ணெய் இருந்தது. அவள் தன்னுடைய விளக்கை ஆயத்தப்படுத்தி அதை கொளுத்தினாள். இப்பொழுது அது என்ன? இப்பொழுது, அது தேவன் வார்த்தையா யிருக்கிறார். எண்ணெய் ஆவியாயிருக்கிறது. அக்கினி அந்த எண்ணெயின் மேலுள்ள சுவிசேஷ வெளிச்சமாயிருக்கிறது. தேவன் அவ்வண்ணமாய் கூறினார். பாருங்கள். அதுதான் அந்த பாத்திரம். சரி. எண்ணெய் பாத்திரத்தில் இருக்கிறது. அதில் எரிந்து கொண்டிருக்கிற அக்கினி வார்த்தை. என்ன கூறியுள்ளது என்பதின் வெளிச்சத்தை அது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது என்பதை காட்டுகின்றது. புரிகின்றதா? அதுதான் பிரதிபலிப்பு. இப்பொழுது, அந்த புத்தியுள்ள கன்னிகையால் அதைச் செய்ய முடிந்தது. ஆனால் அந்த மற்றவர்கள், புத்தியில்லாத கன்னிகையோ புறம்பாக இருந்து, எண்ணெய் இல்லாமல் இருந்து, அவர்களுடைய சபையையும், அவர்களுடைய ஸ்தாபனத்தையுமேயன்றி அவர்களால் வேறொன்றையும் பிரதிபலிக்க முடியவில்லை. புரிகின்றதா? இப்பொழுது, நீங்கள், ''வார்த்தை நீர், 'அந்த வார்த்தை ஆவியாயிருக்கிறது' என்று கூறினீரோ?“ என்கிறீர்கள். ஆம் ஐயா. தேவன், “என் வார்த்தை ஆவியாயிருக்கிறது'' என்றார். அது உண்மை. உண்மையான மணவாட்டி வார்த்தையினால் இணைக்கப் பட்டிருக்க வேண்டும். இப்பொழுது நினைவிருக்கட்டும், அவள் கிறிஸ்துவின் ஒரு பாகமாகயிருந்தால், அவள் கிறிஸ்துவின் வார்த்தையாய் இருக்க வேண்டும். ஒழுங்கின்படியாய் கிறிஸ்துவின் வார்த்தையாய் இருக்க வேண்டுமென்றால், நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் பொழுது, நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்கள். கிறிஸ்து வார்த்தையாய் இருக்கிறார். ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சகோதரன் பிரான்ஹாமும் சபையாரும் இறுதி துதிப்பாடலைப் பாடுகின்றனர், “ஆமென்.'' -ஆசி.) நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [”ஆமென்.“ நீங்கள் அவரை சேவிக்கிறீர்களா? [”ஆமென்.“] [”ஆமென், ஆமென்.“] அவர் உலகத்தின் வெளிச்சமாயிருக்கிறார். அது உண்மை . [“ஆமென்.”) அவர் நம்முடைய இருதயத்தின் சந்தோஷமாயிருக்கிறார் , (“ஆமென்.”] அவர் நம்முடைய ஜீவனின் வல்லமையாயிருக்கிறார் (“ஆமென்.”] [“ஆமென், ஆமென்.”] | 74மணவாட்டி இணைக்கப்பட்டிருக்க வேண்டும், வார்த்தையினால் ஒன்று சேர்த்து இணைக்கப்பட்டிருக்க வேண்டும். “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது”. இது அச்சடிக்கப்பட்ட வார்த்தையின் பேரிலான அவருடைய சத்தமாயிருக்கிறது. சரி. வார்த்தையினால் ஒன்று சேர்க்கப்பட்டு, அவள் தன்னை ஆயத்தப்படுத்துகிறாள், வழக்கமான கோட்பாடுகளினால் அல்ல. எஸ்தரைப் போன்று, இராஜாவுக்கு முன்பாக நிற்கும்படியாக எஸ்தர் தெரிந்துகொள்ளப்பட்டபோது, அவள் எல்லாக் காரியங்களினாலும் தன்னை அலங்கரித்துக் கொள்ளவில்லை. ஆனால் அவள் தன்னை ஒரு இனிமையான, சாந்தமான ஆவியினால் அலங்கரித்துக் கொண்டாள். அதனால் தான் மணவாட்டி அதை பின்தொடர்ந்து கொண்டிருக்கிற ஆவியின் கனிகளோடு தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். அவள் எதைப் பெற்றுக்கொண்டாள்? வார்த்தையின் ஐக்கியத்தில் ஒன்று சேர்ந்து கூடி வருகிறதை, “ஆமென்.'' வார்த்தையின் ஐக்கியம். அது உண்மை . ஏகமனதாய், ஒரே இடத்தில், ஒரே ஆவியில், ஒரே சிந்தனையாய், ஒரே நம்பிக்கையாய், ஒரே தேவனாய், ஒரே நோக்கமாய் இன்றிரவு கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து கொண்டு ஐக்கியப்பட்டுக் கொண்டிருக்கிறாள். ”ஆமென்.'' புரிகின்றதா? அங்கேதான் நீங்கள் இருக்கின்றீர்கள். வேதாகமம் எந்தக் காரியத்தையாவது ஒவ்வொருமுறையும் கூறும்பொழுதும், நாம் “ஆமென்.'' என்கிறோம். ஒவ்வொரு வார்த்தையோடு ”ஆமென்“ என்று வலியுறுத்திக் கூறுகிறோம். ”இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.“ ”ஆமென்.“ ”மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்“. “ஆமென்.'' பாருங்கள், ஒவ்வொரு காரியத்திற்கு அப்படியே தொடர்ந்து, ”ஆமென், ஆமென், ஆமென்“ என்றே ஐக்கியத்தில் இருப்பதை பாருங்கள். 75அவள் எதைப் பெற்றுக்கொண்டாள்? அவளுடைய, “ஆவியின் கனிகளை .'' ஆவியின் கனி என்றால் என்ன? சந்தோஷம், அவர் சீக்கிரமாய் வருகிறார் என்பதை அறிந்த அவளுடைய இருதயத்தின் சந்தோஷத்தையே! ”ஆமென், ஆமென், ஆமென்.'' சிந்தையின் சமாதானம். ஏன்? சிந்தையின் சமாதானம். சிந்தையின் சமாதானம் என்னவென்று தெரியுமா? என்ன வந்தாலும் அல்லது என்ன போனாலும், படகு ஆடினாலும், பயல்கள் வந்தாலும், மின்னல்கள் மின்னினாலும், இடி முழங்கினாலும், என்ன சம்பவித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அது ஒரு சிறு வித்தியாசத்தையும் உண்டு பண்ணுவதில்லை. அணுகுண்டுகள் விழக்கூடும். நீங்கள் பாறையில் பாதுகாவலிடங்கள், குண்டிற்கு பாதுகாவலிடங்கள் கட்டக்கூடும். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவளோ இன்னமும் “ஆமென், ஆமென், ஆமென்” என்றே கூறிக் கொண்டிருக்கிறாள். ஏன்? அவள் பாதுகாக்கப்பட்டிருக்கிறாள். என்ன? எதினால் அவள் பாதுகாக்கப்பட்டிருக்கிறாள்? வார்த்தையால், (என்ன?) மாமிசமான வார்த்தையால், நமது மத்தியில் வாசமாயிருந்து கொண்டு, நமது மத்தியில் நம்முடைய கூடிவருதலில் அவர் அசைகின்றதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். புரிகின்றதா? அதோ அவர் இருக்கிறார். ஆகவே அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது? “ஆமென்'' போராட்டம் தொடரட்டும். இனி கடூரமான சமுத்திரங்களில் பிரயாணம் செய்யாதபடிக்குஎன்னுடைய ஆத்துமாவை நான் இளைப்பாறுதலின் புகலிடத்தில் நங்கூரமிட்டிருக்கிறேன். பெருங்கொந்தளிப்பான புயலின் ஆழத்தில் சூறாவளிக்காற்று வாரிக்கொள்ளலாம், ஆனால் இயேசுவில் நான் என்றென்றைக்குமாய் பாதுகாவலாய் இருக்கிறேன். 76நீங்கள் இயேசுவுக்குள்ளாக இருக்கிறீர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள், அப்படியானால் அவருடைய வார்த்தையை மறுதலிப்பீர்களா? ஏதோ காரியம் தவறாக இருக்கிறது. அவருடைய சொந்த வார்த்தைக்கு அவர் எப்பொழுதும் “ஆமென்” என்று கூறுகிறார். நீங்கள் அதை அறிவீர்கள். உண்மை . சரி. ஐக்கியத்திற்காக ஒன்றுகூடி வருதல். சந்தோஷம். ஆவியின் கனிகளில் ஒன்று. சிந்தையில் சமாதானம், வார்த்தையில் விசுவாசம், சமாதானம், சந்தோஷம், விசுவாசம், நீடிய பொறுமை, பொறுமை, தயவு விசுவாசம். எந்தவிதமான விசுவாசம்? போராட்டத்தில் போராடுவதற்கு எந்தவிதமான வழியில் நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை உபயோகிக்கிறீர்கள்? உங்களுடைய விசுவாசத்தை ஏதோ தத்துவத்தின் பேரில், ஏதோ விவாதத்தின் பேரில், ஏதோ காரியத்தின் பேரில் நீங்கள் உபயோகப்படுத்தப் போகிறீர்களா? “அதிகமான ஜனங்கள் இந்த சபைக்கு வருகிறது போதுமானதாயில்லையா? இது பெரியதான சபையாக இல்லையா?'' இல்லை ஐயா, அது அல்ல. அங்கே வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அந்த சபையானது பிரசங்கிக்கவில்லையென்றால், அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் ''ஆமென்'' என்று கூறினாலும், ஒவ்வொரு அடையாளத்தையும், ஒவ்வொரு அற்புதத்தையும் விசுவாசித்தாலும் அவைகள் அவர்கள் மத்தியில் கிரியை செய்கிறதை கண்டாலும், எவ்வளவு பெரியதாயிருந் தாலும், எவ்வளவு சிறியதாயிருந்தாலும் கவலைப்படாமல் நான் அதினின்று விலகிப்போய் விடுவேன். புரிகின்றதா? விசுவாசம், அன்பு, சந்தோஷம், சமாதானம், வார்த்தையில் விசுவாசம். எனவே சாத்தான் அவனுடைய துப்பாக்கிகளை பொருத்தட்டும். நாமோ நங்கூரமிடப்பட்டிருக்கிறோம். ஆமென். நாம் மகத்தான ஜனங்களாக இருக்கிறோம் என்று உரிமை கோரவில்லை. நாம் உலகத்தின் பார்வையில் மகத்தான ஜனங்களாய் இருக்கவில்லை. நாம் தாழ்மையான ஜனங்களாய் - குடியானவர்களாய் உள்ளோம். நாம் உலகத்தினுடைய ஐசுவரியங்களுக்காக கவலை கொள்ளுகிறதில்லை. 77என் நண்பனே, இன்றிரவு நான் இந்த சுவிசேஷத்தை பிரசங்கிக்க துவங்கினேன் நேரமாகிக் கொண்டே போகிறது. எனவே இன்றிரவுக்கானதை நான் நிறுத்திவிடப் போகிறேன். சுமார் முப்பது வருடங்கள் சற்று கூடுதலாக அல்லது முப்பத்தியொன்று வருடங்களுக்கு முன்பிருந்து நாங்கள் பிரசங்கித்துக் கொண்டிருக்கத் துவங்கினோம். சுமார் 1930, 31, அப்போதிலிருந்து நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்கத் துவங்கினேன். இதே செய்தியை பிரசங்கித்தேன், அதிலிருந்து ஒருபோதும் மாறினதே கிடையாது. ஏனென்றால் அது சாத்தியமாய் இருக்கிறது. அதனோடு அப்படியே தரித்திருங்கள். இப்பொழுது, இன்றிரவு, நான் ஒரு நடுத்தர வயதுள்ள மனிதனாக, ஐம்பத்தி மூன்று வயதுள்ள பாட்டனாக இருக்கிறேன். அங்கே அந்த நாட்களில் நான் அவரை நேசித்ததைக் காட்டிலும் நான் அவரை அதிகமாக நேசிக்கிறேன். ஏனென்றால் அதிக சோதனைகளிலும், போராட்டங்களின்போதும் நான் அவரை கண்டிருக்கிறேன். அவ்வளவு சோதனையாய் இருக்கின்ற கட்டத்திற்குள் நான் வரும்பொழுது, நோவா பேழையில் இருந்ததைப் போன்று, “இது இருக்கும்” என்று நான் ஏதாவது காரியத்தை கூறின போது, நான் அவரைக் கண்டிருக்கிறேன்.இப்பொழுது கவனியுங்கள். இரக்கம் ! தேவனே, என்ன ... “அது இருக்கும்.” அங்கேயே தரித்திருங்கள். “அது இருக்கும்.” சூரியன் மேலே கடந்து போகிறது. “அது இருக்கும்”. “சகோதரன் பிரான்ஹாம், ஏன் என்று உமக்குத் தெரியுமா?” - “தேவன் அவ்வண்ண மாய் கூறினார். அது இருக்கும். அது இருந்தாக வேண்டும். தேவன் அவ்வண்ணமாய் கூறியிருக்கிறார்.'' எனவே நான் ஒரு பரலோக இளைப்பாறுதலில் என்னுடைய ஆத்துமாவை நங்கூரமிட்டிருக்கிறேன். நான் இயேசுவுக்குள்ளாய் எப்பொழுதுமே பாதுகாவலாய் இருக்கிறேன். என்ன வந்தாலும் அல்லது போனாலும் நாம் அதை அவ்விதமாகவே எடுத்துக் கொள்வோம். இப்பொழுது நாம் நம்முடைய கலைகளை வணங்கி, அவருக்கு நன்றியை செலுத்துவோமாக. 78அந்த விதமாக நங்கூரம் பாய்ச்சப்படாமலும், அவரை அறியாத வர்களுமாய் யாராவது இன்றிரவு இங்கு இருக்கிறீர்களா? தேவனுடைய வார்த்தையோடு உங்களுடைய மகத்தான முடிவை ஒருபோதும் நீங்கள் எடுக்காமலிருந்தால் நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், நான் என்னுடைய கரத்தை உயர்த்தப் போகிறேன். என்னை ஜெபத்தில் நினைவு கூறுங்கள் என கூறி, என்ன சம்பவித்தாலும் கவலையில்லை, நான் தேவனையே நம்பி இருப்பேன் என்ற அந்தவிதமான முடிவை நான் ஒருபோதும் எடுத்ததேயில்லை. யார் என்ன சொன்னாலும் அல்லது செய்தாலும் கவலையில்லை. நான் அவருடைய வார்த்தையையே எடுத்துக் கொள்வேன். நான் இன்னமும் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். சகோதரன் பிரான்ஹாம், நீர் எனக்காக ஜெபிக்க நான் விரும்புகிறேன். போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நான் என்னுடைய முடிவை எடுத்திருக்கிறேன் நான் இன்னமும் என்னுடைய முடிவை எடுக்கவேயில்லை. தேவனுடைய பட்சத்தில் வார்த்தையோடு நான் அதை எடுக்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள். அப்படியானால் உங்களுடைய முடிவை ஏற்கனவே எடுத்து கர்த்தருடைய வார்த்தைக்குப் பின்னால் எத்தனை பேர் நின்று கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்தி, “நான் அதைச் செய்ததற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நூறு சதவீதம். தேவனுக்கு ஸ்தோத்திரம், சிறுபிள்ளைகளும் கூட அவர்களுடைய கரத்தை மேலே உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 79இதுமட்டும் உண்மையாய் இல்லையென்றால், கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் வார்த்தையினால் அரணாக பாதுகாக்கப் பட்டிருக்கிறோம். வார்த்தையினால் அரணாக காக்கப்பட்டு, ஆரம்ப நாட்களில் அவர்கள் செய்தது போன்று இங்கே ஆவியானவரின் பிரசன்னத்தோடு ரூபகாரப்படுத்திக் கொண்டும், நமக்கு நிரூபித்துக் கொண்டும் இருக்கிறார். அதே சுவிசேஷம், அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே தேவன், அதே வார்த்தை, அதே காரியங்களை நிறைவேறுதலுக்குள் கொண்டு வருகிறது. ஜனங்கள் எழும்பி நின்று கொண்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசன வரத்தோடும், தீர்க்கதரிசனங்களோடும் ஜனங்களின் மேல் ஆவியானவர் இறங்கிக் கொண்டிருக்கிறார். ஒருவர் எழும்பி நிற்பார், பாஷைகளில் பேசும்படி ஆவியானவர் அவர்கள் மேல் இறங்குகிறார். அவர்கள் பாஷைகளில் பேசி அமைதியாயிருப்பார்கள். இன்னொருவர் அதை வியாக்கியானிப்பார். அது நிறைவேறுதலுக்குள் வரும். நம்முடைய பரிசுத்த ஆவியானவரின் மகத்தான வல்லமைகள் நம்முடைய ஜீவியங்களை ஒரு பாவ ஜீவியத்திலிருந்து மாற்றி, அதிலிருந்து வெளியே கொண்டு வந்து, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை புதிய சிருஷ்டிகளாய் ஆக்குகிறதை காண்கிறோம். எவ்வளவாய் நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம். 80பரலோகப் பிதாவே, இங்கே கிளார்க்ஸ்வில்லில் (Clarksville) பரதேசிகளாய் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளாகிய இந்தக் கூட்டத்தோடு கூடி வந்திருப்பது மிகவும் நன்மையானதா யிருக்கிறது. இந்த சபையானது, தொடர்ந்து அசைவதைக் காணவும், போதகரைக் காணவும், ஜனங்கள் மத்தியில் விசுவாசமற்ற ஒருவரு மில்லாமல், அவர்கள் எல்லாரும் அடைக்கலத்திற்குள் இருக்கின்றதைக் காண மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பிதாவே அதற்காக நாங்கள் உமக்கு எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம்! ஒரு சமயம் நான் கண்ட ஒரு சிறிய மானைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அது தன்னுடைய மறைவிடத்திலிருந்து வெளியே வந்தபோது, வேட்டை நாய்கள் அதைப் பின்தொடர்ந்தன. அப்பொழுது அது தன்னுடைய அருமையான ஜீவனுக்காக ஓடிக்கொண்டு இருந்தது. அது தன்னுடைய அடைக்கல இடத்தின் வேலியண்டை வந்ததும், அது அந்த வேலியை தாண்டியதும் மிகவும் சந்தோஷமடைந்தது. அது மூக்கின் சீறலோடு அப்படியே சுற்றித் திரும்பி, அந்த வேட்டை நாய்களை நோக்கிப் பார்த்தது. ஏனென்றால், அது பாதுகாவலாய் இருந்தது. அவைகளால் அந்த வேலியில் ஏற முடியாதிருந்தது. அவைகள் அந்தவிதமான உடலமைப்பைப் பெற்றிருக்கவில்லை. அவைகள் அந்த வேலியைத் தொட்டால் அவைகள் மின்சார அதிர்ச்சியினால் அப்படியே திருப்பி அடித்துவிடும். கர்த்தாவே, அந்தவிதமாகத்தான் நாங்கள் இருக்கிறோம். தேவனுடைய வார்த்தையின் வேலிக்குப் பின்னாக நாங்கள் செல்லும் போது பரிசுத்த ஆவியின் மின்சார வல்லமை, எங்களுடைய சத்துருவை விலக்கி நிற்க வைக்கிறது. அவன் அந்த வேலியை தாண்ட முடியாது. அவன் அந்தவிதமாய் உண்டாக்கப்பட்டிருக்கவில்லை. பிதாவே, நாங்கள் பாதுகாப்பிற்காக கிறிஸ்து இயேசுவுக்குள் குதிக்கும்படியாய், கர்த்தாவே நீர் எங்களை உண்டாக்கியிருக்கிறபடியால், நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் எப்பொழுதுமே பாதுகாப்பிற்குள் இருக்கிறதற் காக கர்த்தாவே நாங்கள் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறோம். இந்த சிறிய சபையையும், அதனுடைய போதகரையும், அதனுடைய அன்பார்ந்த ஒவ்வொருவரையும் நீர் இப்பொழுது ஆசீர்வதியுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு இங்கிருக்கின்ற யாவரையும் ஆசீர்வதியும். ஒவ்வொரு ஊழியக்காரரையும் ஆசீர்வதியும். 81எங்களுடைய விலையேறப்பெற்ற மற்றும் மிகவும் பெருந்தன்மை யான சகோதரன் நெவிலுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். இப்பொழுது நேற்றைய தினத்தைப்போன்று சாத்தான் காட்சியிலிருந்து அவரை இழுத்து அந்த மோட்டார் வாகனத்திற்குள் அவரை நசுக்க முயற்சிக்கலாம். மோசமான ஏதோ ஒன்றைச் செய்யும்படி முயற்சிக்க விரும்பினான். ஆனால் நீர் அங்கே காட்சியிலிருந்தீர். தேவனே, அன்றொரு நாள் அவன் துப்பாக்கி சுடும் இடத்திலே என்னை எடுத்துக்கொள்ள முயற்சித்தான். ஆனால் நீர் அங்கே காட்சியில் இருந்தீர். சகோதரன் வில்லார்ட் கிரேஸ் (Willard Crase) அந்தக் கம்பத்தில் மோதின போது அவரை எடுக்க முயற்சித்தான். ஆனால் நீர் அங்கே காட்சியில் இருந்தீர். உம்மை அறிந்திருப்பது அவ்வளவு நன்மையாய் இருக்கிறது. ஒரு சமயம் புலவன் கூறியது போன்று; இயேசுவில் நம்பிக்கையாய் இருப்பதும், சரியாக அவருடைய வார்த்தையின்படியாய் அவரை ஏற்றுக் கொள்வதும், உறுதியாக அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல் சார்ந்திருப்பதும், முற்றிலும் ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதை அறிந்திருப்பதும், அவ்வளவு இனிமையாய் உள்ளது. இதற்காக நாங்கள் உமக்கு எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம்! எங்களுடைய ஆத்துமாக்களை ஆசீர்வதியும். எங்களுடைய பாவங்களை மன்னியும். கர்த்தாவே, எங்கள் மத்தியில் வாசமாயிருக்கிற வியாதியஸ்தர் களை சுகப்படுத்துவீராக. இந்தப் பழைய அழிந்து போகின்ற சரீரங்கள் பலவீனமானவைகள் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அவைகள் வியாதியின் பாதிப்பின் கீழ் ஆடிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்கு நீர் எங்களை சுகமாய் காத்துக்கொள்ளும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவானவர் வர தாமதிக்குமே யானால் நாங்கள் சந்தோஷமாய் அநேக வருடங்கள் ஜீவிப்போமாக. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஒரே ஆவியினால் அங்கே ஞானஸ்நானம்பண்ணப்பட்டவர்களாய், எல்லோரும் பாதுகாப்பின் பேழைக்குள்ளாக சுவிசேஷத்தின் வெளிச்சம் பிரகாசிப்பதை நாங்கள் அங்கே காணமுடிந்தவர்களாய், ஒவ்வொரு வார்த்தைக்கும் “ஆமென்” என்று வலியுறுத்திக் கூறும்படியாக மேல் தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப் படுதலுக்காக நாங்கள் யாவரும் ஆயத்தமாக இருப்போமாக. இதை அருளும் கர்த்தாவே . இவர்களை ஆசீர்வதித்து இவர்களை காத்துக் கொள்ளும். கர்த்தாவே, இவர்களை உம்முடைய கிரீடத்திற்கான கற்களாக இயேசுவின் நாமத்தினால் நான் உரிமை கோருகிறேன். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனெனில் அவர் முதலில் என்னிடத்தில் அன்பு கூர்ந்தார், சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தினிலே. 82இப்பொழுது நாம் அறிந்துள்ளபடி, சில நேரத்தில் வார்த்தை வெட்டிக் கொண்டிருக்கிறது, ஆனால் நாம் அந்த விதத்தை விரும்புகிறோம். எபிரேயர் 4ம் அதிகாரம் “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது” என்று கூறியிருக்கிறது. அது இருபுறமும் கருக்கானதால் போகின்றதும், வருகின்றதுமான எல்லாக் காரியத்தையுமே வெட்டுகிறது. அது அதிக வல்லமையுள்ளதாயும், ஜீவனுள்ளதாயும் கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. “அது என்ன? வார்த்தை ! வார்த்தை !” புரிகின்றதா? இப்பொழுது நாம் ஒரு உண்மையாய் வெட்டுகின்ற, கடினமான செய்தியை பெற்றபிறகு நீங்கள் அதைக் கேட்டு மகிழ்ந்தீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர். - ஆசி.) ஆம் ஐயா. போராட்டம்! நீங்கள் அரணாக்கப்பட்டிருப்பதற்காக இன்றிரவு சந்தோஷப்படவில்லையா? [“ஆமென்.” அது சபைக்கு விசுவாசத்தையும், பெலனையும், நம்பிக்கையையும் படிப்படியாய் உருவாக்குகிறது, நான் கிறிஸ்து என்னும் உறுதியான பாறையின்மேல் நிற்கிறேன்; மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்து கொண்டிருக்கும் மணலாக உள்ளது. 83இப்பொழுது இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு நாம் அவரை ஆராதிப்போமாக. நீங்கள் ஆராதிப்பீர்களா? நம்முடைய கண்களை மூடி, நம்முடைய கரங்களை அப்படியே உயர்த்துவோமாக. அருமையான சகோதரியே, நான் நேசிக்கிறேன் என்ற பாடலின் சுருதியை எங்களுக்குக் கொடுங்கள். நீங்கள் அதை கொடுப்பீர்களா? நான் அதைத் தொடங்கவுள்ளேன். நான் அவரை நேசிக்கிறேன். இப்பொழுது உங்களை அப்படியே இலகுவாக்கிக் கொள்ளுங்கள் ஆராதியுங்கள்! ஏனென்றால் முதலில் அவர் என்னை நேசித்தார், சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தினிலே. இப்பொழுது நாம் ஒருவரையொருவர் நோக்கிப் பார்த்து, ஒருவர் இன்னொருவர் கரத்தை குலுக்குவோமாக. பாடுங்கள்; நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனெனில் அவர் முதலில் என்னிடம் அன்பு கூர்ந்தார், சம்பாதித்தார் என் இரட்சிப்பை,கல்வாரி மரத்தினிலே. 84கல்வாரி என்னவாயிருந்தது? அவருடைய காதேஸ்பர்னேயாவாக இருந்தது. அவர் என்ன செய்தார்? அங்கே மேலே சென்று, “மனிதன் மரணத்திற்குப் பின்னர் ஜீவிக்கிறான். நான் அதை உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்றார். அங்கே மேலே காதேஸ்பர்னேயாவுக்குச் சென்று, நம் எல்லாருடைய நியாயத்தீர்ப்பையும் எடுத்துக் கொண்டார். கல்வாரி! நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மரணமாகிய ஆற்றைக் கடந்து சென்றார். அந்த மூன்றாம் நாளன்று அவர் திரும்பி வந்தார். மலையிலிருந்து கல் கீழே உருட்டப்பட, அவர் ஜீவனுள்ளவராய் வெளியே நடந்தார். அவர்களில் சிலர், “அவர் ஒரு ஆவியாயிருக்கிறார்” என்றனர். “என்னைத் தொட்டுப் பாருங்கள், எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இருக்குமோ?” என்றார். “புசிக்கிறதற்கு உங்களிடத்தில் ஏதாகிலும் உண்டா ?” என்றார். அவர்கள், “நாங்கள் இங்கே தேன்கூட்டு துணிக்கையையும், நான் யூகிக்கிறேன், மீனையும் வைத்திருக்கிறோம்'' என்றனர். “அதில் ஒரு துண்டை நாம் புசிப்போமாக” என்றார். அவர்கள் அதை எடுத்துப் புசித்தனர். அவர் “நீங்கள் பாருங்கள், ஒரு ஆவி நான் புசிப்பது போல புசியாதே'' என்றார். அவர், ”இப்பொழுது நீங்கள் எருசலேம் மட்டுமாய் போய் சுவிசேஷத்தோடு அங்கிருந்து துவங்குங்கள். உங்களுடைய உயிர்த்தெழுதலின் முதற்பலன்களை நான் உங்களிடத்திற்கு திரும்ப அனுப்புவேன். ஏனென்றால் வார்த்தையிலுள்ள அவிசுவாசத்திலிருந்து நான் உங்களை தூக்கி எடுத்து, இதில் உங்களுக்கு விசுவாசமும், நம்பிக்கையும் உண்டாயிருக்கும்படி செய்வேன். நீங்கள் பாவத்திற்கும், எல்லா அவிசுவாசத்திற்கும் மேலாக இருப்பீர்கள்“. அந்தவிதமாக சிலர் முதலாம் ஜாமத்திலும் இரண்டாம் ஜாமத்திலும் விழுவார்கள்.'' என்றார். 85நினைவிருக்கிறதா? அவர்கள் ஏழாம் ஜாமம், அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் வரும்போது ஏழாம் ஜாமமாக இருக்கிறது. ஏழாம் ஜாமம் என்னவாக இருந்தது? ஏழாம் தூதனின் செய்தியாக இருக்கிறது. முதலாம் ஜாமத்தில் அவர்கள் உறக்கத்தில் விழுந்தார்கள். இரண்டாம் ஜாமம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் ஜாமம், அப்படியே தொடர்ந்து தியத்தீரா, எல்லாக் காலங்களினூடாகவும், லவோதிக்கேயா ஜாமம் மட்டுமாக உறங்கினர். ஆனால் ஏழாம் ஜாமத்தில், “இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள்” என்கிற சத்தம் வந்தது. என்ன? அவர்கள் விழித்தெழுந்து அவர்களுடைய தீவட்டியை ஆயத்தப்படுத்தினர். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன்,ஏனென்றால் உங்களுடைய ஒலிநாடா முடிவில் உள்ளதா? [சகோதரன் பிரான்ஹாம் யாரோ ஒருவரிடத்தில் ஒலிப்பதிவைக் குறித்துப் பேசுகிறார் - ஆசி.]முதலில் அவர் [யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடத்தில், “என்னிடத்தில் கிட்டத்தட்ட சற்று அதிக இடமே ஒலிநாடாவில் உள்ளது'' என்கிறார் - ஆசி.] ”மேலும் '' நீங்கள் இதை பதிவு செய்ய முடியுமா? உங்களிடத்தில் மிக அதிகமான இடமே உண்டா ? ஒலிநாடாவில் அவ்வளவு இடம் அதிகமாக உள்ளதா? உங்களுக்கு ஏறக்குறைய முடிந்து விட்டதா? ஒலிநாடா ஏறக்குறைய முடிந்து விட்டதா? நீங்கள் பதிவு செய்வீர்களா? கல்வாரி மரத்தினிலே. சகோதரி ரூத், (Ruth) நான் ஒலிநாடாவை நிறுத்தி விடுங்கள் என்று கூறவில்லை. நான் இந்த அழகான பாடல்களை பதிவு செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன் என்று நான் நினைத்தேன். நான் இவைகளை பதிவு செய்ய விரும்பினேன். நீங்கள் பாருங்கள். அந்தவிதமாய் அதைப் பாடுகையில் இந்தப் பாடல்களைப் பற்றிப்பிடித்து நான் பதிவு செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் அதை விரும்பவில்லையா? [சபையார், “ஆமென்” என்கின்றனர். - ஆசி.) நான் பழைய பெந்தேகோஸ்தேயினர் பாடும் முறையை நன்றாக விரும்புகிறவன் என்பது உங்களுக்குத் தெரியும். 86ஆனால் நான் எப்பொழுதும், “நான் அதிகமாய் பயிற்சிக்கப்பட்ட குரலை, அவர்கள் முகம் நீலமாய் பூத்துப்போகுமளவிற்கு அவர்களுடைய மூச்சைப் பிடித்துக்கொண்டு ஏதோ ஒருவிதமாய் 'கீச்சிட்டு பாடுவதை' நான் வெறுக்கிறேன்'' என்று கூறிவருவேன். ஆனால் அவர்கள் ........ எனவே அவர்கள் பாடிக் கொண்டு இருக்கவில்லை. அவர்கள் வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். புரிகின்றதா? ''ஆமென், ஆமென், ஆமென்' போன்று உங்களுடைய இருதயத்திலிருந்து வரும் அந்த பழமையான நல்ல பாடும் முறையை நான் விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் விரும்பவில்லையா? [சபையோர், “ஆமென்'' என்கின்றனர். - ஆசி] நான் அதை விரும்புகிறேன். பிதாவில் விசுவாசம், குமாரனில் விசுவாசம், பரிசுத்த ஆவியில் விசுவாசம், இம்மூன்றும் ஒன்றே; பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழித்தெழுவர்; யெகோவாவில் உள்ள விசுவாசம் எந்த காரியத்தையும் அசைக்கச் செய்கிறது 87ஆமென். அது இந்த பிசாசின் ராஜ்ஜியத்தை நசுங்கி விழச் செய்யும். “கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதன் மேல் பெரிய வெடிக்கும் வார்த்தைகளை அவைகளின் மேல் திருப்பும். அந்த தேவனுடைய அணுகுண்டு வார்த்தையானது அங்கே பறந்து சென்று அந்த சாத்தானின் ராஜ்ஜியத்தை தூள் தூளாக்குகிறது. ஆமென். ஆகையால் ”கிறிஸ்தவ போர் வீரர்களே, யுத்தத்திற்கு அணிவகுத்துச் செல்வது போன்று முன்னோக்கிச் செல்லுங்கள்“ அது உண்மை. சரி. ஒவ்வொருவரும் உங்கள் கரங்களை ஆகாயத்தில் உயர்த்தி, உங்களுடைய கண்கள் மூடப்பட்டிருக்க, உங்களுடைய உரத்த குரலில் இப்பொழுது நாம் மறுபடியுமாக நான் அவரை நேசிக்கிறேன் என்று பாடுவோமாக. சரி, அன்புள்ள சகோதரியே, சரி. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனெனில் அவர் முதலில் என்னிடம் அன்பு கூர்ந்தார், சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தினிலே. பரலோகப் பிதாவே, இப்பொழுது எங்களை அடைக்கலமாக உம்முடைய கரங்களுக்குள் ஒப்படைக்கிறோம். பொருத்தமானதாக நீர் காண்கிறதை எங்களுக்குச் செய்யும். நாங்கள் எங்கே நடத்தப் படுவோமோ அங்கே எங்களுடைய சமுதாயத்தில் மற்றவர்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வரும்படியாய், கர்த்தாவே, நீர் எங்களை உபயோகிப்பீர் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். தேவனே, இப்பொழுது நீர் எங்களை கண்காணித்து, நாங்கள் மீண்டுமாய் சந்தித்து, எங்களுடைய விலையேறப்பெற்ற கதிர்களை கொண்டு வருமட்டும் எங்களை பாதுகாத்தருளும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். இப்பொழுது இன்றிரவு ஐக்கியத்தின் நேரத்தை உடையவர்களாய் உங்கள் அனைவரோடும் இருப்பது ஒரு இன்பமாயிருக்கிறது. நான் இந்த பிரசங்க பீடத்தை மீண்டுமாக உங்களுடைய அன்பார்ந்த போதகராகிய சகோதரன் ஜூனியிடம் திரும்பவும் கொடுக்கப் போகிறேன். சரி, சகோதரன் ஜூனி.